search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொரப்பாடி அடுக்குமாடி குடியிருப்பு ஏலம்
    X

    தொரப்பாடி அடுக்குமாடி குடியிருப்பு ஏலம்

    • ஏராளமானோர் குவிந்ததால் தள்ளுமுள்ளு
    • போலீசார் பயனாளிகளை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்

    வேலூர்:

    தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வேலூர் கோட்டத்தின் மூலம் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் மத்திய, மாநில மற்றும் பயனாளிகளின் பங்களிப்புடன் 160 அடுக்குமாடி குடியிருப்புகள் வேலூர் தொரப்பாடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் கடந்த மாதம் 10-ந் தேதி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    இந்த திட்டத்தில் பயன்பெற 824 பயனாளிகள் கலெக்டரின் பரிந்துரையின் பேரில் ஒப்புதல் பெறப்பட்டது. பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைவருக்கும் குடியிருப்பு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் என்றும், மேலும் பயனாளிகளின் பங்களிப்பு தொகை ரூ.2 லட்சத்து 39 ஆயிரம்- வரைவோலையாக கடந்த மாதம் 28-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

    அதன்பேரில் 367 பேர் மட்டுமே குறிப்பிட்ட தேதிக்குள் வரைவோலை செலுத்தினர்.

    இந்த நிலையில் தொரப்பாடியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு குலுக்கள் முறையில் ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி இன்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் அரங்கில் நடந்தது.

    நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் லினோலியா, தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார மேம்பாட்டு நிர்வாக பொறியாளர் கீதா தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நிர்வாக பொறியாளர் கணேசன் தாசில்தார் செந்தில் பயிற்சி ஏ எஸ் பி பிரசன்னா குமார் உள்ளிட்டோர் முன்னிலையில் குலுக்கல் நடைபெற்றது.

    குலுக்களில் கலந்து கொள்ள ஏராளமானோர் திரண்டு வந்ததால் அவர்களுடைய டோக்கன் பெறுவதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் போலீசார் வரவழைக்கப்பட்டு பயனாளிகளை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×