என் மலர்tooltip icon

    வேலூர்

    • சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்தது
    • கேமராப்பதிவுகளை அதிகாரிகள் ஆய்வு

    வேலூர்:

    வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்து 10 நாட்களே ஆன ஆண் குழந்தையை சிகிச்சைக்கு அனுமதித்துவிட்டு தாய் தலைமறைவாகி விட்டார். மேலும் சிகிச்சை பெற்று வந்த குழந்தை நேற்று பரிதாபமாக உயிரிழந்தது.

    வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் நல பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 8-ந் தேதி ரத்தினகிரி பகுதியை சேர்ந்த சங்கீதா(25) என்பவர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு குழந்தைகளுடன் வந்தார்.

    அங்கு சங்கீதா பிறந்து 10 நாட்களே ஆன தனது ஆண் குழந்தைக்கு காய்ச்சல் என்று கூறி குழந்தைகள் நல பிரிவு மருத்துவரை அணுகினார்.

    டாக்டர்கள் குழந்தையை உள் நோயாளியாக அனுமதித்து, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை குழந்தை அபாய கட்டத்தில் உள்ளதாக டாக்டர்கள் தாய் சங்கீதாவிடம் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து அந்த குழந்தை நேற்றிரவு சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழிந்தது. அப்போது, இந்த தகவலை அந்த குழந்தையின் தாயிடம் டாக்டர்கள் தெரிவிக்க வந்துள்ளனர். ஆனால் சங்கீதா மருத்துவமனையில் இல்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவ ஊழியர்கள் அவரை அங்கு தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதனை அடுத்து மருத்துவ அதிகாரிகள் சங்கீதா அளித்த முகவரியை பதிவேடுகளில் ஆய்வு செய்தனர்.

    ஆனால் அந்த முகவரி போலியானது என தெரிந்தது. இதையடுத்து இறந்த குழந்தையை பிரேத பரிசோதனை கூடத்தில் வைத்துள்ளனர்.

    மேலும் மருத்துவமனை வளாகம் முழுவதும் உள்ள கண்கானிப்பு கேமராப்பதிவுகளை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசில் புகார் அளிக்க மருத்துவ மனை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த சம்பவம் மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நிலத்தை உழுது கொண்டிருந்த போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை மலை கிராமம் ஊராட்சிக்கு உட்பட்ட தேந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை மகன் கிருஷ்ணன் (33), இவர் டிராக்டர் டிரைவராக வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில், நேற்று மாலை தேந்தூர் பகுதியில் விவசாய நிலத்தை டிராக்டரில் உழுது கொண்டிருந்தார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கிருஷ்ணன் டிராக்டருக்கு அடியில் சிக்கிக்கொண்டார்.

    இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள், விபத்தில் சிக்கிய அவரை மீட்டனர். ஆனால் அவர் சிறிது நேரத்திலேயே பரிதாபமாக இறந்தார்

    இதுகுறித்து, தகவலறிந்த வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் பழனிமுத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேகம் மற்றும் தரம் 4 முதல் 5 மடங்கு அதிகரிக்கும்
    • பொது மேலாளர் தகவல்

    வேலூர்:

    மத்திய அரசின் 'ஆத்ம நிர்பார் பாரத்' முயற்சியின் கீழ், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட '4ஜி' தொழில்நுட்ப மொபைல் நெட்வொர்க் வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருவண்ணா மலை மாவட்டங்களில் '4ஜி' சேவை செயல்படுத்தப்பட உள்ளது.

    இதன் மூலம், இப்போதைய நெட்வொர்க்கின் டேட்டா வேகம் மற்றும் தரம், வரும் நாட்களில் 4 முதல் 5 மடங்கு அதிகரிக்கும்.

    இந்த தொழில்நுட் பத்தை செயல்படுத்தும் வகையில், மேற்குறிப் பிட்ட மாவட்டங்களில் 450 டவர்களும்,மேம்படுத் தப்பட்ட 4ஜி டவர்களாக மாற்றப்படுகிறது. இதன் மூலம், எல்லா டவர்களும் '5ஜி' திறன் கொண்டதாக இருக்கும். மேலும், மென்பொருள் மேம்படுத் துதல் மூலம் '5ஜி'க்கு எளிதாக மாற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    4ஜி சிம்கார்டுகள்

    மேலும், வேலுார், ராணிப்பேட்டை, திருப் பத்துார், திருவண்ணாமலை, மாவட்டங்களில் கூடுதலாக 28 இடங்களில் '4ஜி' டவர்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்த மாவட்டங்களில் பி.எஸ்.என்.எல் மொபைல் கவரேஜ் மேம்படும்.

    மேலும், வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இப்போது '2ஜி' மற்றும் '3ஜி' சிம் கார்டு வைத்திருக்கும் வாடிக்கை யாளர்கள், அருகிலுள்ள பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர் சேவை மையங்கள், பிரான்சைசி அலுவலகங்கள் மற்றும் மேளா நடக்கும் இடங்களில், கட்ட ணமின்றி இலவசமாக '4ஜி' சிம் கார்டுகளாக மாற்றிக் கொள்ளலாம்.

    மேலும், வாடிக்கையா ளர்கள் தங்கள் சிம் கார்டு களை '4ஜி' சிம் கார்டு களாக மாற்றிக்கொ ள்ள வசதியாக, வேலுர் வணிக பகுதியில் உள்ள பி.எஸ்.என்.எல் வாடிக்கை யாளர் சேவை மையங்கள் இந்த மாதம் எல்லா ஞாயிற்றுக் கிழமை களிலும் செயல்படும்.

    இவ்வாறு பிஎஸ்என்எல் முதன்மை பொது மேலாளர் ஸ்ரீகுமார் வெளியிட் டுள்ள செய்திக்கு றிப்பில் தெரிவிக்க ப்பட்டுள்ளது.

    • பசு தானாக பால் சுரக்கிறது. இதனை நிறுத்த முடியவில்லை.
    • மாட்டை விற்பனைக்காக கொண்டு வந்திருக்கும்போது மடியின் அளவை பொருத்து வியாபாரிகள் வாங்குவார்கள்.

    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மாட்டுச்சந்தை நடந்து வருகிறது.

    நேற்று மாட்டுச்சந்தைக்கு விவசாயி ஒருவர் பசுவுடன் வந்திருந்தார். அப்போது அந்த மாட்டின் மடியில் இருந்து பால் தானாக வழிந்தது. இதைப்பார்த்த உரிமையாளர் மடி காம்பின் நுனியில் பசை வைத்து ஒட்டினார்.

    பசு தானாக பால் சுரக்கிறது. இதனை நிறுத்த முடியவில்லை. இதனால் டெப் வடிவிலான பசையை வைத்து ஒட்டி வருவதாக அவர் கூறினார்.

    சில மாட்டுக்கு அதிகப்படியாக பால் சுரக்கும். அந்த பால் மடியில் இருந்து தானாக வெளியேறுவது இயல்பானது.

    ஆனால் அந்த மாட்டை விற்பனைக்காக கொண்டு வந்திருக்கும்போது மடியின் அளவை பொருத்து வியாபாரிகள் வாங்குவார்கள்.

    எனவே மடியின் அளவு பெரியதாக இருக்க வேண்டும் என்பதற்காக மடியில் இருந்து பால் வழிவதை தடுக்க பசை மூலம் ஒட்டியிருப்பார்கள்.

    இவ்வாறு செய்வது கொடுமையான விஷயம். இதை உரிமையாளர்கள் செய்யக்கூடாது.

    இவ்வாறு கூறினர்.

    • நாயும் கன்று குட்டி பால் குடிக்கும் வரை அமைதியாக இருந்தது.
    • நாயிடம் கன்றுக்குட்டி பால் குடிக்கும் காட்சியை அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் அதிசயத்துடன் பார்த்தனர்.

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் சித்தூர்கேட் பாஷா நகரில் வசிப்பவர் அஸ்கர் மாடு வியாபாரம் செய்து வருகிறார். இவரது வீட்டில் கன்றுக்குட்டி ஒன்று வளர்ந்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று கன்றுக்குட்டி வீட்டிற்கு வெளியே இருந்துள்ளது. அப்போது அங்கே நாய் தனது குட்டிகளுக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்தது.அதனை கண்ட கன்றுக்குட்டியும் அந்த நாயிடம் சென்று பால் குடித்தது.

    அந்த நாயும் கன்று குட்டி பால் குடிக்கும் வரை அமைதியாக இருந்தது நாயிடம் கன்றுக்குட்டி பால் குடிக்கும் காட்சியை அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் அதிசயத்துடன் பார்த்தனர்.

    • தீயணைப்பு துறையினர் தண்ணீரை ஊற்றி அணைத்தனர்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    ஆந்திர மாநிலம் அனந்தபூர் பகுதியை சேர்ந்தவர் தருண்குமார் (வயது 30). இவர் பெங்களூரில் உள்ள ஐ.டி. கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

    தருண்குமாரின் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அவருக்கு மருத்துவ சிகிச்சை பெற, தருண்குமார் தனது மனைவியை அழைத்துக் கொண்டு வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கு வந்தார்.

    மருத்துவமனையில் டாக்டர்கள், இதே ஊரில் தங்கி தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டுமென அறிவுறுத்தினர். அதன்படி தருண் குமார் சத்துவாச்சாரி சி.எம்.சி. காலனியில் வாடகை வீட்டில் தங்கி, மனைவிக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் இன்று மதியம் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக சத்துவாச்சாரியில் உள்ள கடைக்கு அருண்குமார் தனது காரில் சென்றார்.

    வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே வந்த போது, காரின் பின்புறத்தில் திடீரென புகை வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தருண்குமார் அலறியடித்துக்கொண்டு காரில் இருந்து வெளியே ஓடி வந்தார். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் கார் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இது குறித்த தகவல் அறிந்த சத்துவாச்சாரி போலீசார் மற்றும் வேலூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    தீயணைப்பு படை வீரர்கள் கொழுந்து விட்டு எரிந்த தீயை தண்ணீர் பீய்ச்சி அணைத்தனர். இருப்பினும் கார் முழுவதும் தீயில் எரிந்து கருகி போனது. இது குறித்து சத்துவாச்சாரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நண்பனை கத்தியால் குத்தியதால் நடவடிக்கை
    • ரூ.11 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது

    வேலூர்:

    வேலூர் தோட்டபாளையத்தை சேர்ந்தவர் சீனு என்ற சீனிவாசன் (35). ஆட்டோ டிரைவர். இவரது நண்பர் ஓல்டுடவுன் சேர்ந்த நெல்சன்பிரபு (45). கடந்த 2014-ம் ஆண்டு சீனிவாசன் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கினார்.

    ஜாமீன் கையெழுத்து

    அதற்கு நெல்சன்பிரபு ஜாமீன் கையெழுத்து போட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் கடன்தொகையை சீனிவாசன் சரியாக செலுத்தாததால் நிதி நிறுவனத்தினர் நெல்சன்பிரபுவிடம் இதுகுறித்து கேட்டுள்ளனர். அவர், சீனிவாசனிடம் பணத்தை முறையாக கொடுக்குமாறு தெரிவித்துள்ளார்.

    இந்தநிலையில் 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் சீனிவாசன், நெல்சன்பிரபுவை கத்தியால் குத்தினார்.

    இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

    இந்த வழக்கில் சீனிவாசனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார். சீனிவாசன் ரவுடிகள் பட்டியலில் உள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • பஸ் மீது நேருக்கு நேர் மோதியது
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் சங்கரன்பாளைத்தை சேர்ந்தவர் மேகநாதன். இவரது மகன் கோகுல் (வயது 21). இவர் நேற்று தொரப்பாடியில் இருந்து வேலூர் நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். காட்பாடியில் இருந்து சித்தேரி நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.

    வேலூர் தொரப்பாடி அருகே பஸ் - மோட்டார்சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் கோகுல் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வேலூர் பாகாயம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கான அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அமலுவிஜயன் எம்.எல்.ஏ. வழங்கினார்
    • ஏராளமானோர் பலர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் நடுப்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கு விலையில்லா புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எம்.எஸ்.அமர்நாத் தலைமை தாங்கினார். நகரமன்ற உறுப்பினர் ஜாவித்அகமது, பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் பிபாபு, ஆர். கோபாலகிருஷ்ணன், கே.தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ஜி. அகிலா அனைவரையும் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக அமலுவிஜயன் எம்.எல்.ஏ., நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு விலையில்லா புத்தகங்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியைகள் எஸ்.தீபா, டி.கே.சரவண ஸ்ரீபிரியா உள்பட ஆசிரியர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அனுமதியின்றி பேனர் வைத்ததால் நடவடிக்கை
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சியினர் நேற்று முன்தினம் பள்ளிகொண்டா வருகை தந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை வரவேற்றுபல இடங்களில் பேனர்களை வைத்தனர்.

    அனுமதியின்றி பேனர்

    அந்த பேனர்களை உரிய அனுமதின்றி வைத்ததாக கூறி நகராட்சி ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினார்கள்.

    அதனை தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியினர் நகராட்சி ஊழியர்களிடம் பேனர்களை அகற்றியது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட பேனர்களை திரும்ப பெற்று அதை நகரின் முக்கிய இடங்களில் கட்டினார்கள். இந்த சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    25 பேர் மீது வழக்கு பதிவு

    இந்நிலையில் அனுமதின்றி பேனர்கள் வைத்ததாக குடியாத்தம் டவுன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளித்தார்.

    அவர் அளித்த புகாரின் பேரில் குடியாத்தம் பழைய பஸ் நிலையம் அருகே உரிய அனுமதின்றி பேனர் வைத்ததாக பாரதிய ஜனதா கட்சியின் வேலூர் மாவட்ட செயலாளர் லோகேஷ்குமார் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    குடியாத்தம் பிச்சனூர் அரசமரதெரு சந்திப்பு பகுதியில் குடியாத்தம் நகர தலைவர் சாய்ஆனந்தன் பேனர் வைத்ததாக அவர் நகர இளைஞரணி தலைவர் சுகாஷ் உள்பட 25 பாரதிய ஜனதா கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    • இயற்கையை ரசிக்கலாம்
    • கலெக்டர் ஆய்வு

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அருகே அப்புக்கல் கிராமத்தில் உள்ள தொங்கும் பாறைகளை சுற்றுலா தலமாக மாற்ற கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று ஆய்வு செய்தார்.

    தொங்கும் பாறைகள்

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த அப்புக்கல் மலையில் இயற்கையாக உருவான தொங்கும் பாறை உள்ளது.

    இந்த தொங்கும் பாறை ஒன்றின் மேல் ஒன்றாக அடக்கி வைக்கப்பட்டுள்ளது போல் காட்சியளிக்கிறது.

    ஒரு பாறை மற்ற பாறைகளை தாங்கி நிற்கும் ரம்மியமான காட்சி அனைவரையும் கவர்ந்து இழுக்கிறது.

    தொங்கும் பாறை கூர்மையான விளிம்பு கொண்டதாகவும், ஒரு பீடம் போலவும் அமைந்துள்ளது. இந்த தொங்கும் பாறையில் 2 ஆயிரத்து 100 ஆண்டுகளுக்கு முன்பு கற்கால ஆதி மனிதர்கள் வசித்துள்ளனர்.

    இதனை தொல்லியல் மற்றும் புவியியல் துறையினர் கண்டுபி டித்துள்ளனர். 1977 முதல் 1979-ம் ஆண்டுகளில் தொல்லியல் துறை ஆராய்ச்சி குழுவினர் அகழ்வாராய்ச்சி நடத்தி, சிகப்பு மற்றும் கருப்பு களிமண் பானைகள், சாம்பல் மலைகளின் எச்சங்களை கண்டுபிடித்து சேகரித்தனர்.

    மேலும் வேலூர் அருங்காட்சியகத்தினர் இந்த தொங்கும் பாறைகளுக்கு இடையில் இருந்த செப்பு வாள்கள் உள்ளிட்டவர்களை கண்டறிந்து அவற்றை வேலூர் அருங்காட்சி யகத்தில் வைத்துள்ளனர்.

    கலெக்டர் ஆய்வு

    வரலாற்றில் இடம் பிடித்துள்ள அப்புக்கல் மலை தொங்கும் பாறையை சுற்றுலா தலமாக உருவாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொல்லியல் துறை அதிகாரி களுடன், தொங்கும் பாறைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் சுற்றுலாத்த லமாக மாற்றுவது குறித்து அதிகாரி களுடன் ஆலோ சனை மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது அணைக்கட்டு தாசில்தார் வேண்டா, வட்டார வளர்ச்சி அலுவலர் சுதாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கூகுள் பே-ல் பணம் இல்லாததால் ஆத்திரம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், கணியம்பாடி அடுத்த துத்திக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 29), பெயிண்டர்.

    இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் அவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. மருந்து வாங்குவதற்காக அடுக்கம்பாறைக்கு தனது பைக்கில் வந்தார். அடுக்கம்பாறை பஸ் நிறுத்தம் அருகே வந்த போது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் சக்திவேலை வழி மடக்கினர். கத்தியை காட்டி, சக்திவேலிடம் இருந்த ரூ.500-ஐ வழிப்பறி செய்துள்ளனர்.

    மேலும் செல்போனில் 'கூகுள் பே' வில் எவ்வளவு பணம் வைத்துள்ளாய் எனக் கேட்டு மிரட்டியதுடன், அவற்றை தங்கள் செல்போன்களுக்கு பரிமாற்றம் செய்யும்படி கேட்டனர்.

    அவர் எனது போனில் பணம் இல்லை என கூறினர். ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் கையில் வைத்திருந்த கத்தியால் சக்திவேல் கை மற்றும் தொடை மீது வெட்டினர்.

    வலி தாங்க முடியாமல் அவர் கூச்சலிட்டார். மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இதனையஅடுத்து அங்கிருந்தவர்கள் சக்திவேலை மீட்டு, சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×