என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூரில் ரவுடிக்கு 3 ஆண்டுகள் ஜெயில்
- நண்பனை கத்தியால் குத்தியதால் நடவடிக்கை
- ரூ.11 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது
வேலூர்:
வேலூர் தோட்டபாளையத்தை சேர்ந்தவர் சீனு என்ற சீனிவாசன் (35). ஆட்டோ டிரைவர். இவரது நண்பர் ஓல்டுடவுன் சேர்ந்த நெல்சன்பிரபு (45). கடந்த 2014-ம் ஆண்டு சீனிவாசன் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கினார்.
ஜாமீன் கையெழுத்து
அதற்கு நெல்சன்பிரபு ஜாமீன் கையெழுத்து போட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் கடன்தொகையை சீனிவாசன் சரியாக செலுத்தாததால் நிதி நிறுவனத்தினர் நெல்சன்பிரபுவிடம் இதுகுறித்து கேட்டுள்ளனர். அவர், சீனிவாசனிடம் பணத்தை முறையாக கொடுக்குமாறு தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் சீனிவாசன், நெல்சன்பிரபுவை கத்தியால் குத்தினார்.
இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் சீனிவாசனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார். சீனிவாசன் ரவுடிகள் பட்டியலில் உள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.






