என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே திடீரென தீப்பற்றி எரிந்த கார்
    X

    வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே திடீரேன தீப்பற்றி ஏறிந்த காரை தீயணைப்பு துறையினர் அணைக்கும் காட்சி.

    வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே திடீரென தீப்பற்றி எரிந்த கார்

    • தீயணைப்பு துறையினர் தண்ணீரை ஊற்றி அணைத்தனர்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    ஆந்திர மாநிலம் அனந்தபூர் பகுதியை சேர்ந்தவர் தருண்குமார் (வயது 30). இவர் பெங்களூரில் உள்ள ஐ.டி. கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

    தருண்குமாரின் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அவருக்கு மருத்துவ சிகிச்சை பெற, தருண்குமார் தனது மனைவியை அழைத்துக் கொண்டு வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கு வந்தார்.

    மருத்துவமனையில் டாக்டர்கள், இதே ஊரில் தங்கி தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டுமென அறிவுறுத்தினர். அதன்படி தருண் குமார் சத்துவாச்சாரி சி.எம்.சி. காலனியில் வாடகை வீட்டில் தங்கி, மனைவிக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் இன்று மதியம் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக சத்துவாச்சாரியில் உள்ள கடைக்கு அருண்குமார் தனது காரில் சென்றார்.

    வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே வந்த போது, காரின் பின்புறத்தில் திடீரென புகை வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தருண்குமார் அலறியடித்துக்கொண்டு காரில் இருந்து வெளியே ஓடி வந்தார். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் கார் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இது குறித்த தகவல் அறிந்த சத்துவாச்சாரி போலீசார் மற்றும் வேலூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    தீயணைப்பு படை வீரர்கள் கொழுந்து விட்டு எரிந்த தீயை தண்ணீர் பீய்ச்சி அணைத்தனர். இருப்பினும் கார் முழுவதும் தீயில் எரிந்து கருகி போனது. இது குறித்து சத்துவாச்சாரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×