என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கற்கால மனிதர்கள் வாழ்ந்த தொங்குபாறை
    X

    தொங்கு பாறையில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்த காட்சி.

    கற்கால மனிதர்கள் வாழ்ந்த தொங்குபாறை

    • இயற்கையை ரசிக்கலாம்
    • கலெக்டர் ஆய்வு

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அருகே அப்புக்கல் கிராமத்தில் உள்ள தொங்கும் பாறைகளை சுற்றுலா தலமாக மாற்ற கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று ஆய்வு செய்தார்.

    தொங்கும் பாறைகள்

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த அப்புக்கல் மலையில் இயற்கையாக உருவான தொங்கும் பாறை உள்ளது.

    இந்த தொங்கும் பாறை ஒன்றின் மேல் ஒன்றாக அடக்கி வைக்கப்பட்டுள்ளது போல் காட்சியளிக்கிறது.

    ஒரு பாறை மற்ற பாறைகளை தாங்கி நிற்கும் ரம்மியமான காட்சி அனைவரையும் கவர்ந்து இழுக்கிறது.

    தொங்கும் பாறை கூர்மையான விளிம்பு கொண்டதாகவும், ஒரு பீடம் போலவும் அமைந்துள்ளது. இந்த தொங்கும் பாறையில் 2 ஆயிரத்து 100 ஆண்டுகளுக்கு முன்பு கற்கால ஆதி மனிதர்கள் வசித்துள்ளனர்.

    இதனை தொல்லியல் மற்றும் புவியியல் துறையினர் கண்டுபி டித்துள்ளனர். 1977 முதல் 1979-ம் ஆண்டுகளில் தொல்லியல் துறை ஆராய்ச்சி குழுவினர் அகழ்வாராய்ச்சி நடத்தி, சிகப்பு மற்றும் கருப்பு களிமண் பானைகள், சாம்பல் மலைகளின் எச்சங்களை கண்டுபிடித்து சேகரித்தனர்.

    மேலும் வேலூர் அருங்காட்சியகத்தினர் இந்த தொங்கும் பாறைகளுக்கு இடையில் இருந்த செப்பு வாள்கள் உள்ளிட்டவர்களை கண்டறிந்து அவற்றை வேலூர் அருங்காட்சி யகத்தில் வைத்துள்ளனர்.

    கலெக்டர் ஆய்வு

    வரலாற்றில் இடம் பிடித்துள்ள அப்புக்கல் மலை தொங்கும் பாறையை சுற்றுலா தலமாக உருவாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொல்லியல் துறை அதிகாரி களுடன், தொங்கும் பாறைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் சுற்றுலாத்த லமாக மாற்றுவது குறித்து அதிகாரி களுடன் ஆலோ சனை மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது அணைக்கட்டு தாசில்தார் வேண்டா, வட்டார வளர்ச்சி அலுவலர் சுதாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×