என் மலர்
வேலூர்
- இளம்பெண் காதலை கைவிட்டதால் வடிவரசன் ஆத்திரம் அடைந்தார்.
- இளம்பெண்ணுடன் ஜோடியாக இருப்பது போல் இணைக்கப்பட்ட படத்தை வடிவரசன் போஸ்டர் அடித்தார்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள மேல்மாயில் செம்மண் குட்டையை சேர்ந்தவர் வடிவரசன் (வயது 26).
இவரும் அதே பகுதியை சேர்ந்த இவரது உறவினர் பெண்ணும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இவர்களது காதலுக்கு பெண்ணின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இளம்பெண்ணுக்கு குடியாத்தத்தை சேர்ந்த ராணுவ வீரருடன் சில நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) இவர்களுக்கு திருமணம் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை பெண் வீட்டார் செய்திருந்தனர்.
இந்த நிலையில் இளம்பெண் காதலை கைவிட்டதால் வடிவரசன் ஆத்திரம் அடைந்தார். இளம்பெண்ணுடன் ஜோடியாக இருப்பது போல் இணைக்கப்பட்ட படத்தை வடிவரசன் போஸ்டர் அடித்தார்.
குடியாத்தம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று போஸ்டரை ஒட்டினார்.
அந்த போஸ்டரில் வாழ்த்துக்கள் நண்பா என அவரது நண்பர்கள் திருமணம் வாழ்த்து தெரிவிப்பது போல் இடம்பெற்று இருந்தது.
இதைப் பார்த்த இளம்பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஒட்டப்பட்டிருந்த வாழ்த்து போஸ்டர்களை கிழித்தனர்.
மேலும் நிச்சயம் செய்யப்பட்ட ராணுவ வீரருடன் தங்களது மகளுக்கு திருமணம் நடத்த பாதுகாப்பு வழங்க கோரி பரதராமி போலீசில் பெற்றோர் புகார் செய்தனர்.
இது குறித்து டி.எஸ்.பி. ராமமூர்த்தி உத்தரவின் பேரில் பரதராமி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இது சம்பந்தமாக போலீசார் வடிவரசனை பிடித்து விசாரித்தனர்.
இதில் காதலியின் திருமணத்தை நிறுத்த போஸ்டர் ஒட்டியது தெரியவந்தது. இதனையடுத்து வடிவரசனை போலீசார் கைது செய்தனர்.
காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடக்க இருந்த நிலையில் வாலிபர் தனக்குத்தானே வாழ்த்து போஸ்டர் அடித்து ஒட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இன்று இரண்டாம், 3-ம் கால பூஜைகள் நடைபெறுகிறது.
- நாளை இரவு உற்சவர் வீதி உலா நடை பெறுகிறது.
வேலூர் :
வேலூரில் வரலாற்று புகழ்பெற்ற கோட்டையில் உள்ள அகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத ஜலகண்டேஸ்வரர் கோவிலில் 4-வது மகா கும்பாபிஷேக விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி ஆயத்த பணிகள், ராஜ கோபுரம், 2-வது கோபுரம், வலம்புரி விநாயகர், வெங்கடேச பெருமாள் சன்னதி, வள்ளி தேவ சேனா சமேத சுப்பிரமணியர் சன்னதி, அகிலாண்டேஸ்வரி அம்மன் சன்னதி, மூலவர் ஜலகண்டேஸ்வரர் சன்னதி, சிவகாம சுந்தரி சமேத நடராஜர் சன்னதிகளில் பாலாலயம் செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் நடந்தது. பாலாலயம் செய்த பின்னர் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்க படவில்லை.
கோபுர கலசங்கள் கழற்றப்பட்டு புதுப்பிக்கப்பட்டன. அனைத்து மூலவர் சன்னதிகளில் முகவர்களுக்கு தங்க வெள்ளி கவசங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு மெட்டல் டிடெக்டர் கொண்டு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவில் வெளிபிரகார வளாகத்தில் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் கும்பாபிஷேகத்திற்கான யாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 21-ந் தேதி மகா கணபதி பூஜை, கோ பூஜை, அஸ்வ பூஜை, கஜ பூஜை மற்றும் மகா கணபதி ஹோமம் நடை பெற்றது. 22-ந் ேததி நவக்கிரக பூஜை, சுதர்சன பூஜை, சாந்தி ஹோமம் நடந்தது.
நேற்று ராஜகோபுரத்திற்கு கலசங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது. முன்னதாக காலை ராஜகோபுர கலசத்துக்கு கோவில் நிர்வாகிகள் தலைமையில் பூஜை செய்யப்பட்டது. இரவு அங்குரார்ப்பணம், கும்ப அலங்காரம், மற்றும் முதல் கால பூஜைகள் நடந்தன.
இன்று (சனிக்கிழமை) காலை இரண்டாம் கால பூஜை மற்றும் மாலையில் 3-ம் கால பூஜைகள் நடைபெறுகிறது.
நாளை அதிகாலை நான்காம் கால பூஜையும், காலை 9.30 மணிக்கு மேல் 11 மணிக்குள் புதிய தங்க தேர், ராஜ கோபுரம், கோவில் விமானங்களுக்கு ஒரே நேரத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
தொடர்ந்து மாலை 4 மணிக்கு மகா அபிஷேகம், 6 மணிக்கு திருக்கல்யாணம், இரவு 8 மணிக்கு உற்சவர் வீதி உலா நடை பெறுகிறது.
விழாவில் காஞ்சி காமகோடி பீடம் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், மகாதேவமலை மகானந்த சித்தர் சுவாமிகள், வேலூர் ஸ்ரீபுரம் சக்தி அம்மா, வேலூர் வனதுர்கா பீடம் துர்கா பிரசாத் சுவாமிகள், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கங்கப்பா ஆகியோர் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடக்கிறது.
கும்பாபிஷேக ஏற்பாடுகளை ஜலகண்டேஸ்வரர் கோவில் தர்மஸ்தாபன தலைவர் சச்சிதானந்த சுவாமிகள், செயலாளர் சுரேஷ்குமார், இணை செயலாளர் ராதாகிருஷ்ணன், உப தலைவர்கள் ெவங்கடசுப்பு, தர்மலிங்கம், அச்சுதானந்தம், பொருளாளர் சண்முகம் மற்றும் உறுப்பினர்கள், நிர்வாகிகள், கோவில் சிவாச்சாரியார்கள், குருக்கள் செய்து வருகின்றனர்.
- பனை மரங்கள் வெட்டுவதால் விவாசாயிகள் வேதனை
- வேலூர் கலெக்டர் அதிரடி உத்தரவு
வேலூர்
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் இன்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடந்தது.
இதில் மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகள், அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர். 100 நாள் பணியாளர்களை விவசாய பணிக்கு ஈடுபடுத்த வேண்டும்.
பேர்ணாம்பட் ஏரியில் கலக்கும் நகராட்சி கழிவுநீர், தோல் தொழிற்சாலை கழிவுநீரை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வனவிலங்கு மனித மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பேர்ணாம்பட்டில் விவசாயி மீது வனத்துறை போட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.
பனை மரங்கள்
பொது இடத்தில் உள்ள பனைமரங்களை சில காரணங்களுக்காக பொதுப்பணித்துறை அகற்றி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். பனைமரம் வளர 30 ஆண்டுகள் வரை ஆகும். அவற்றை வளர்க்க அரசே பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
இனி மாவட்டத்தில் பனை மரங்களை அகற்ற வேண்டும் என்றால் கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டும் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார்.
குழு அமைத்து உரம், மருந்து, விதை வைப்பதை ஆய்வு செய்ய வேண்டும். அதிகமான விலைக்கு விற்பது தெரியவந்தால் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
- வருகிற 4-ந் தேதி நடக்கிறது
- பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு
வேலூர்:
வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
வேலூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் 11, 12 -ம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவர்களிடையே கவிதை கட்டுரை போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
வருகிற 4-ந் தேதி வேலூர், அரசு முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளன.
காலை 9.30 மணிக்கு 11, 12-ம் வகுப்பில் பயிலும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும், பிற்பகல் 1.30 மணிக்கு அனைத்து கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும் தனித்தனியே கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளன.
இப்போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியே முதல் பரிசுத்தொகையாக ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசுத்தொகையாக ரூ.7 ஆயிரம், 3-ம் பரிசுத் தொகையாக ரூ.5 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.
ஒவ்வொரு போட்டியிலும் முதல் பரிசு பெறும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள வேலூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநரால் பரிந்துரைக்கப்படுவர்.
வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளி கல்லூரி மாணவர்கள் இதில் பங்கேற்கலாம்.
ஒரு பள்ளி கல்லூரியிலிருந்து ஒரு போட்டிக்கு 2 பேர் வீதம் 3 போட்டிகளுக்கும் 6 மாணவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். போட்டிகளுக்கான தலைப்புகள் போட்டிகள் தொடங்கும் முன்பு நடுவர்கள் முன்னிலையில் அறிவிக்கப்படும்.
மாவட்ட அளவிலான இப்போட்டிகளில் கலந்துகொள்ள விருப்பமுள்ள பள்ளி மாணவர்கள் பங்கேற்புப் படிவத்தைப் பூர்த்தி செய்து அந்தந்தப் பள்ளித் தலைமையாசிரியர் பரிந்துரையுடனும், கல்லூரி மாணவர்கள் அவர்கள் பயிலும் கல்லூரி முதல்வர் பரிந்துரையுடனும் வேலூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநரிடம் போட்டிகள் நடைபெறும் நாளன்று நேரில் அளித்தல் வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநரை நேரிலோ, தொலைபேசி வாயிலாகவோ (0416 - 2256166,99522 80798) தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ரூ.14,000 வாடகையாக செலுத்தப்பட்டு வருகிறது
- வணிகர்கள் வலியுறுத்தல்
வேலூர், ஜூன்.23-
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வேலூர் மாவட்ட கிளை சார்பில்அவசர ஆலோசனை கூட்டம் வேலூர் சண்முகடியார் சங்க கட்டிடத்தில் நேற்று நடைபெற்றது.
வேலூர் மாவட்ட தலைவர் ஆர்.பி.ஞானவேலு தலைமை தாங்கினார். மாநகராட்சி கடை வணிகர் சங்கத் தலைவர் ஆர் பிச்சாண்டி வரவேற்றார்.
பின்னர் அவர்கள் கூறியதாவது:- வேலூர் மாநகராட்சி 4 மண்டலங்கள் சார்பில் மாநகராட்சி கடைகளுக்கு 12 மாத வாடகையை முன்பணமாக செலுத்த அறிவுறு த்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே அரசாணை எண்-92 இன் படி 2016 ஆம் ஆண்டு சந்தை மதிப்பு படி வேலூர் மாநகராட்சி கடைகளுக்கு வாடகை உயர்த்தப்பட்டது.
அதனடிப்படையில், 2016- ஆம் ஆண்டு ரூ.2,400 வாடகை உள்ள ஒரு கடைக்கு ரூ.9,000 என வாடகை நிர்ணயம் செய்யப்பட் டதுடன், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை 15 சதவீத உயர்வு அடிப் படையில் தற்போது ஜிஎஸ்டி யுடன் சேர்த்து அதே கடைக ளுக்கு ரூ.14,000 வாடகையாக செலுத்தப்பட்டு வருகிறது. இந்த வாடகை உயர்வால் வணிகர் களால் தொடர்ந்து வர்த்தகம் செய்ய முடியாமல் பல கடைகள் மூடப்பட்டும், சீல் வைக்கப்பட் டும் உள்ளன.
இந்த நிலையில், தமிழகத்தில் எங்கும் இல்லாத வகையில் புதிய சட்டமாக மாநகராட் சிக் கடைகளுக்கு 12 மாத வாட கையை முன் பணமாக செலுத் திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வணிகர்கள் மத்தி யில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி யுள்ளது.
வேலூரிலுள்ள பல மாநகராட் சிக் கடைகளை சுமார் 40, 50 ஆண்டுகள் நடத்தப்பட்டு வருகின்றன. தந்தைக்கு பிறகு மகன் என கடை களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், அந்த கடைகளுக்கு 40 ஆண்டுகளுக்கு முன்பு 12 மாத முன்பணம் செலுத்தப்பட்டிருந் தால், அதன் ரசீதை கொண்டு வரவும் அல்லது 12 மாத வாட கையை முன் பணமாக செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப் படுவது எந்த வகையிலும் நியாயம் இல்லை.
பன்னாட்டு நிறுவனங்க ளால் சில்லறை வணிகம் அழிந்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு வணி கர்களைப் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே, மாநக ராட்சி நிர்வாகம் விடுத்துள்ள இந்த அறிவிப்பை உடனே திரும்பப் பெற வேண்டும் அவர்கள் கூறினர். பின்னர் இது தொடர்பாக கலெக்டரிடம் மனு அளித்தனர்.
இந்தக் கோரிக்கை தொடர்பாக முதல்வர், உள்ளாட்சித் துறை அமைச்சர், நகராட்சிகளின் நிர் வாக ஆணையர் ஆகியோருக்கு வரும் 27-ந் தேதி வேலூர் தலைமை அஞ்சல் நிலையத்திலி ருந்து தபால்களை அனுப்ப உள்ளதாக வணிகர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
- அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மலைவாழ் மக்கள் அவதி
- நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுக்காவில் மொத்தம் 51 ஊராட்சிகள் உள்ளது. இதில் பீஞ்சமந்தை, ஜார்தான்கொல்லை, பலாம்பட்டு ஆகிய 3 ஊராட்சிகள் மலை ஊராட்சிகள் ஆகும்.
இந்த மலை ஊராட்சிகளில் சுமார் மட்டும் சுமார் 94 மலை குக் கிராமங்கள் உள்ளது. வேலூர் அருகே உள்ள ஊசூர் அருகில் தொடங்கும் இந்த ஊராட்சிகளின் எல்லை, சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் ஒடுக்கத்தூர் அருகே உள்ள மேல் அரசம்பட்டு வரை உள்ள வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த 3 மலை ஊராட்சிகளில் சுமார் 36 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இதில் பீஞ்சமந்தை ஊராட்சியில் மட்டும் சுமார் 68 குக் கிராமங்கள் உள்ளது.
இந்த ஊராட்சியின் எல்லை பகுதி வரதலம்பட்டு அருகே உள்ள அல்லேரியில் தொடங்கி மேல் அரசம்பட்டு கிராமம் வரை உள்ளது. இந்த ஊராட்சியின் உள் பரப்பளவு சுமார் 10 கிலோமீட்டர் தூரம் வரை உள்ளதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அணைக்கட்டு தொகுதியில் உள்ள ஊராட்சிகளில் மட்டுமன்றி வேலூர் மாவட்டத்திலேயே, இந்த பீஞ்சமந்தை ஊராட்சியே பெரிய ஊராட்சியாக அமைந்துள்ளது.
இந்த ஊராட்சியில் மட்டும் சுமார் 20 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இவர்கள் வசிக்கும் மலைப் பகுதிகளுக்கு சாலை வசதி இல்லாததால், இவர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள், அடிப்படை வசதிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் சரிவர சென்றடைவதில்லை என அந்த பகுதி மக்கள் குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர்.
அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மலைவாழ் மக்கள் அவதிப்படும் நிலையில், ரேசன் பொருட்கள் வாங்குவதிலும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
கத்தியப்பட்டு மற்றும் முள்ளுவாடி கிராம மக்கள் ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பீஞ்சமந்தைக்கோ அல்லது 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒடுக்கத்தூர் கிராமத்திற்கு தான் வர வேண்டும். ரேசன் கடைகளில் வாங்கிய பொருட்களை சாலை வசதி இல்லாத குண்டும், குழியுமான சாலையில், காலில் செருப்பு கூட போடாமல் தலை மீது மூட்டைகளை சுமந்து நடைபயணமாக செல்வது அணைவரும் அறிந்த உன்மை.
இதேபோல் பல மலைக்குக் கிராமங்களிலும் இதே அவல நிலைதான் நீடித்து வருகிறது. எனவே மலை வாழ் மக்களின் நலன் கருதி பீஞ்சமந்தை ஊராட்சியை 3 ஆக பிரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
- 1000-த்திற்கும் மேற்பட்ட அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது
- சுற்றுலா பயணிகள் வரவேற்பு
வேலூர்:
வேலூரின் மையத்தில் 137 ஏக்கர் பரப்பளவில் வேலூர் கோட்டை அமைந்துள்ளது.இந்த கோட்டையில் 53 பிரிட்டிஷ் கால கட்டிடங்கள் உள்ளன.இங்கு மைசூர் மன்னர் ஹைதர் அலி மற்றும் அவர்கள் மகன் திப்பு சுல்தான் ஆகியோரின் குடும்பங்கள் தங்களின் கடைசி ஆண்டுகளில் கைதிகளாக இருந்தனர்
மேலும் இங்குள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில் மிகச்சிறந்த ஆன்மீக தலமாக விளங்குகிறது.
பல்வேறு சிறப்புமிக்க இந்த கோட்டை தற்போது தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இங்கு உள்ளூர் மட்டுமல்லாது வெளியூர் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருகின்றனர்.
ஏற்கனவே ஸ்மார்ட் சிட்டி மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.9 கோடி செலவில் பழமை மாறாமல் கோட்டையை அழகுபடுத்தும் பணி மற்றும் கோட்டையை சுற்றி 1000-த்திற்கும் மேற்பட்ட அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு தகுந்த வகையில் இங்கு ஓட்டல்கள் இல்லை.மேலும் வட மாநில சுற்றுலா பயணிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
குளிர் பானங்கள், டீ, காபி மற்றும் நொறுக்கு தீனிகள் விற்பதற்கு என்று மிகக் குறைந்த கடைகளே இங்கு அமைந்துள்ளன.
இந்த நிலையில் தொல்லியல் துறை சார்பில் ரூ.3 கோடி செலவில்
ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு அருகில் ஓட்டல் கட்டப்பட்டு வருகிறது.
இது குறித்து அதிகாரரிகள் கூறியதாவது:
இதன் 90 சதவீத பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது.
தற்போது இந்த கட்டிடத்தில் மின்சாரப் பணிகள் மட்டும் நிலுவையில் உள்ளது. இந்த பணிகள் முடிந்தவுடன்புதிய ஓட்டல் திறப்பதற்கு டெண்டர் விடப்படும் என கூறினர்.
தற்போது புதிதாக கட்டப்படும் ஓட்டலில் சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாது கோவிலுக்கு வரும் பக்தர்களும் பயன்படுத்தி கொள்ள முடியும். விசாலமாக அமைக்கப்பட்டுள்ள இந்த ஓட்டலில் ஒரே நேரத்தில் 50 - 60 பேர் வரை சாப்பிடலாம். இங்கு வட இந்திய, தென்னிந்திய உணவு வகைகள் மட்டுமல்லாது குளிர்பானங்கள்,ஐஸ்கிரீம்,மற்றும் இதர உணவு பொருட்கள் மலிவான விலையில் தரமாக விற்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- தலைமை ஆசிரியரிடம் கடும் வாக்குவாதம்
- காரணம் இல்லாமல் மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்கியதாக புகார்
வேலூர்:
வேலூர் கொணவட்டம் அரசு மேல்நிலை ப்பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இந்த நிலையில் நேற்று, பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவனுக்கு தலைமை ஆசிரியர் மாற்றுச் சான்றிதழ் வழங்கியதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இன்று கொணவட்டம் அரசு பள்ளியை முற்றுகையிட்டனர். காரணம் இல்லாமல் மாணவர்களுக்கு ஏன் மாற்றுச்சான்றிதழ் வழங்கினீர்கள்? என கேட்டு தலைமை ஆசிரியரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது இந்த பிரச்சனை தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் கொணவட்டம் அரசு பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.
அணைக்கட்டு அருகே உள்ள இலவம்பாடியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 270 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இவர்களுக்கு பாடம் நடத்த, தலைமை ஆசிரியர் உள்பட 14 பேர் பணியாற்றுகின்றனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் கஜேந்திரனை கடந்த ஏப்ரல் மாதம் பேரணாம்பட்டு அருகே உள்ள அரவட்லாவுக்கு பணியிடம் மாற்றம் செய்து கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
வேறு பள்ளிக்கு செல்ல மறுத்த கஜேந்திரன், இளவம்பாடியிலேயே பள்ளி தலைமை ஆசிரியராக தொடர்ந்து பணியாற்றி வருகிறார். மேலும் தற்போது மருத்துவ விடுப்பு எடுத்து, பள்ளிக்கு வருவதையும் தவிர்த்து விட்டார்.
தலைமை ஆசிரியர் இல்லாததால் மாணவர் சேர்க்கை மற்றும் அத்தியாவசிய பணிகள் அதிகம் பாதிக்கப்படுகிறது. எனவே பள்ளி தலைமை ஆசிரியரை கண்டித்து, அந்த பகுதி மக்கள் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் இன்று பள்ளியை முற்றுகையிட்டனர். தங்களது பிள்ளைகளின் மாற்று சான்றிதழ் கேட்டு பள்ளி தலைமை ஆசிரியை (பொறுப்பு) பூங்குழலியிடம் வழங்கினார். மேலும் மாற்றுச் சான்றிதழ் தரும் வரை கலைந்து செல்ல மாட்டோம் எனக் கூறி பள்ளி வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட கல்வி அலுவலர் அங்குலட்சுமி, பெற்றோர்களிடம் போனில் தொடர்பு கொண்டு சமரசம் பேசினார்.
உயர் அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
- அத்தியாவசிய பொருட்கள் லோடு ஆட்டோ மூலம் கொண்டுவரப்பட்டது
அணைக்கட்டு:
வேலூரை அடுத்த பள்ளிகொண்டாவில் அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவர்கள் தங்கும் விடுதி உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி அருகில் உள்ள பள்ளிகளில் படித்துவருகின்றனர். இதில் பெரும்பாலானோர் மலை கிராமத்தை சேர்ந்தவர்களே அதிகமானோர் உள்ளனர்.
இவர்களுக்கு இலவச உணவுடன் கூடிய தங்கும் வசதி செய்துகொடு க்கப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்களுக்கு உணவு வழங்க, அரசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் லோடு ஆட்டோ மூலம் கொண்டுவரப்பட்டது.
மூட்டைகளை இறக்கி வைக்க ஆள் இல்லாததால், விடுதி ஊழியர்கள் பள்ளி மாணவர்களை கொண்டு அரிசி மூட்டைகளை தூக்கிச்சென்று விடுதிக்குள் வைத்தனர். இதனை பார்த்த பொதுமக்கள் மாணவர்கள் மூட்டைகளை தூக்கி செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளும் கண்டும், காணாமல் உள்ளனர்.
விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் மூட்டகளை தூக்கிச்சென்ற சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- போலீசார் சோதனையில் சிக்கினர்
- 1,500 ரூபாய் கட்டினால் ரூ.3,000 தருவதாக கூறி நிறைய பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது
அணைக்கட்டு:
பள்ளிகொண்டா சாவடி பகுதியில் காட்டன் சூதாட்டம் நடைபெற்று வருவதாக பள்ளிகொண்டா போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜகுமாரிக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர்.
அப்போது ஒரு பழக்கடையில் காட் டன் சூதாட்டம் நடைபெறுவதை பார்த்தனர். போலீஸ் வருவதை அறிந்ததும் சூதாட்டத்தில் ஈடுபட்ட சிலர் தப்பி ஓடிவிட்டனர். ஒருவரை மட்டும் பிடித்து விசாரணை மேற் கொண்டனர்.
அதில் அவர் கே.வி.குப்பம் தாலுகா கீழ்ஆ லத்தூர் கிராமத்தை சேர்ந்த சரவணன் (வயது 45) என்பதும், 1,500 ரூபாய் கட்டினால் ரூ.3,000 தருவதாக கூறி நிறைய பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது.
இதனைய டுத்து சப்- இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, சரவணன் மீது வழக் குப் பதிவு செய்து அவரை கைது செய்தார்.
- 7-வது முறையாக இன்று நடந்தது
- 6 முறை அறிவிப்பு வெளியிடப்பட்டு தள்ளி வைக்கப்பட்டது
வேலூர்:
வேலூர் மாநகராட்சி யில் ஸ்மார்ட் சிட்டி திட் டத்தின் கீழ் வேலூர் புதிய பஸ் நிலையம் ரூ.753 கோடியில் நவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட் டது.
பஸ் நிலையம் பராமரிப்பு பணிகள் மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக் கப்பட்டுள்ளது. மாநகராட் சிக்கு வருவாய் ஈட்டும் வகையில் 87 கடைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த கடைகள் இன்னும் பயன் பாட்டிற்கு வரவில்லை. கடை ஏலம் விடுவதில் பல தடைகள் ஏற்பட்டது.
6 முறை ஏலம் நடப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு, பல்வேறு காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டது.
இதற்கிடையில் கடந்த மாதம் 7-வது முறை யாக ஏலம் நடந்தது. இதில் ஒரு வழியாக 7 கடைகள் மட்டுமே ஏலம்போனது.
இதனை தொடர்ந்து இன்றும் 7 கடைகளுக்கு மட்டுமே ஏலம் கேட்டு 9 பேர் வந்திருந்தனர். அதன் படி 7 கடைகள் மட்டுமே ஏலம் விடப்பட்டது. மீதமுள்ள கடைகளும் விரைவில் ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என தெரியவில்லை
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
ஒடுகத்தூரை அடுத்த சேர்பாடி அருகே அழுகிய நிலையில் சுமார் 60 வயது மதிக்க தக்க ஆண் உடல் கிடப்பதாக வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பழனிமுத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.
அழுகிய நிலையில் இருந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்? என தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






