என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கலை, இலக்கிய போட்டிகள்
    X

    தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கலை, இலக்கிய போட்டிகள்

    • வருகிற 4-ந் தேதி நடக்கிறது
    • பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் 11, 12 -ம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவர்களிடையே கவிதை கட்டுரை போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

    வருகிற 4-ந் தேதி வேலூர், அரசு முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளன.

    காலை 9.30 மணிக்கு 11, 12-ம் வகுப்பில் பயிலும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும், பிற்பகல் 1.30 மணிக்கு அனைத்து கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும் தனித்தனியே கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளன.

    இப்போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியே முதல் பரிசுத்தொகையாக ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசுத்தொகையாக ரூ.7 ஆயிரம், 3-ம் பரிசுத் தொகையாக ரூ.5 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

    ஒவ்வொரு போட்டியிலும் முதல் பரிசு பெறும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள வேலூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநரால் பரிந்துரைக்கப்படுவர்.

    வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளி கல்லூரி மாணவர்கள் இதில் பங்கேற்கலாம்.

    ஒரு பள்ளி கல்லூரியிலிருந்து ஒரு போட்டிக்கு 2 பேர் வீதம் 3 போட்டிகளுக்கும் 6 மாணவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். போட்டிகளுக்கான தலைப்புகள் போட்டிகள் தொடங்கும் முன்பு நடுவர்கள் முன்னிலையில் அறிவிக்கப்படும்.

    மாவட்ட அளவிலான இப்போட்டிகளில் கலந்துகொள்ள விருப்பமுள்ள பள்ளி மாணவர்கள் பங்கேற்புப் படிவத்தைப் பூர்த்தி செய்து அந்தந்தப் பள்ளித் தலைமையாசிரியர் பரிந்துரையுடனும், கல்லூரி மாணவர்கள் அவர்கள் பயிலும் கல்லூரி முதல்வர் பரிந்துரையுடனும் வேலூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநரிடம் போட்டிகள் நடைபெறும் நாளன்று நேரில் அளித்தல் வேண்டும்.

    கூடுதல் விவரங்களுக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநரை நேரிலோ, தொலைபேசி வாயிலாகவோ (0416 - 2256166,99522 80798) தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×