என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "They submitted a petition to the Collector"

    • ரூ.14,000 வாடகையாக செலுத்தப்பட்டு வருகிறது
    • வணிகர்கள் வலியுறுத்தல்

    வேலூர், ஜூன்.23-

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வேலூர் மாவட்ட கிளை சார்பில்அவசர ஆலோசனை கூட்டம் வேலூர் சண்முகடியார் சங்க கட்டிடத்தில் நேற்று நடைபெற்றது.

    வேலூர் மாவட்ட தலைவர் ஆர்.பி.ஞானவேலு தலைமை தாங்கினார். மாநகராட்சி கடை வணிகர் சங்கத் தலைவர் ஆர் பிச்சாண்டி வரவேற்றார்.

    பின்னர் அவர்கள் கூறியதாவது:- வேலூர் மாநகராட்சி 4 மண்டலங்கள் சார்பில் மாநகராட்சி கடைகளுக்கு 12 மாத வாடகையை முன்பணமாக செலுத்த அறிவுறு த்தப்பட்டுள்ளது.

    ஏற்கனவே அரசாணை எண்-92 இன் படி 2016 ஆம் ஆண்டு சந்தை மதிப்பு படி வேலூர் மாநகராட்சி கடைகளுக்கு வாடகை உயர்த்தப்பட்டது.

    அதனடிப்படையில், 2016- ஆம் ஆண்டு ரூ.2,400 வாடகை உள்ள ஒரு கடைக்கு ரூ.9,000 என வாடகை நிர்ணயம் செய்யப்பட் டதுடன், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை 15 சதவீத உயர்வு அடிப் படையில் தற்போது ஜிஎஸ்டி யுடன் சேர்த்து அதே கடைக ளுக்கு ரூ.14,000 வாடகையாக செலுத்தப்பட்டு வருகிறது. இந்த வாடகை உயர்வால் வணிகர் களால் தொடர்ந்து வர்த்தகம் செய்ய முடியாமல் பல கடைகள் மூடப்பட்டும், சீல் வைக்கப்பட் டும் உள்ளன.

    இந்த நிலையில், தமிழகத்தில் எங்கும் இல்லாத வகையில் புதிய சட்டமாக மாநகராட் சிக் கடைகளுக்கு 12 மாத வாட கையை முன் பணமாக செலுத் திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வணிகர்கள் மத்தி யில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி யுள்ளது.

    வேலூரிலுள்ள பல மாநகராட் சிக் கடைகளை சுமார் 40, 50 ஆண்டுகள் நடத்தப்பட்டு வருகின்றன. தந்தைக்கு பிறகு மகன் என கடை களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், அந்த கடைகளுக்கு 40 ஆண்டுகளுக்கு முன்பு 12 மாத முன்பணம் செலுத்தப்பட்டிருந் தால், அதன் ரசீதை கொண்டு வரவும் அல்லது 12 மாத வாட கையை முன் பணமாக செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப் படுவது எந்த வகையிலும் நியாயம் இல்லை.

    பன்னாட்டு நிறுவனங்க ளால் சில்லறை வணிகம் அழிந்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு வணி கர்களைப் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே, மாநக ராட்சி நிர்வாகம் விடுத்துள்ள இந்த அறிவிப்பை உடனே திரும்பப் பெற வேண்டும் அவர்கள் கூறினர். பின்னர் இது தொடர்பாக கலெக்டரிடம் மனு அளித்தனர்.

    இந்தக் கோரிக்கை தொடர்பாக முதல்வர், உள்ளாட்சித் துறை அமைச்சர், நகராட்சிகளின் நிர் வாக ஆணையர் ஆகியோருக்கு வரும் 27-ந் தேதி வேலூர் தலைமை அஞ்சல் நிலையத்திலி ருந்து தபால்களை அனுப்ப உள்ளதாக வணிகர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

    ×