என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டவர் கைது
    X

    காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டவர் கைது

    • போலீசார் சோதனையில் சிக்கினர்
    • 1,500 ரூபாய் கட்டினால் ரூ.3,000 தருவதாக கூறி நிறைய பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது

    அணைக்கட்டு:

    பள்ளிகொண்டா சாவடி பகுதியில் காட்டன் சூதாட்டம் நடைபெற்று வருவதாக பள்ளிகொண்டா போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜகுமாரிக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர்.

    அப்போது ஒரு பழக்கடையில் காட் டன் சூதாட்டம் நடைபெறுவதை பார்த்தனர். போலீஸ் வருவதை அறிந்ததும் சூதாட்டத்தில் ஈடுபட்ட சிலர் தப்பி ஓடிவிட்டனர். ஒருவரை மட்டும் பிடித்து விசாரணை மேற் கொண்டனர்.

    அதில் அவர் கே.வி.குப்பம் தாலுகா கீழ்ஆ லத்தூர் கிராமத்தை சேர்ந்த சரவணன் (வயது 45) என்பதும், 1,500 ரூபாய் கட்டினால் ரூ.3,000 தருவதாக கூறி நிறைய பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது.

    இதனைய டுத்து சப்- இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, சரவணன் மீது வழக் குப் பதிவு செய்து அவரை கைது செய்தார்.

    Next Story
    ×