என் மலர்
நீங்கள் தேடியது "90 percent of the work has been completed"
- 1000-த்திற்கும் மேற்பட்ட அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது
- சுற்றுலா பயணிகள் வரவேற்பு
வேலூர்:
வேலூரின் மையத்தில் 137 ஏக்கர் பரப்பளவில் வேலூர் கோட்டை அமைந்துள்ளது.இந்த கோட்டையில் 53 பிரிட்டிஷ் கால கட்டிடங்கள் உள்ளன.இங்கு மைசூர் மன்னர் ஹைதர் அலி மற்றும் அவர்கள் மகன் திப்பு சுல்தான் ஆகியோரின் குடும்பங்கள் தங்களின் கடைசி ஆண்டுகளில் கைதிகளாக இருந்தனர்
மேலும் இங்குள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில் மிகச்சிறந்த ஆன்மீக தலமாக விளங்குகிறது.
பல்வேறு சிறப்புமிக்க இந்த கோட்டை தற்போது தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இங்கு உள்ளூர் மட்டுமல்லாது வெளியூர் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருகின்றனர்.
ஏற்கனவே ஸ்மார்ட் சிட்டி மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.9 கோடி செலவில் பழமை மாறாமல் கோட்டையை அழகுபடுத்தும் பணி மற்றும் கோட்டையை சுற்றி 1000-த்திற்கும் மேற்பட்ட அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு தகுந்த வகையில் இங்கு ஓட்டல்கள் இல்லை.மேலும் வட மாநில சுற்றுலா பயணிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
குளிர் பானங்கள், டீ, காபி மற்றும் நொறுக்கு தீனிகள் விற்பதற்கு என்று மிகக் குறைந்த கடைகளே இங்கு அமைந்துள்ளன.
இந்த நிலையில் தொல்லியல் துறை சார்பில் ரூ.3 கோடி செலவில்
ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு அருகில் ஓட்டல் கட்டப்பட்டு வருகிறது.
இது குறித்து அதிகாரரிகள் கூறியதாவது:
இதன் 90 சதவீத பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது.
தற்போது இந்த கட்டிடத்தில் மின்சாரப் பணிகள் மட்டும் நிலுவையில் உள்ளது. இந்த பணிகள் முடிந்தவுடன்புதிய ஓட்டல் திறப்பதற்கு டெண்டர் விடப்படும் என கூறினர்.
தற்போது புதிதாக கட்டப்படும் ஓட்டலில் சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாது கோவிலுக்கு வரும் பக்தர்களும் பயன்படுத்தி கொள்ள முடியும். விசாலமாக அமைக்கப்பட்டுள்ள இந்த ஓட்டலில் ஒரே நேரத்தில் 50 - 60 பேர் வரை சாப்பிடலாம். இங்கு வட இந்திய, தென்னிந்திய உணவு வகைகள் மட்டுமல்லாது குளிர்பானங்கள்,ஐஸ்கிரீம்,மற்றும் இதர உணவு பொருட்கள் மலிவான விலையில் தரமாக விற்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.






