என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு விடுதியில் மாணவர்கள்"

    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
    • அத்தியாவசிய பொருட்கள் லோடு ஆட்டோ மூலம் கொண்டுவரப்பட்டது

    அணைக்கட்டு:

    வேலூரை அடுத்த பள்ளிகொண்டாவில் அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவர்கள் தங்கும் விடுதி உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி அருகில் உள்ள பள்ளிகளில் படித்துவருகின்றனர். இதில் பெரும்பாலானோர் மலை கிராமத்தை சேர்ந்தவர்களே அதிகமானோர் உள்ளனர்.

    இவர்களுக்கு இலவச உணவுடன் கூடிய தங்கும் வசதி செய்துகொடு க்கப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்களுக்கு உணவு வழங்க, அரசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் லோடு ஆட்டோ மூலம் கொண்டுவரப்பட்டது.

    மூட்டைகளை இறக்கி வைக்க ஆள் இல்லாததால், விடுதி ஊழியர்கள் பள்ளி மாணவர்களை கொண்டு அரிசி மூட்டைகளை தூக்கிச்சென்று விடுதிக்குள் வைத்தனர். இதனை பார்த்த பொதுமக்கள் மாணவர்கள் மூட்டைகளை தூக்கி செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளும் கண்டும், காணாமல் உள்ளனர்.

    விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் மூட்டகளை தூக்கிச்சென்ற சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×