search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை வசதிகள் இல்லாமல் அவதி பீஞ்சமந்தை மலை ஊராட்சியை 3-ஆக பிரிக்க வேண்டும்
    X

    பீஞ்சமந்தை ஊராட்சி வரைபடம்.

    சாலை வசதிகள் இல்லாமல் அவதி பீஞ்சமந்தை மலை ஊராட்சியை 3-ஆக பிரிக்க வேண்டும்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மலைவாழ் மக்கள் அவதி
    • நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுக்காவில் மொத்தம் 51 ஊராட்சிகள் உள்ளது. இதில் பீஞ்சமந்தை, ஜார்தான்கொல்லை, பலாம்பட்டு ஆகிய 3 ஊராட்சிகள் மலை ஊராட்சிகள் ஆகும்.

    இந்த மலை ஊராட்சிகளில் சுமார் மட்டும் சுமார் 94 மலை குக் கிராமங்கள் உள்ளது. வேலூர் அருகே உள்ள ஊசூர் அருகில் தொடங்கும் இந்த ஊராட்சிகளின் எல்லை, சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் ஒடுக்கத்தூர் அருகே உள்ள மேல் அரசம்பட்டு வரை உள்ள வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த 3 மலை ஊராட்சிகளில் சுமார் 36 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இதில் பீஞ்சமந்தை ஊராட்சியில் மட்டும் சுமார் 68 குக் கிராமங்கள் உள்ளது.

    இந்த ஊராட்சியின் எல்லை பகுதி வரதலம்பட்டு அருகே உள்ள அல்லேரியில் தொடங்கி மேல் அரசம்பட்டு கிராமம் வரை உள்ளது. இந்த ஊராட்சியின் உள் பரப்பளவு சுமார் 10 கிலோமீட்டர் தூரம் வரை உள்ளதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    அணைக்கட்டு தொகுதியில் உள்ள ஊராட்சிகளில் மட்டுமன்றி வேலூர் மாவட்டத்திலேயே, இந்த பீஞ்சமந்தை ஊராட்சியே பெரிய ஊராட்சியாக அமைந்துள்ளது.

    இந்த ஊராட்சியில் மட்டும் சுமார் 20 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இவர்கள் வசிக்கும் மலைப் பகுதிகளுக்கு சாலை வசதி இல்லாததால், இவர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள், அடிப்படை வசதிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் சரிவர சென்றடைவதில்லை என அந்த பகுதி மக்கள் குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர்.

    அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மலைவாழ் மக்கள் அவதிப்படும் நிலையில், ரேசன் பொருட்கள் வாங்குவதிலும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    கத்தியப்பட்டு மற்றும் முள்ளுவாடி கிராம மக்கள் ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பீஞ்சமந்தைக்கோ அல்லது 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒடுக்கத்தூர் கிராமத்திற்கு தான் வர வேண்டும். ரேசன் கடைகளில் வாங்கிய பொருட்களை சாலை வசதி இல்லாத குண்டும், குழியுமான சாலையில், காலில் செருப்பு கூட போடாமல் தலை மீது மூட்டைகளை சுமந்து நடைபயணமாக செல்வது அணைவரும் அறிந்த உன்மை.

    இதேபோல் பல மலைக்குக் கிராமங்களிலும் இதே அவல நிலைதான் நீடித்து வருகிறது. எனவே மலை வாழ் மக்களின் நலன் கருதி பீஞ்சமந்தை ஊராட்சியை 3 ஆக பிரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    Next Story
    ×