என் மலர்
திருவண்ணாமலை
தாய் அம்பிகா கீழேவிழுந்து அடிபட்டுவிட்டதால் மனமுடைந்த வாலிபர் வீட்டில் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஒன்றியம் ஆத்தூரை கிராமத்தை சேர்ந்தவர் முருகன் கூலித்தொழிலாளி. இவரது மனைவி அம்பிகா. மகன் பிரகாஷ்ராஜ் (வயது 22). திருவண்ணாமலையில் நடந்த உறவினர் திருமணத்திற்கு பிரகாஷ், அவருடைய தாய் அம்பிகாவை மோட்டார்சைக்கிளில் அழைத்து சென்றார்.
திரும்பி வரும்போது திருவண்ணாமலையில் வேகத்தடையில் மோட்டார்சைக்கிள் ஏறி இறங்கியபோது பின்னால் இருந்த அம்பிகா கீழே விழுந்து விட்டார். இதில் காயம் அடைந்த அவரை அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு, பிரகாஷ்ராஜ் ஆத்தூரை கிராமத்துக்கு வந்தார்.
தாய் அம்பிகா கீழேவிழுந்து அடிபட்டுவிட்டதால் மனமுடைந்த அவர் வீட்டில் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் உடல் கருகிய அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் இறந்துவிட்டார். இதுகுறித்து சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

வந்தவாசி அருகே காரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் ஊராட்சி மன்ற தலைவர் திருப்பதியான் தலைமையில் நடைபெற்றது.
வந்தவாசி:

வழூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ரம்யா தலைமையிலான குழுவினர் முகாமிற்கு வந்தவர்களுக்கு ரத்த அழுத்த பரிசோதனை, பிராண வாயு பரிசோதனை செய்த பிறகு தடுப்பூசி போட்டனர்.
கண்ணமங்கலம் அருகே படவேடு வீரகோவில் திடலில் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் தாமரைச்செல்விஆனந்தன் முன்னிலை வகித்தார். முகாமில் காளசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர்கள் ராமு, தமிழரசன் மற்றும் செவிலியர்கள் அடங்கிய மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டு 124 பேருக்கு தடுப்பூசி போட்டனர். முடிவில் ஊராட்சி செயலர் அண்ணாச்சி நன்றி கூறினார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது. நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் 125 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 4 பேர் உயிரிழந்து உள்ளனர்.
மாவட்டம் முழுவதும் நேற்று வரை 49 ஆயிரத்து 140 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனா். இதில் 47 ஆயிரத்து 543 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளனர். தற்போது 1,001 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 596 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து உள்ளனர்.
திருவண்ணாமலை அருகே வருவாய் ஆய்வாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையை அடுத்த துரிஞ்சாபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 41), கிராம நிர்வாக அலுவலர். ஊசாம்பாடி ஏரிக்கரை பகுதியில் ரோட்டு ஓரம் சிலர் கொட்டகை போடுவதாக கிராம உதவியாளர்கள், ஜெயக்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் வருவாய் ஆய்வாளர் சாயாஜிபேகத்துடன் சம்பவ இடத்திற்கு சென்று அனுமதியின்றி கொட்டகை அமைப்பதற்காக நடப்பட்டு இருந்த கம்புகளை அகற்றி்னார்.
அப்போது அங்கிருந்த புதுமல்லவாடி கிராமத்தை சேர்ந்த ரகுநாதன் (43), சக்திவேல் (29) ஆகியோர் வருவாய் துறையினரை அரசு பணி செய்யவிடாமல் தடுத்து கீழே கிடந்த கம்பால் தாக்கினர். மேலும் இதை தடுக்க வந்த வருவாய் ஆய்வாளரையும் அவர்கள் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து ரகுநாதன், சக்திவேல் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
ஆரணியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சிலிண்டர் மற்றும் மொபட்டை பாடைகட்டி தூக்கிவந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆரணி:
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும் ஆரணியில் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. காந்தி ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் இருந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட நிர்வாகி சி.அப்பாசாமி தலைமையில் ஊர்வலம் நடந்தது.
ஊர்வலத்தில் சமையல் கியாஸ் சிலிண்டர், மொபட் இரண்டையும் பாடைகட்டி தூக்கி வந்தனர். ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து வந்தனர். பழைய பஸ் நிலையம் எம்.ஜி.ஆர். சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் பாண்டியராசா, ரவிச்சந்திரன், அருணகிரி, ம.தி.மு.க. நிர்வாகிகள் பச்சையப்பன், எஸ்.கே.ரத்தினகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், மோ.ரமேஷ், என்.முத்து, மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் ஜமால், முபாரக், ஜிலான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் பி.கண்ணன், குப்புரங்கன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் டி.ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் எம்.கே.பாஸ்கரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு, சிமெண்டு விலை உயர்வை கோஷங்கள் எழுப்பியும், மத்திய அரசை பதவி விலக வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.
திருவண்ணாமலை வேங்கிக்காலில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் ஆனந்தன், ராமதாஸ், வீரபத்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ரவி, பாலு, கலைசெல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வெம்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் இணைந்து பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
செய்யாறு சட்டமன்ற தொகுதி செயலாளர் எ.குப்பன் என்ற வெற்றிவளவன் தலைமை தாங்கினார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
வேட்டவலம் பால் ஸ்டோர் பஸ் நிறுத்தம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் ஆகியவற்றின் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் கண்ணதாசன் தலைமை தாங்கினார். கீழ்பென்னாத்தூர் ஒன்றியசெயலாளர் பிலிப்ராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆறுமுகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் வாசுகி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சிவக்குமார், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட துணை செயலாளர் தங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் குழந்தை திருமணங்களை தடுக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆண்டுக்கு ஆண்டு குழந்தைகள் திருமணங்கள் நடைபெறுவது அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஆணின் திருமண வயது 21 ஆகவும், பெண்ணுக்கு 18 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் பெற்றோரின் அவசரத்தாலும், பல்வேறு காரணங்களாலும் 18 வயது நிரம்பாத சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. குழந்தை திருமணம் சமூகத்தின் அவலம் என்று தெரிந்தும், சிலர் இச்செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இம்முறை திருமணத்தினால் ஒரு குழந்தையே குழந்தையை பெற்று எடுப்பதால் 23 சதவீதத்துக்கும் அதிகமாக குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோயால் பாதிக்கப்படுகிறது என்று மருத்துவ வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 2020-ம் ஆண்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 239 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளது.
அதுமட்டுமின்றி கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்று வரை என 6 மாதங்களில் 115 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளது. அதாவது ஜனவரி மாதத்தில் 30-ம், பிப்ரவரி மாதத்தில் 20-ம், மார்ச் மாதத்தில் 15-ம், ஏப்ரல் மாதத்தில் 27-ம், மே மாதத்தில் 19-ம், ஜூன் மாதத்தில் நேற்று வரை என 4 குழந்தைகள் திருமணம் தடுக்கப்பட்டு உள்ளது.
இந்த குழந்தை திருமணம் தடுக்கும் பணியில் சமூக நலத்துறையினர், சைல்டு லைன் அலுவலர்கள் மற்றும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். தடுத்து நிறுத்தப்பட்ட திருமணங்களில் இருந்து பாதிக்கப்பட்ட பெரும்பாலான சிறுமிகள் பாதுகாப்பு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் சிலரின் பெற்றோரிடம் பத்திரத்தில் எழுதி வாங்கி கொண்டு தொடர்ந்து அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். அதிகாரிகளுக்கு தெரிந்தே 115 திருமணங்கள் தடுக்கப்பட்டு உள்ள நிலையில் தெரியாமல் எத்தனை திருமணங்கள் நடந்தது என்று தெரியவில்லை.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் குழந்தை திருமணங்களை தடுக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இருப்பினும் குழந்தை திருமணம் குறையவில்லை. எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் கிராமம் வாரியாக கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூய்மை பணியாளருக்கு சம்பள நிலுவைத்தொகை வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் ஊராட்சி செயலாளரை போலீசார் கைது செய்தனர்.
செங்கம்:
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காயம்பட்டு ஊராட்சியில் தூய்மை பணியாளராக பணி செய்து வருபவர் இந்திரா. இவர் தனக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை சம்பளத் தொகையை வழங்கக்கோரி ஊராட்சி செயலாளரிடம் மனு அளித்தார். ஆனால் இந்த மனு மீது நடவடிக்கை எடுக்க ஊராட்சி செயலாளர் ஸ்ரீதேவி ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து இந்திரா ரூ.2 ஆயிரம் தருவதாக கூறியிருக்கிறார். ஆனால் ரூ.5 ஆயிரம் தந்தால்தான் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு மீது நடவடிக்கை எடுப்பார்கள் என கூறியுள்ளார்.
இதனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத இந்திரா இதுகுறித்து வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ஊராட்சி செயலாளர் ஸ்ரீதேவியை கையும்களவுமாக பிடிக்க முடிவு செய்தனர். அதற்காக ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஸ்ரீதேவியிடம் கொடுக்கச் சொல்லி நேற்று இந்திராவை அனுப்பி வைத்தனர்.
அதன்படி ஊராட்சி செயலாளர் ஸ்ரீதேவியிடம் அவருடைய வீட்டின் அருகே சென்று பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை துணைபோலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) யுவராஜ் தலைமையிலான போலீசார், ஊராட்சி செயலாளர் ஸ்ரீதேவியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
தூசி கிராமத்தில் மருத்துவம் படிக்காமல் பொது மக்களுக்கு ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை அளித்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
வெம்பாக்கம்:
தூசி கிராமத்தில் உள்ள வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சங்கரலிங்கம் (வயது 54). இவர் மருத்துவம் படிக்காமல் பொது மக்களுக்கு ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை அளிப்பதாக அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.
இது குறித்து வெம்பாக்கம் அரசு மருத்துவமனை டாக்டர் பாண்டியன் தூசி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது சங்கரலிங்கம், டிப்ளமோ பாரா மெடிக்கல் படித்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் போலி டாக்டர் சங்கரலிங்கத்தை கைது செய்தனர்.
மேலும் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வெண்பாக்கம் அருகே திருமணமான 6 நாட்களில் புதுப்பெண் மாயமானது குறித்து கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெம்பாக்கம்:
திருவண்ணாமலை மாவட்டம் வெண்பாக்கம் தாலுகா தூசி அருகே உள்ள வடக்கல்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பாபு கூலி தொழிலாளி.
இவருக்கும் செய்யார் தாலுகா கீழ்ப்பந்தை கிராமத்தைச் சேர்ந்த தனலட்சுமி என்பவருக்கும் கடந்த 21.6.2021 அன்று வடக்கல்பாக்கம் கிராமத்தில் உள்ள கோவிலில் திருமணம் நடந்தது. அதன்பின் தனது மனைவி தனலட்சுமி மாயமாகிவிட்டார் என்று தூசி போலீஸ் நிலையத்தில் பாபு புகார் கொடுத்தார்.
புகார் மீது தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து மாயமான தனலட்சுமியை தேடி வருகின்றனர். மேலும் திருமணமான 6 நாளில் புதுப்பெண் மாயமாகி விட்டதால் அக்கிராமத்தில் பரபரப்பாக உள்ளது.

செங்கம் அருகே உள்ள பக்கரிபாளையம் பகுதியில் கஞ்சா விற்றது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
செங்கம்:
செங்கம் அருகே உள்ள பக்கரிபாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார்ரெட்டிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் தனிப்பிரிவு போலீசார் பக்கிரிபாளையம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த நேரு (வயது19) என்ற வாலிபரை கைது செய்தனர். அவரிடம் இருந்த கஞ்சா பாக்கெட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோகன்ராஜ் செய்யாறு சிப்காட் பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
ஆரணி:
ஆரணி கொசப்பாளையம் தாண்டவராயன் தெருவைச் சேர்ந்த ரவிசங்கரின் மகன் மோகன்ராஜ் (வயது 29). இவரின் பெற்றோர் ஏற்கனவே உயிரிழந்து விட்டனர். மோகன்ராஜ் செய்யாறு சிப்காட் பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
அவர், தற்போது சின்னபட்டுநூல்காரர் தெருவில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். திருமணமாகாத ஏக்கம் மற்றும் பெற்றோர் இல்லாத வருத்தம் போன்ற காரணங்களால் மனமுடைந்து காணப்பட்ட அவர் நேற்று காலை வீட்டின் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ஆரணி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 592 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து உள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் 145 கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மேலும் 137 பேருக்கு தொற்று உறுதி ஆனது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 49 ஆயிரத்து 13 ஆக உயர்ந்துள்ளது. இதில், 47 ஆயிரத்து 386 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளனர். தற்போது ஆயிரத்து 35 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் நேற்று கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்தார். இதுவரை மாவட்டம் முழுவதும் 592 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து உள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.