என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 137 பேருக்கு கொரோனா

    திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 592 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து உள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் 145 கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மேலும் 137 பேருக்கு தொற்று உறுதி ஆனது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 49 ஆயிரத்து 13 ஆக உயர்ந்துள்ளது. இதில், 47 ஆயிரத்து 386 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளனர். தற்போது ஆயிரத்து 35 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மேலும் நேற்று கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்தார். இதுவரை மாவட்டம் முழுவதும் 592 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து உள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×