என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • 97-ம் ஆண்டு பிரமோற்சவம் திருவிழா
    • பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பெரியகடை வீதியில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீபெருந்தேவி தாயார் சமேத கில்லா வரதராஜ பெருமாள் ஆலயம் விளங்கி வருகின்றன.

    இந்த ஆலயத்தில் 97-ம் ஆண்டு பிரமோற்சவம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றன.

    மேலும் இன்று அதிகாலையில் வரதராஜ பெருமாள் ஆலத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று பின்னர் பக்தர்கள் தேரை கோவிந்தா கோவிந்தா என கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்து நேர்த்தி கடன் செலுத்தினார்கள்.

    இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    • 2 நாட்களாக வெயில் சுட்டெரித்தது
    • மின்னல் தாக்கி பசுமாடு சாவு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் கடந்த 2 நாட்களாக வெயில் சுட்டெரித்தது. இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 7 மணியளவில் திடீரென இடி மின்னலுடன் பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. இதனால் மழைநீர் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கியது மற்றும் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி உள்ளன இந்த மழையால் திருவண்ணாமலை தாலுகாவில் ஒரு வீடு இடிந்து விழுந்தது அதேபோல் ஒரு பசுமாடு மின்னல் தாக்கி இறந்தனர். தண்டராம்பட்டு தாலுக்காவில் ஒரு வீடும் கீழ்பென்னாத்தூர் தாலுகாவில் 2 வீடுகளும் மழையால் இடிந்து விழுந்து சேதமானது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழையின் அளவு திருவண்ணாமலை பகுதியில் அதிகபட்சமாக 73 மில்லிமீட்டர் மழை பெய்து உள்ளன.

    இதேபோல் ஜமுனாமரத்தூர் 41, தண்டராம்பட்டு 39, கீழ்பென்னாத்தூர் 29, போளூர் 21, செங்கம் 12 சென்டிமீட்டர் மழை பொய்துள்ளன.

    • வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதாக புகார்.
    • போக்குவரத்து பாதிப்பு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை சு.ஆண்டாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி தவமணி, ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இவரது 2-வது மகள் புஷ்பா (வயது 26). இவரும், பெரிய கல்தாம்பாடி கிராமத்தை சேர்ந்த டிரைவர் விவேகானந்தன் என்பவரும் காதலித்து உள்ளனர்.

    பின்னர் அவர்கள் இருவரும் இரு வீட்டார் சம்மதத்துடன் காதல் திருமணம் கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி செய்து கொண்டனர். இந்த நிலையில் புஷ்பா கர்ப்பிணியாக இருந்ததாக கூறப்படுகிறது.

    இதற்கிடையில் புஷ்பாவை அவரது கணவர் வீட்டார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

    தாய் வீட்டிற்கு வந்த புஷ்பாவை அவரது பெற்றோர் கடந்த 4-ந் தேதி புஷ்பாவின் கணவர் வீட்டில் விட்டு வந்து உள்ளனர்.

    மறுநாள் புஷ்பா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று ஆறுமுகத்திற்கு அவரது உறவினர்கள் மூலம் தகவல் கிடைத்துள்ளது.

    இது குறித்து தகவலறிந்த பாய்ச்சல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று புஷ்பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

    இதற்கிடையில் புஷ்பாவின் கணவர் விவேகானந்தன் மற்றும் அவரது பெற்றோர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் புஷ்பா உடல் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    தொடர்ந்து மதியம் சுமார் 2 மணியளவில் புஷ்பாவின் சாவில் சந்தேகம் உள்ளதாக கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் திடீரென திருவண்ணாமலை அரசு மருத்துவமனை எதிரில் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த திருவண்ணாமலை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் அவர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள், புஷ்பாவின் சாவில் சந்தேகம் உள்ளது. அவரை வரதட்சணை கொடுமை செய்து அடித்து கொன்று விட்டனர் என்று கூறினர்.

    இது குறித்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும். அதுவரை புஷ்பாவின் உடலை வாங்க மட்டோம் என்றனர்.

    தொடர்ந்து அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி, இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்ததன் பேரில் அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த சம்பவம் குறித்து பாய்ச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மொத்தம் 332 மனுக்கள் பெறப்பட்டது.
    • உடனடியாக தீர்வு காண கலெக்டர் உத்தரவு.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் வருவாய் துறையின் மூலம் நடைபெற்ற 1431 - ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) கலெக்கடர் பா.முருகேஷ் பொது மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை நேற்று பெற்றுக்கொண்டார்.

    மேலும், வருவாய் துறையின் மூலம் நடைபெற்ற 1431 - ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயத்தில் பட்டா மாற்றம் சம்மந்தமாக 42 மனுக்களும், உட்பிரிவு பட்டா மாற்றம் தொடர்பாக 108 மனுக்களும், வீட்டுமனைப்பட்டா தொடர்பாக 51 மனுக்களும், முதியோர் உதவித்தொகை வழங்க கோரி 53 மனுக்களும், குடும்ப அட்டை வேண்டி 3 மனுவும், 61 இதர மனுக்களும், இதர துறையை சார்ந்த மனுக்கள் 14 என மொத்தம் 332 மனுக்கள் பெறப்பட்டது.

    மேற்படி பெறப்பட்ட மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காணுமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்திரவிட்டுள்ளார்.

    இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் (நில அளவை) எம்.சுப்பிரமணியன், அலுவலக மேலாளர் (பொது) ரவி, வேளாண் உதவி இயக்குநர் கோ.அன்பழகன், திருவண்ணாமலை வட்டாட்சியர் எஸ்.சுரேஷ் உட்பட பலர் கொண்டனர்.

    • போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
    • ஆத்திரம் அடைந்த மக்கள் பூட்டு போட்டு பூட்டினர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கொசமட தெருவில் குயவர் மடம் செயல்பட்டு வருகின்றது. இந்த மடத்தில் கடந்த 1994 முதல் 2022 வரையில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று உள்ளதாகவும், கடந்த 28 ஆண்களாக தேர்தல் நடத்தாமல் தன்னிச்சையாக தற்போதைய நிர்வாகிகள் செயல்படுவதாகவும் குலாலர் சமுதாய மக்கள் நேற்று குயவர் மடத்தின் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர்.

    போராட்டத்திற்கு தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளி குலாலர் சங்க முன்னாள் மாவட்டத் தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். இதில் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் மடத்தின் அருகில் உள்ள பிள்ளையார் கோவில் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து வந்து குயவர் மடத்தினை முற்றுகையிட்டனர்.

    அப்போது மடத்தில் தற்போது உள்ள தலைமை 28 ஆண்டுகளாக தேர்தல் நடத்தாமல் தன்னிச்சையாக செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சமுதாய மக்களுக்கு மடத்தில் முன்னுரிமை மற்றும் தங்குவதற்கு அனுமதி மறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

    போராட்டத்தின் போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மடத்தின் முன்பக்கம் இரும்பு கேட் பூட்டு போட்டு பூட்டப்பட்டு இருந்தது. மேலும் திருவண்ணாமலை டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் பூட்டு மற்றும் சங்கிலி வாங்கி வந்து பூட்டு போட்டு பூட்டினர்.

    தொடர்ந்து அவர்களிடம் திருவண்ணாமலை டவுன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இது அவர்கள் திருவண்ணாமலை தாலுகா நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு கோரிக்கை மனு அளிக்க சென்றனர்.

    பின்னர் அவர்கள் கலெக்டர் முருகேஷிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதனால் திருவண்ணாமலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • சரவணன் எம்.எல்.ஏ. ஆய்வு
    • மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு

    திருவண்ணாமலை:

    கலசப்பாக்கம் அடத்த ஜவ்வாதுமலையில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில்ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை பெ.சு.தி. சரவணண் எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கினார்.

    ஜவ்வாதுமலையில் வாழும் பழங்குடியின மலைவாழ் மக்கள் ஜமுனாமரத்தூரில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டி பெ.சு.தி.சரவணன் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர்.

    இதனை தொடர்ந்து திருவண்ணாமலை தொகுதி சி.என்.அண்ணாதுரை எம்.பி. தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.15 லட்சமும், கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மொத்தம் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஜமுனாமரத்தூரில் புதிய பஸ் நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை கலசப்பாக்கம் பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ. இன்று காலை ஜவ்வாதுமலையில் உள்ள ஜமுனாமரத்தூர் சென்று கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் ஜவ்வாது மலையில் வாழும் பழங்குடியின மலைவாழ் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின் போது ஊரக உள்ளாட்சி துறை அதிகாரிகளும், உள்ளாட்சி பிரதிநிதிகளும், பொது மக்களும் கலந்து கொண்டனர்.

    • போலீசார் தகவல் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தியதால் ஆத்திரம்
    • 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

    ஆரணி:

    ஆரணி அடுத்த வெள்ளேரி கிராமத்தைச் சேர்ந்தவர் தரணி குமார் (வயது 31). இவர் ஸ்ரீபெரும்புதூர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சுகன்யா.

    இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு லக்ஷ்மன் (2) தர்ஷன் என்ற 6 மாத கைக்குழந்தை உள்ளது.

    இந்தநிலையில் கடந்த 3-ந் தேதி அதிகாலையில் வேலையை முடித்துவிட்டு சென்னையிலிருந்து ஆரணிக்கு வந்தார். பஸ்ஸிலிருந்து இறங்கி சென்னை ஆரணி சாலையின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் தரணி குமார் மீது மோதியது.

    இதில் தலையில் அடிபட்டு ரத்தக் வெள்ளத்தில் சாலையில் விழுந்து கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இவரை மீட்டு108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தார். கடந்த 3-ந் தேதி நடந்த விபத்தை உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் போலீசார் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த தரணி குமாரின் உறவினர்கள் ஆரணி சென்னை சாலையில் 300க்கும் மேற்பட்டோர் திடீரென மறியலில் ஈடுபட்டனர். தகவல் தெரிவிக்காத போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    தகவலறிந்த ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    இந்த சாலை மறியலால் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • 10ஆண்டுகளாக அடிப்படை வசதி இல்லை என்று குற்றச்சாட்டு.
    • உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக போலீசார் உறுதி.

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சேவூர் ஊராட்சிக்குப்பட்ட டைமன் நகர் பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் கடந்த 10ஆண்டுகளாக அடிப்படை வசதியான குடிநீர் சாலை வசதி தெரு விளக்கு உள்ளிட்ட எந்த வசதியும் இதுவரையில் செய்து தரவில்லை என்று பொதுமக்கள் குற்றசாட்டுகின்றனர்.

    மேலும் ஆத்திரமடைந்த குடியிருப்பு வாசிகள் திடிரென 50க்கும் மேற்பட்டோர். ஆரணி வேலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    ஆரணி தாலுகா போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • பல்வேறு பிரிவுகளாக போட்டிகள் நடந்தது.
    • 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த சோ.நாச்சிப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியில் தென்னிந்திய பாரம்பரிய சிலம்பம் விளையாட்டு கலைக்கழகம், திருவண்ணாமலை மாவட்ட சிலம்பம் பயிற்சி பள்ளி ஆகியவை இணைந்து மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி நேற்று நடைபெற்றது.

    போட்டிக்கு மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். தென்னிந்திய பாரம்பரிய சிலம்பம் விளையாட்டு கலை கழக தலைவர் ரேணுகோபால், துணை தலைவர் மில்டன், மாவட்ட செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியை கவுரவத் தலைவர் சூரியமூர்த்தி தொடங்கி வைத்தார்.

    இதில் மாவட்ட அளவில் 5 வயது முதல் கல்லூரி மாணவர்கள் வரை என பல்வேறு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் வெற்றிபெற்ற வீரர் வீராங்கணைகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர்.

    இதில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க உள்ளதாக மாவட்ட தலைவர் தெரிவித்தார்.

    இதில் சிலம்பம் பயிற்சியாளர்கள், ஊர் முக்கிய பிரமுகர்கள், வீரர் வீராங்கணைகளின் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.

    • பவுன் குமார் ரெட்டி சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு மாற்றம்
    • கார்த்திகேயன் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றியவர்.

    திருவண்ணமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்திற்கு புதிய எஸ்பியாக டாக்டர் கார்த்திகேயன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றியுள்ளார்.

    திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி ஆக இருந்த பவுன் குமார் ரெட்டி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மாற்றப்ப ட்டுள்ளார்.

    இவர் திருவண்ணாமலை எஸ்பியாக நியமிக்கப்பட்டு ஒரு வருடம் தான் ஆகிறது.

    • கடை மற்றும் வீடுகளில் பதுக்கினர்.
    • 4 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

    வந்தவாசி:

    வந்தவாசி பகுதியில் கடை மற்றும் வீட்டிலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்து வருவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் நகராட்சி ஆணையாளர் முஸ்தபா தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டதில் கடை மற்றும் வீடுகளில் தடை செய்யப்பட்ட கேரி பேக்குகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் ஸ்பூன்கள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருந்தனர்.

    இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான 4 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் கடை மற்றும் வீட்டின் உரிமையாளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

    ×