என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிலம்பம் போட்டிகள்"

    • பல்வேறு பிரிவுகளாக போட்டிகள் நடந்தது.
    • 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த சோ.நாச்சிப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியில் தென்னிந்திய பாரம்பரிய சிலம்பம் விளையாட்டு கலைக்கழகம், திருவண்ணாமலை மாவட்ட சிலம்பம் பயிற்சி பள்ளி ஆகியவை இணைந்து மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி நேற்று நடைபெற்றது.

    போட்டிக்கு மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். தென்னிந்திய பாரம்பரிய சிலம்பம் விளையாட்டு கலை கழக தலைவர் ரேணுகோபால், துணை தலைவர் மில்டன், மாவட்ட செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியை கவுரவத் தலைவர் சூரியமூர்த்தி தொடங்கி வைத்தார்.

    இதில் மாவட்ட அளவில் 5 வயது முதல் கல்லூரி மாணவர்கள் வரை என பல்வேறு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் வெற்றிபெற்ற வீரர் வீராங்கணைகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர்.

    இதில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க உள்ளதாக மாவட்ட தலைவர் தெரிவித்தார்.

    இதில் சிலம்பம் பயிற்சியாளர்கள், ஊர் முக்கிய பிரமுகர்கள், வீரர் வீராங்கணைகளின் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.

    ×