என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • மனைவி திட்டியதால் மனமுடைந்தார்.
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள எஸ் தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சமையல் மாஸடர் சாமிநாதன் ( வயது 65).

    இவருக்கு குடிப்பழக்கம் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார்.

    அப்போது அவரது மனைவி பூங்கொடி திட்டியதால், மனமுடைந்து அவ்வூரில் உள்ள ஏரிக்கரை பகுதியில் சென்று விஷத்தழை குடித்து விட்டார்.

    ஆபத்தான நிலையில் இருந்த சாமிநாதனை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கண்ணமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரூ.45.23 லட்சம் செலவில் 2 புதிய மரத் தேர்கள்
    • தேர் வெள்ளோட்டத் தேதி விரைவில் அறிவிப்பு

    வந்தவாசி:

    வந்தவாசியில் ஜலகண்டேஸ்வரர் கோவிலின் தேரோட்டம் ஆண்டுதோறும் மாசி மாதமும், ரங்கநாதப் பெருமாள் கோவிலின் தேரோட்டம் பங்குனி மாதமும் நடைபெறும்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்த கோவில்களில் 2 மரத் தேர்களும் சேதம் அடைந்ததால் மொத்தம் ரூ.45.23 லட்சம் செலவில் 2 புதிய மரத் தேர்கள் செய்யும் பணி இந்த கோயில்களின் அருகில் நடைபெற்று வருகிறது. தற்போது இரு தேர்களும் வெள்ளோட்டத்துக்கு தயார் நிலையில் உள்ளது.

    இந்த நிலையில் வந்தவாசி எம்.எல்.ஏ. எஸ்.அம்பேத்குமார் தேர் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது தேர் வெள்ளோட்டத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

    திமுக மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன், நகரச் செயலர் தயாளன், நகர்மன்றத் தலைவர் எச்.ஜலால், தேர் திருப்பணிக் குழுவைச் சேர்ந்த நாராயணன், பானுகோபன், திலீப் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அம்மன் கோயில்கள் தற்போது சிதிலமடைந்து கிடக்கிறது.
    • விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த படவேடு ராமநாதபுரம் கிராமத்தில் தற்போது காளியம்மன் கோவில் கட்டும் பணிகள் நடைபெற்றுவருகிறது.

    இக்கோயில் பழமையான மாரியம்மன், அன்னபூரணி அம்மன் கோயில்கள் தற்போது சிதிலமடைந்து கிடக்கிறது.

    எனவே இக்கோ யிலுகளும் சீரமைத்து புதியதாக கட்ட கிராம மக்கள் முடிவு செய்து, நேற்று 8-ந்தேதி காலை பாலாலய பூஜைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து கோயில் புனரமைத்து விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    • 5 பவுன் நகை, பணம் திருட்டு.
    • சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் விக்னேஷ் (வயது 28) இவர் கடந்த 6-ந்தேதி இரவு தனது வீட்டின் மூன் கதவை தாழ்ப்பாள் போடாமல் டிவி பார்த்துக்கொண்டே தூங்கி விட்டார்.

    மறுநாள் காலை எழுந்து பார்க்கும் போது ட்ரெஸ்ஸிங் டேபிள் வைத்திருந்த 5 சவரன் தங்க நகை மற்றும் ரொக்கப் பணம் யாரோ திருடி சென்று உள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் விக்னேஷ் நேற்று ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காதர் கான் வழக்குப்பதிவு செய்து 5 சவரன் தங்க நகை மற்றும் ரொக்கப் பணம் திருடிய மர்ம ஆசாமிகள் குறித்து போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    மேலும் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 14 வயது சிறுமி கர்ப்பம்.
    • போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு. போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு. போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு. போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 21). இவர் அதே பகுதியை சேர்ந்த 7-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளது. சிறுமியை சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர்.

    அப்போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன்பேரில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியை மீட்டு திருவண்ணாமலையில் உள்ள வரவேற்பு இல்லத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் இதுகுறித்து போளூர் அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் ராஜேஷை தேடி வருகின்றனர்.

    • திருமண அழைப்பிதழ் கார்டு வாங்குவது போல் மோசடி.
    • கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை நகரத்தில் உள்ள சின்னக்கடை வீதி என்பது முக்கியமான பகுதியாகும். இப்பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன.

    தினமும் காலை முதல் இரவு வரை இப்பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த சின்னக்கடை வீதியில் திருவண்ணாமலை குபேர நகரை சேர்ந்த சந்திரசேகர் என்பவரது மனைவி கவிதா என்பவர் திருமண அழைப்பிதழ் கார்டு மற்றும் நோட்டு புத்தகம் விற்பனை கடை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று பிற்பகல் 2.30 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் 'ஹெல்மெட்' அணிந்தபடி வந்த 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் 'ஹெல்மட்டை' கழற்றி மோட்டார் சைக்கிளில் வைத்துவிட்டு அந்த கடையில் திருமண அழைப்பிதழ் கார்டு வாங்குவது போன்று நின்று கொண்டிருந்தார்.

    கார்டு எடுப்பதற்காக கவிதா கடைக்குள் சென்ற போது அந்த வாலிபர் திடீரென கடைக்குள் புகுந்து அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரது கழுத்தில் இருந்த 10 பவுன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு அவரை தள்ளி விட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அந்த நபர் அங்கிருந்து சென்றுவிட்டார்.

    இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை சேகரித்து விசாரணை நடத்தினர்.

    அதில் வாலிபர் சின்னக்கடை வீதியில் வந்து பைக்கில் நிற்பது ஹெல்மெட்டை கழற்றி வைத்துவிட்டு திருமண அழைப்பிதழ் கடைக்கு சென்று செயினை பறித்து விட்டு வேகமாக வெளியே ஓடி வந்து பைக்கில் ஏறி செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளன.

    இந்த காட்சிகளை வைத்து போலீசார் செயின் பறிப்பு கொள்ளையனை தேடிவருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சாலையை கடக்க முயன்ற போது பஸ் மோதியது.
    • சாலையை கடக்க முயன்ற போது பஸ் மோதியது.

    செங்கம்:

    செங்கம் அருகே கரியமங்கலம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத ஒருவர் நடந்து சென்றார். அப்போது சேலத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது.

    ஜேப்பியார் பால்பண்ணை அருகே வந்த போது நடந்து சென்றவர் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அரசு பஸ் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் ஏசுராஜ் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரணை நடத்தி வருகிறார்.

    • 27-ந்தேதி அக்னி வசந்த விழா தொடங்கியது.
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகாவில் உள்ள பெரிய கொழப்பலூர் கிராமத்தில் திரெரோபதி அம்மன் கோவிலில் கடந்த 27ஆம் தேதி அலகு நிறுத்தி அக்னி வசந்த விழா தொடங்கியது.

    இதைதொடர்ந்து நேற்று கோவிலின் முன்பு 40 அடி உயரமுள்ள பனை மரத்தில் 16 படிக்கட்டுகள் அமைத்து அர்ஜுனன், குறவன், குறத்தி, வேடம் அணிந்து நாடக கலைஞர்கள் அர்ஜுனன் தபசு நிகழ்ச்சி நடத்தி காண்பித்தனர்.

    அப்போது குழந்தை வரம் வேண்டி விரதம் இருந்த பெண்கள் பனை மரத்தின் கீழே அமர்ந்தனர். அப்போது அர்ஜுனன் வேடமணிந்த நாடக கலைஞர் பனைமரத்தின் மேலே சென்று பூஜை செய்து மேலிருந்து எலுமிச்சம் பழங்களை பிரசாதமாக பெண்களுக்கு வழங்கினார்கள்.

    அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பெரிய கொழப்பலூர் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

    • கூச்சலிட்டதால் கொள்ளையர்கள் தப்பி ஓட்டம்
    • பெண்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

    சேத்துப்பட்டு, ஜூன்.8-

    திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அருகே ஆவியம்தாங்கள், கிராமத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி.

    இவரது மனைவி சிந்து (வயது 21).சிந்து, நேற்று முன்தினம் இரவு வீட்டி வெளியே உள்ள திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்தார் சுமார் 2 மணி அளவில் சிந்து கழுத்தில் அணிந்திருந்த 4சவரன் தங்க தாலி சரடை மர்ம நபர்கள் பிடித்து இழுத்தனர்.

    உடனே விழித்துக் கொண்ட சிந்து, திருடன் திருடன் என கூச்சலிட்டார் உடனே அக்கம் பக்கம் உள்ளவர்கள் வருவதற்குள் அங்கிருந்து மர்ம நபர்கள் 4சவரன் தங்க தாலி சரடு உடன் தப்பி ஓடிவிட்டனர்.இதேபோல் பெரணமல்லூர் அருகே உள்ள அன்மருதை கிராமத்தை சேர்ந்தவர் விஜய், இவரது மனைவி கீர்த்தனா (வயது 21).

    இவர் தனது வீட்டிற்குள் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது இரவு மர்ம நபர்கள் உள்ளே சென்று கீர்த்தனா, கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை சவரன் தங்க சங்கிலி மற்றும் 2 செல்போன்களை திருடி சென்றுள்ளனர்.அதே பகுதியை சேர்ந்தவர் ரமேஷ், இவரது வீட்டிற்குள் நள்ளிரவு புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த 2 செல்போன்களை திருடி சென்றுள்ளனர்.

    திருட்டு சம்பவங்கள் குறித்து தனித்தனியே பெரணமல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பக்தர்கள் காளி வேஷமிட்டு ஊர்வலமாக வந்தனர்.
    • ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம்.

    வந்தவாசி:

    வந்தவாசி பெரிய காலனியில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தை முன்னிட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் இந்த ஆண்டு வைகாசி மாதம் முன்னிட்டு மகா மாரியம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது.

    இதை தொடர்ந்து நடைபெற்ற திருவிழாவில் பக்தர்கள் காளி வேஷம் போட்டுக் கொண்டும் தீச்சட்டி ஏந்தியும் அலகு குத்திக்கொண்டு ஊர்வலமாக வந்தனர்.

    அப்போது வந்தவாசி தேரடி பகுதியில் வந்தபோது பக்தர்கள் முதுகில் அலகு குத்தி கொண்டு ஆகாயத்தில் பறந்தபடி அம்மனுக்கு மாலை அணிவித்து தீபாராதனை காண்பித்தனர்.

    இதைதொடர்ந்து அம்மன் ஊர்வலமாக புறப்பட்டு பஜார் வீதி பழைய பஸ் நிலையம் கோட்டை மூலை வழியாக மகா மாரியம்மன் கோவிலை சென்றடைந்தது. இந்த திருவிழாவில் வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ மகாமாரியம்மனை தரிசனம் செய்து சென்றனர்.

    • சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டம்
    • போலீசார் வராததால் பொதுமக்கள் தானாக கலைந்து சென்றனர்.

    ஆரணி:

    ஆரணி அருகே வேதாஜிபுரம் கிராமத்தில் ஊராட்சி செயலாளர் மற்றும் டேங்க் ஆப்ரேட்டர்ஆகியோர் கூட்டாக சேர்ந்து ஊராட்சியில் பல முறைகேடுகள் ஈடுபட்டுள்ளதாக ஊராட்சி மன்ற துணை தலைவர் சித்ரா ரங்கநாதன் ஆரணி ஒன்றிய அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

    இந்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் சித்ரா அருள்நாதன் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆரணி வேதாஜிபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மேலும் அரசு பஸ்சை சிறைபிடித்தனர்.

    உடனடியாக ஊராட்சி செயலாளர் ராஜா மற்றும் டேங்க் ஆபரேட்டர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஆரணி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

    போலீசார் யாரும் வராததால் பொதுமக்கள் தானாக முன்வந்து கலைந்து சென்றனர்.

    • மின் கம்பம் சீரமைக்கவும், தார் சாலை அமைக்கவும் கோரிக்கை
    • சந்தவாசல் புஷ்பகிரி ஏரி மதகு 5 ஆண்டுகளுக்கு மேலாக சீரமைக்கவில்லை.

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த சந்தவாசல் வேளாண்மைத் துறை அலுவலகத்தில் நேற்று 7ம்தேதி போளூர் வேளாண்மை உதவி இயக்குனர் குணசேகரன், வேளாண் மண்டல சிறப்பு முகாம் கோரிக்கை மனுக்கள் பெற்றார்.

    இதில் சீனிவாசன் என்பவர், சந்தவாசல் பாரதி நகரில் பழுதடைந்த மின் கம்பம் சீரமைக்கவும், மண்சாலைக்கு தார் சாலை அமைக்கவும் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சந்தவாசல் கிளை செயலாளர் சரவணன் என்பவர் தந்துள்ள கோரிக்கை மனுவில், செண்பகத்தோப்பு அணையிலிருந்து பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் இணைப்புக் கால்வாய் சீரமைக்கவும், அணைப்பகுதியில் உள்ள முட்புதர்கள் அகற்றி பூங்கா அமைத்து, சுற்றுலாத்தலமாக்க அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் (மார்க்சிஸ்ட்) சிவக்குமார் என்பவர் அளித்துள்ள மனுவில், சந்தவாசல் புஷ்பகிரி ஏரி மதகு பழுதடைந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு மேலாக சீரமைக்கவில்லை.

    இதனை சீரமைத்தால் ஏரிநீர்வரத்துக்கால்வாய் தண்ணீர் விவசாயிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என கூறியுள்ளார்.

    ×