என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேரோட்டம் பங்குனி மாதமும் நடைபெறும்"

    • ரூ.45.23 லட்சம் செலவில் 2 புதிய மரத் தேர்கள்
    • தேர் வெள்ளோட்டத் தேதி விரைவில் அறிவிப்பு

    வந்தவாசி:

    வந்தவாசியில் ஜலகண்டேஸ்வரர் கோவிலின் தேரோட்டம் ஆண்டுதோறும் மாசி மாதமும், ரங்கநாதப் பெருமாள் கோவிலின் தேரோட்டம் பங்குனி மாதமும் நடைபெறும்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்த கோவில்களில் 2 மரத் தேர்களும் சேதம் அடைந்ததால் மொத்தம் ரூ.45.23 லட்சம் செலவில் 2 புதிய மரத் தேர்கள் செய்யும் பணி இந்த கோயில்களின் அருகில் நடைபெற்று வருகிறது. தற்போது இரு தேர்களும் வெள்ளோட்டத்துக்கு தயார் நிலையில் உள்ளது.

    இந்த நிலையில் வந்தவாசி எம்.எல்.ஏ. எஸ்.அம்பேத்குமார் தேர் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது தேர் வெள்ளோட்டத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

    திமுக மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன், நகரச் செயலர் தயாளன், நகர்மன்றத் தலைவர் எச்.ஜலால், தேர் திருப்பணிக் குழுவைச் சேர்ந்த நாராயணன், பானுகோபன், திலீப் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    ×