என் மலர்
நீங்கள் தேடியது "செயின்கள் பறிப்பு"
- கூச்சலிட்டதால் கொள்ளையர்கள் தப்பி ஓட்டம்
- பெண்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
சேத்துப்பட்டு, ஜூன்.8-
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அருகே ஆவியம்தாங்கள், கிராமத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி.
இவரது மனைவி சிந்து (வயது 21).சிந்து, நேற்று முன்தினம் இரவு வீட்டி வெளியே உள்ள திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்தார் சுமார் 2 மணி அளவில் சிந்து கழுத்தில் அணிந்திருந்த 4சவரன் தங்க தாலி சரடை மர்ம நபர்கள் பிடித்து இழுத்தனர்.
உடனே விழித்துக் கொண்ட சிந்து, திருடன் திருடன் என கூச்சலிட்டார் உடனே அக்கம் பக்கம் உள்ளவர்கள் வருவதற்குள் அங்கிருந்து மர்ம நபர்கள் 4சவரன் தங்க தாலி சரடு உடன் தப்பி ஓடிவிட்டனர்.இதேபோல் பெரணமல்லூர் அருகே உள்ள அன்மருதை கிராமத்தை சேர்ந்தவர் விஜய், இவரது மனைவி கீர்த்தனா (வயது 21).
இவர் தனது வீட்டிற்குள் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது இரவு மர்ம நபர்கள் உள்ளே சென்று கீர்த்தனா, கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை சவரன் தங்க சங்கிலி மற்றும் 2 செல்போன்களை திருடி சென்றுள்ளனர்.அதே பகுதியை சேர்ந்தவர் ரமேஷ், இவரது வீட்டிற்குள் நள்ளிரவு புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த 2 செல்போன்களை திருடி சென்றுள்ளனர்.
திருட்டு சம்பவங்கள் குறித்து தனித்தனியே பெரணமல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






