என் மலர்
உள்ளூர் செய்திகள்

பழுதான நிலையில் மின் கம்பம்.
செண்பகத்தோப்பு அணையில் பூங்கா அமைத்து சுற்றுலா தலமாக்க வேண்டும் -விவசாயிகள் சங்கத்தினர் மனு
- மின் கம்பம் சீரமைக்கவும், தார் சாலை அமைக்கவும் கோரிக்கை
- சந்தவாசல் புஷ்பகிரி ஏரி மதகு 5 ஆண்டுகளுக்கு மேலாக சீரமைக்கவில்லை.
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த சந்தவாசல் வேளாண்மைத் துறை அலுவலகத்தில் நேற்று 7ம்தேதி போளூர் வேளாண்மை உதவி இயக்குனர் குணசேகரன், வேளாண் மண்டல சிறப்பு முகாம் கோரிக்கை மனுக்கள் பெற்றார்.
இதில் சீனிவாசன் என்பவர், சந்தவாசல் பாரதி நகரில் பழுதடைந்த மின் கம்பம் சீரமைக்கவும், மண்சாலைக்கு தார் சாலை அமைக்கவும் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சந்தவாசல் கிளை செயலாளர் சரவணன் என்பவர் தந்துள்ள கோரிக்கை மனுவில், செண்பகத்தோப்பு அணையிலிருந்து பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் இணைப்புக் கால்வாய் சீரமைக்கவும், அணைப்பகுதியில் உள்ள முட்புதர்கள் அகற்றி பூங்கா அமைத்து, சுற்றுலாத்தலமாக்க அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் (மார்க்சிஸ்ட்) சிவக்குமார் என்பவர் அளித்துள்ள மனுவில், சந்தவாசல் புஷ்பகிரி ஏரி மதகு பழுதடைந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு மேலாக சீரமைக்கவில்லை.
இதனை சீரமைத்தால் ஏரிநீர்வரத்துக்கால்வாய் தண்ணீர் விவசாயிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என கூறியுள்ளார்.






