என் மலர்
திருவண்ணாமலை
- நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
- அரசின் முழு மானியமாக ஒதுக்கீடு செய்ய அனுமதி.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் புதிய பஸ் பஸ் நிலையம் அமைப்பதற்காக சுமார் 7 ஏக்கர் நிலம் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டு நகரமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
திருவண்ணாமலை நகர மன்ற சாதாரண கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர மன்றத் தலைவர் நிர்மலாவேல்மாறன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் முருகேசன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
திருவண்ணாமலை நகராட்சியில் ஈசான்யம் பகுதியில் உள்ள உரங்கிடங்களில் உள்ள குப்பைகளை அகற்ற மறு கணக்கெடுப்பு செய்யும் பணிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் உள்ள பல்வேறு வார்டுகளில் மழை நீர் வடிகால்வாய், தார் சாலை, குடிநீர் வசதி, சிமெண்டு சாலையுடன் பக்க கால்வாய் அமைத்தல், உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யும் பணி செய்வது.
திருவண்ணாமலை நகராட்சியில் புதிய பஸ் நிலையம் அமைத்திட வேளாண்மைத் துறையின் கீழ் இயங்கு டான்காப் நிறுவனத்திற்கு சொந்தமான 6.83 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது.
டான்காப் இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க ரூ.3 கோடியே 99 லட்சம் நகராட்சி மூலம் வழங்க போதிய நிதி ஆதாரம் இல்லாத காரணத்தால் வேளாண்மை உற்பத்தி இயக்குனர் கோரிய பணத்தை அரசின் முழு மானியமாக ஒதுக்கீடு செய்ய அனுமதிக்கப்பட்டது.
புதிய பஸ் நிலையம் அமைத்திட திட்ட அறிக்கை தயாரித்திட ஏதுவாக மண் பரிசோதனை செய்திட வேண்டியுள்ளது. அனுபவம் வாய்ந்த தனியார் ஏஜென்சியை நியமித்து பணிகளை செய்திட அனுமதிக்கப்பட்டது.
ஆனைக்கட்டித் தெருவில் அமைந்து உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ள காரணத்தினால் கூடுதல் கட்டிடம் கட்ட அனுமதி வழங்குவது.
நகராட்சியின் உலகலாப்பாடி தலைமை நீரேற்று நிலைத்திலிருந்து குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு ராதாபுரம் காட்டி உள்ள தரைமட்ட நீர் தேக்க தொட்டியில் சேகரிக்கப்பட்டு நகரில் அண்ணா நகர் நீர் உந்து நிலையங்கள் வழியாக நகராட்சி பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த இடங்களில் மோட்டார் இயக்கத்தின் தன்மை மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்திட கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் நகராட்சி பொறியாளர் அறையில் மானிட்டர் அமைத்திட அனுமதி அளிக்கப்படுவது என்பன உள்ளிட்ட 88 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நகராட்சி பொறியாளர் நீலேஸ்வரர், மேலாளர் ஸ்ரீபிரகாஷ், நகர்நல அலுவலர் மோகன், உதவி பொறியாளர்கள் ரவி, ரவிச்சந்திரன், துப்புரவு ஆய்வாளர்கள் கார்த்திகேயன், செல்வகுமார் மற்றும் தி.மு.க., அ.தி.மு.க. நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- 5 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் திருடி சென்றுள்ளனர்.
- கைரேகை நிபுணர்களும் ரேகைகளை பதிவு செய்தனர்.
கலசபாக்கம்:
கலசபாக்கம் அருகே தேவனாம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட காட்டுப்புத்தூர் ஈச்சங்காடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்.
இவர் தனது மகன் திருமண விழாவிற்காக உறவினர்கள் மற்றும் குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றனர்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று காலை வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைத்து உள்ளே இருந்த தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள், ரொக்க பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
இதேபோன்று அடுத்தடுத்த வீடான சுரேஷ், சந்தோஷ் ஆகியோரின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த தங்க நகைகள், பணத்தை திருடிச்சென்றுள்ளனர்.
3 வீடுகளில் சுமார் 5 பவுன் நகை, ரூ.50 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து முருகன், சந்தோஷ், சுரேஷ் ஆகியோர் தனித்த னியே கலசபாக்கம் போலீசில் புகார் செய்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் ரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர் களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- குடும்ப தகராறு காரணமாக மனஉலைச்சலுக்கு ஆளானார்.
- போலீசார் விசாரணை
கண்ணமங்கலம்:
சந்தவாசல் அருகே கிருஷ்ணாபுரம் கிராமத்தில் ரோடு தெரு வில்வசிப்பவர் மன்னார்சாமி மகன் மணிகண்டன் (வயது 30). இவர் சந்தவாசல் மின் வாரிய அலுவலகத்தில் கேங் மேன் ஆக பணி புரிந்துவருகிறார்.
குடும்ப தகராறு காரணமாக மணிகண்டன் மனஉலைச்சலுக்கு ஆளானார். கடந்த 7-ந்தேதி பயிருக்கு தெளிக்க வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார்.
மணிகண்டனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி மணிண்டன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மீனா சந்தவாசல் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 36 அரசு துறைகளின் மூலம் 35 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
- முதலமைச்சர் விழாவின் போது அதிக அளவில் எஸ்.டி. சான்றிதழ் வழங்க நடவடிக்கை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழக முதல்- அமைச்சர் வருகைக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டார்.
திருவண்ணாமலைக்கு தமிழக முதல்- அமைச்சர் வருகைக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, சி.என்.அண்ணாதுரை எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி வரவேற்றார்.
கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
திருவண்ணாமலைக்கு வருகிற 22-ந் தேதி தமிழக முதல்- அமைச்சர் வருகை தருவதாக இருந்தது. அதில் சிறிய மாற்றம் ஏற்பட்டு உள்ளது. முதல்- அமைச்சர் 21-ந் தேதி வேலூர், திருப்பத்தூர் நிகழ்ச்சியை முடித்து சென்னை செல்கிறார். பின்னர் 2 நாட்கள் கழித்து மீண்டும் சென்னையில் இருந்து திண்டிவனம் வழியாக திருவண்ணாமலைக்கு வருகை தர உள்ளார். அன்று காலையில் திருவண்ணாமலையில் அரசு நிகழ்ச்சியை முடித்து விட்டு மாலையில் கள்ளக்குறிச்சியில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.a
இருப்பினும் தவிர்க்க முடியாத காரணம் ஏற்பட்டால் அதிகபட்சமாக இந்த நிகழ்ச்சி ஒருவாரம் தள்ளி போகலாம். கண்டிப்பாக திருவண்ணாமலைக்கு முதல்- அமைச்சர் வருகை தர உள்ளார்.
எனவே தமிழக முதல்- அமைச்சர் திருவண்ணாமலைக்கு வருவதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். முதல்- அமைச்சருக்கான அரசு நிகழ்ச்சி நடைபெற உள்ள இடம் மாவட்ட நிர்வாகத்தினால் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
அந்த இடத்தில் 20 ஆயிரம் பயனாளிகள் அமரும் வகையில் பொதுப்பணித்துறையின் மூலம் பந்தல் அமைக்கப்பட உள்ளது. தற்போது 36 அரசு துறைகளின் மூலம் 35 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
இதில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் என அனைத்து பகுதிகளில் இருந்து 20 ஆயிரம் பயனாளிகளை முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்து அவர்களை நலத்திட்ட உதவிகள் வழங்கும் நாளன்று அழைத்து வர தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும்.
பயனாளிகளுக்கு தேவையான உணவு, குடிநீர் வசதி மேற்கொள்ள வேண்டும். பயனாளிகளை நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்கு அழைத்து வந்து அமர வைப்பதற்கான பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளை பந்தலின் முன் பகுதியில் அமர வைப்பதற்கான இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். நிகழ்ச்சி நடைபெறும் இடம் அருகில் மருத்துவக்குழு தயார் நிலையில் இருக்க வேண்டும். தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை வேண்டும். ஜெனரேட்டர் வசதியும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
இந்த மாவட்டத்தில் எஸ்.டி. சான்றிதழ் தொடர்பாகவும், சுடுகாடு பிரச்சினை தொடர்பாகவும் அதிகளவு மனுக்கள் வருகின்றன. முதலமைச்சர் விழாவின் போது அதிக அளவில் எஸ்.டி. சான்றிதழ் அதிக அளவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுடுகாடு பாதை பிரச்சினையே இல்லாத அளவில் அரசு அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்படும் அனைத்து பயனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்ட பின்னர் தான் அங்கிருந்து அழைத்து செல்லப்பட வேண்டும்.
திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப்பாதை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி. சரவணன், ஓ.ஜோதி, அம்பேத்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனிவாசன், துணை தலைவர் பாரதிராமஜெயம், ஒன்றியக்குழுத் தலைவர்கள் கலைவாணிகலைமணி, பரிமளா கலையரசன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கூலி வேலை செய்து கொண்டிருந்த ஜெயசீலன் நேற்று முன்தினம் இரவு திடீர் உடல்நிலை குறைவால் இறந்தார்.
- அதிர்ச்சியடைந்த குழந்தைகள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர். தந்தையின் இறுதி சடங்கு செய்யகூட பணம் இல்லாமல் நிலைகுலைந்து நின்றனர்.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ராட்டிணமங்கலம் கிராமத்தை சேர்ந்த கூலிதொழிலாளி ஜெயசீலன் (46). இவரது மனைவி மகேஸ்வரி தம்பதியினருக்கு சக்திவேல் (17) ரஞ்சித் (15) வரலட்சுமி (11) ஆகிய 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உமாமகேஸ்வரி உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார்.
இந்நிலையில் 10 ஆண்டுகளாக ஜெயசீலன் கூலி வேலை செய்து தனது இரண்டு மகன்களையும், ஒரு மகளையும் படிக்க வைத்து காப்பாற்றியுள்ளார்.
தற்பொழுது சக்திவேல் 12-ம் வகுப்பு, ரஞ்சித் 10-ம் வகுப்பு, வரலட்சுமி 7-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இந்நிலையில் கூலி வேலை செய்து கொண்டிருந்த ஜெயசீலன் நேற்று முன்தினம் இரவு திடீர் உடல்நிலை குறைவால் இறந்தார்.
அதிர்ச்சியடைந்த குழந்தைகள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர். தந்தையின் இறுதி சடங்கு செய்யகூட பணம் இல்லாமல் நிலைகுலைந்து நின்றனர்.
இதனைக் கண்ட ராட்டிணமங்கலம் புதிய காலனி பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பணம் வசூல் செய்து இறுதி சடங்குகளை செய்தனர்.
தாயை இழந்து தந்தையின் அரவணைப்பால் 10 ஆண்டு காலம் வாழ்ந்து வந்த மகள் மற்றும் மகன்கள் தந்தையின் இறுதி சடங்கை செய்வதற்கு கூட பணம் இல்லாமல் பரிதாபமாக நின்ற சம்பவம் ராட்டிணமங்கலம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
இது மட்டுமன்றி 3 குழந்தைகளின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாக உள்ளன. அவர்களுக்கு அரசு உதவி செய்யவேண்டும் என உதவி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- திருவண்ணாமலை மாவட்டத்திற்கு புதிய போலீஸ் சூப்பிரண்டு நியமனம்
- கஞ்சா, கள்ளச்சாராயம், ரவுடிசம், திருட்டு வழிப்பறி மற்றும் குற்றச்செயல்களை குறைக்க கடுமையான நடவடிக்கை.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த பவன்குமார் ரெட்டி சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
அவரை தொடர்ந்து சென்னை கீழ்ப்பாக்கத்தில் துணை கமிஷனராக பணியாற்றி வந்த டாக்டர் கே.கார்த்திகேயன் திருவண்ணாமலை மாவட்ட 26-வது போலீஸ் சூப்பிரண்டாக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் ஏற்கனவே கடலூர் மாவட்டத்தில் முதுகலை பல் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். மேலும் அங்குள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் ஒரு வருடம் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். முடித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பயிற்சி பெற்று வந்துள்ளார்.
பின்பு சென்னை ஸ்ரீபெரும்புதூர் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்தார்.
தொடர்ந்து சென்னை கீழ்ப்பாக்கம் துணை கமிஷனராக பணியாற்றி வந்தார். இதனைத் தொடர்ந்து. தற்போது அங்கிருந்து மாற்றப்பட்டு திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இன்று பதவி ஏற்றுக்கொண்டுள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது மாவட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் கஞ்சா, கள்ளச்சாராயம், ரவுடிசம், திருட்டு வழிப்பறி மற்றும் இதர குற்றச்செயல்களை குறைக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
பெண்கள் குழந்தை கள் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
முன்னதாக புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு கார்த்திகேயனுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் நேரில் வந்து சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
- முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. நலத்திட்ட உதவி வழங்கினார்
- 4 நாட்களாக நிகழ்ச்சி நடந்தது
போளூர்:
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகாவில் அலுவலகத்தில் கடந்த 4 நாட்களாக 1431 -வது ஜமாபந்தி மற்றும் விவசாயிகள் மாநாடு நடந்தது.
விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பல்வேறு மனுக்கள் பெறப்பட்டு அதனை பரிசீலனை செய்யப்பட்டு நேற்று நடந்த நிறைவு விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் திருவண்ணாமலை கலெக்டரின் நேர்முக உதவியாளர் கணேசன் தலைமை தாங்கினார். போளூர் தாசில்தார் சண்முகம் அனைவரையும் வரவேற்றார்.
கலசப்பாக்கம் சரவணன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
இந்த நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கலந்துகொண்ட போளூர் எம்.எல்.ஏ. அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் போளூர் ஒன்றியக்குழு தலைவர் சாந்தி பெருமாள், பேரூராட்சி தலைவர் ராணி சண்முகம்மற்றும் அரசு துறையை சேர்ந்த பல்வேறு அலுவலர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் தனி தாசில்தார் செந்தில்குமார் நன்றி கூறினார்.
- சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பொருட்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
- வனத்துறை மற்றும் ஊராட்சி சார்பில் நடத்தினர்.
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த படவேடு ஊராட்சியில், மாசில்லா ஊராட்சி திட்டத்தின் கீழ் வீரகோவில் வளாகத்தில் வனத்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் இணைந்து பிளாஸ்டிக் பொருட்கள் இன்றி துணிப்பை போன்ற சுற்று சூழலுக்கு ஏற்ற பொருட்களை பயன்படுத்தும் வகையில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
இதில் சந்தவாசல் வனசரக அலுவலர் செந்தில்குமார், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஐகோர்ட்டு வழக்கறிஞர் தனஞ்செயன், படவேடு ஊராட்சி தலைவர் சீனிவாசன், வனகாவலர்கள் நவநீதகிருஷ்ணன், அஜித்குமார், பால் கூட்டறவு தலைவர் சங்கர், முன்னாள் கவுன்சிலர் ரகு, உள்பட பணித்தள பொறுப்பாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- 3 யாக குண்டங்கள் அமைத்து வழிபாடு.
- பக்தர்கள் மீது புனித நீர் தெளித்தனர்.
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் அருகே உள்ள சாத்தப்பூண்டி, கிராமத்தில் ரேணுகாம்பாள் கோவில் உள்ளது.
இந்த கோவிலை புதிதாக புதுப்பித்து பஞ்ச வர்ணம் பூசி இதன் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. கோவிலின் முன்பு யாகசாலை அமைத்து, 3 யாக குண்டங்கள் அமைத்து, பல்வேறு நதியிலிருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் கலசத்தை வைத்து.
கோ பூஜை, கணபதி பிரார்த்தனை, மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், ஆகிய மூன்று கால பூஜைகள் செய்யப்பட்டது. புனிதநீர் கலசத்தை கோவிலை சுற்றி வந்து கோவில் மீது உள்ள விமான கோபுரத்தின் மீது புனித நீரை ஊற்றினார்கள்.
பின்னர் அங்கு கூடி இருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளித்தனர்.
கும்பாபிஷேக விழாவில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தரணி வேந்தன், வந்தவாசி தொகுதி அம்பேத்குமார், எம்எல்ஏ.செய்யாறு தொகுதி ஜோதி, எம்எல்ஏ. உள்பட பலர் பங்கேற்றனர்.
- 23-ந் தேதி நடக்கிறது
- மகாபாரத சொற்பொழிவு நடந்து வருகிறது.
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த கீழ்அரசம்பட்டில் திரவுபதி அம்மன் கோவிலில் கடந்த 5-ந் தேதி முதல் அம்மனுக்கு அலகு நிறுத்தி, மகாபாரதத் திருவிழா நடந்து வருகிறது.
தினமும் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்று வருகிறது.
ஜூன் 13-ந் தேதி முதல் இரவில் பெருங்கட்டூர் கட்டைக்கூத்து குழுவினரின் மகாபாரத நாடகங்கள் நடக்கிறது. 23-ந் தேதி காலை துரியோதனன் படுகளம் மாலையில் தீமிதி விழா நடக்கிறது.
மறுநாள் 24-ந் தேதி தருமர் பட்டாபிஷேகம் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
- கணவன்- மனைவி படுகாயம்.
- போலீசார் விசாரணை.
கலசப்பாக்கம்:
கலசப்பாக்கம் அடுத்த சோழவரம் கிராமத்தை சேர்ந்தவர் அருள்நாதன் வயது (42) என்பவர் தனது நண்பரிடம் மோட்டார் சைக்கிளை வாங்கிக் கொண்டு சொந்த வேலை காரணமாக சோழவரத்தில் இருந்து எர்ணாமங்கலம் கிராமத்திற்கு நேற்று முன்தினம் இரவு சென்றார்.
அப்போது அவரது மாமா சுப்பிரமணி (76) என்பவரையும் உடன் அழைத்து சென்றார். பூவாம்பட்டு கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் அவரது மனைவி பழனியம்மாளுடன் பைக்கில் வானம் பட்டு கிராமத்திலிருந்து பூவம் பட்டு செல்வதற்காக சோழபுரம் நோக்கி மெயின்ரோட்டில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது சோழவரம் கூட்ரோடு அருகே வந்தபோது 2 பைக்கும் நேருக்கு நேர் எதிர் பாராத விதமாக மோதியது.
இதில் அருள்நாதனுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். உடன் வந்த சுப்பிரமணிக்கும் படுகாயம் ஏற்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மேலும் எதிரே வந்து மோதிய ராஜ்குமார் அவரது மனைவி பழனியம்மாள் ஆகிய இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டு திருவண்ணாமலை மருத்துவமனையில் சிகிச்சை ெபற்று வருகின்றன.
இச்சம்பவம் குறித்து கலசபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- 747 பேர் மனு அளித்தனர்.
- 134 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் 1431ஆம் பசலிகான வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி விழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.இதில் தச்சாம்பாடி, நெடுங்குணம், பெரியகொழப்பலூர், தேவிகாபுரம், ஆகிய 4 பிர்காகளுக்கு 4நாட்கள் ஜமாபந்தி விழா நடந்தது.
இதில் பல்வேறு கோரிக்கைகளுக்கு 747 பேர் மனு அளித்தனர். இந்த மனுக்களை தணிக்கை செய்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் ஜமாபந்தி நிறைவு விழா நேற்று நடந்தது.விழாவிற்கு மாவட்ட சமூக பாதுகாப்பு தனித்துணை ஆட்சியர் வெங்கடேசன், தலைமை தாங்கினார்.சேத்துப்பட்டு தாசில்தார் கோவிந்தராஜ், சமூக பாதுகாப்பு தாசில்தார் தாசில்தார் குமரவேல், வட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ்பாபு, சேத்துப்பட்டு பேரூராட்சி மன்ற தலைவர் சுதா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அனைவரும் மண்டல துணை தாசில்தார் சரவணன், வரவேற்றார்.இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சேத்துப்பட்டு ஒன்றிய குழு தலைவர் ராணிஅர்ஜுனன். பெரணமல்லூர் ஒன்றிய குழு தலைவர் இந்திரா இளங்கோவன், ஆகியோர் கலந்து கொண்டு முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்தி றனாளிகளுக்கான உதவித் தொகை, பட்டா பெயர் மாற்றம், நத்தம் தூய சிட்டா, வண்டல் மண் அனுமதி, இ நகல், வேளாண் உழவர் துறை மூலம் தெளிப்பான், உள்ளிட்ட 134 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினர்.
விழாவில் சேத்துப்பட்டு ஒன்றிய திமுக செயலாளர் எழில்மாறன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் முருகையன், சேத்துப்பட்டு திமுக நகர செயலாளர் முருகன், சேத்துப்பட்டு வேளாண்மை அலுவலர் இலக்கியா, வருவாய் ஆய்வாளர்கள் கன்னியப்பன், சுப்பிரமணியன், ஹேமலதா, ராதாகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்துறை ஊழியர்கள், கிராமஉதவியாளர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர், முடிவில் கிராம நிர்வாக அலுவலர் ஜான்சன், நன்றி கூறினார்.






