என் மலர்
நீங்கள் தேடியது "தங்க நகைகள் வெள்ளி பொருட்கள் திருட்டு"
- உண்டியலை வாழைதோட்டத்தில் வீசி சென்ற கும்பல்
- போலீசார் விசாரணை
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அடுத்த கந்திலி அருகே சின்ன கன்னால பட்டி கிராமத்தில் தேசத்து மாரியம்மன் கோவில் உள்ளது.
கோவில் தினமும் காலையில் திறப்பதும், மாலையில் மூடி செல்வதும் வழக்கம். நேற்று முன்தினம் பூஜாரி பூஜைகளை முடித்துவிட்டு மாலை கோவிலை பூட்டி சென்று விட்டார்.
நேற்று காலை கோவிலில் திறப்பதற்காக வந்தார். அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது அம்மன் கழுத்தில் இருந்த 2 பவுன் தங்க செயின், 2 வெள்ளி குத்து விளக்கு மற்றும் உண்டியல் காணிக்கை பணம் ஆகியவற்றை மர்ம கும்பல் திருடி சென்றிருப்பது தெரிய வந்தது.
மேலும் உண்டியலை கோவிலில் இருந்து சுமார் 100 அடி தொலைவில் உள்ள வாழை தோட்டத்தில் வீசி சென்றுள்ளனர்.
இதே போல செம்மினி கொல்லி மேடு பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் அம்மன் கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் தாலி செயின், பூஜைக்கு பயன்படுத்தும் வெள்ளி, வெண்கலம் பொருட்களையும் திருடி சென்றனர்.
அடுத்தடுத்து ஒரே இரவில் 2 கோவில்களின் பூட்டை உடைத்து திருடி சென்று இருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து கோவில்களில் திருடி சென்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
- 5 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் திருடி சென்றுள்ளனர்.
- கைரேகை நிபுணர்களும் ரேகைகளை பதிவு செய்தனர்.
கலசபாக்கம்:
கலசபாக்கம் அருகே தேவனாம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட காட்டுப்புத்தூர் ஈச்சங்காடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்.
இவர் தனது மகன் திருமண விழாவிற்காக உறவினர்கள் மற்றும் குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றனர்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று காலை வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைத்து உள்ளே இருந்த தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள், ரொக்க பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
இதேபோன்று அடுத்தடுத்த வீடான சுரேஷ், சந்தோஷ் ஆகியோரின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த தங்க நகைகள், பணத்தை திருடிச்சென்றுள்ளனர்.
3 வீடுகளில் சுமார் 5 பவுன் நகை, ரூ.50 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து முருகன், சந்தோஷ், சுரேஷ் ஆகியோர் தனித்த னியே கலசபாக்கம் போலீசில் புகார் செய்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் ரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர் களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






