என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • மீன் பிடிக்க உரிமை உள்ளதாக முழக்கங்களை எழுப்பினர்.
    • 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    வந்தவாசி:

    வந்தவாசி அருகே ஏரியில் மீன் பிடிப்பதை ஒரு கிராமத்தினர் தடுத்ததை கண்டித்து மற்றொரு கிராமத்தினர் சாலை மறியல் செய்தனர்.

    வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி நீரினை மருதாடு மற்றும் கடைசிகுளம் கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கடைசிகுளம் கிராமத்தைச் சேர்ந்த சிலர் ஞாயிற்றுக்கிழமை காலை அந்த ஏரியில் மீன் பிடிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது மருதாடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கடைசிகுளம் கிராமத்தினரை மீன் பிடிக்கக் கூடாது என்று தடுத்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து தாங்கள் மீன் பிடிப்பதை தடுத்ததைக் கண்டித்து கடைசிகுளம் கிராம மக்கள் அந்த கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, மருதாடு ஏரியில் மீன் பிடிக்க தங்களுக்கும் உரிமை உள்ளதாக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

    தகவலறிந்து அங்கு சென்ற வந்தவாசி வடக்கு போலீசார் சமரசம் செய்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தினால் வந்தவாசி-மேல்மருவத்தூர் சாலையில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்
    • கேக் வெட்டி கொண்டாட்டம்

    போளூர்:

    போளூரில் நேற்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு முருகன் கோவிலில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. போளூர் நற் குன்று ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தில் நேற்று காலையில் முருகனுக்கு பாலபிஷேகம் செய்து கால பூஜை நடைபெற்றது.பின்பு மாலை 6 மணியளவில் முருகனுக்கு பக்தர்கள் 2 கிலோ கேக் வெட்டி முருகனின் பிறந்தநாளான நேற்று வைகாசி விசாகத்தை சிறப்பாக கொண்டாடினர்.

    அதேபோல் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு முருகன் கோவிலில் உள்ள சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. போளூர் கைலாசநாதர் கோயில், மாம்பட்டு, பெரணம்பாக்கம், வசூர் போன்ற இடங்களில் உள்ள சிவன் கோவில்கள் பிரதோஷங்கள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • ஆந்திராவை சேர்ந்தவர்
    • போலீசார் ரோந்து வாகனம் மூலம் தொடர்ந்து கண்காணிப்பு.

    திருவண்ணாமலை:

    ஆன்மிக நகரமான திருவண்ணாமலையில் கிரிவலப்பாதை முக்கிய பகுதியாகும். இந்த கிரிவலப்பாதையில் நூற்றுக்கணக்கான சாதுக்கள் தங்கி உள்ளனர். அதுமட்டுமின்றி தினமும் பக்தர்கள் பலர் கிரிவலம் செல்கின்றனர்.

    பக்தர்களின் பாதுகாப்பை கருதி காவல் துறை சார்பில் பகல், இரவு நேரங்களில் ரோந்து வாகனம் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

    இந்த நிலையில் நேற்று பகல் சுமார் 12 மணியளவில் கிரிவலப்பாதையில் உள்ள பழனியாண்டர் கோவில் அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் அந்த வழியாக சென்ற மக்கள் மற்றும் அங்கிருந்த சாதுக்களிடம் தகாத வார்த்தைகளால் பேசி தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து அங்கிருந்தவர்கள் திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கிரிவலப்பாதை ரோந்து போலீசார் மற்றும் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    அப்போது அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் கஞ்சா போதையில் இருந்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில் அவர் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் அந்த வாலிபர் வந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    மேலும் அந்த நபர் கஞ்சா போதையில் இருந்ததால் அவரை போலீசார் அங்கேயே விட்டு சென்றனர். போலீசார் இருக்கும் வரை அமைதியாக இருந்த அவர் போலீசார் சென்றதும் அங்கும், இங்கும் நடந்து கொண்டு சத்தம் போட்டு கொண்டிருந்தார். போலீசாரின் அலட்சிய நடவடிக்கையால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.

    • திருவண்ணாமலையில் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சிவனாக வழிபடுவதால் பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
    • ஞாயிற்றுக்கிழமை விடுமுறை மட்டுமின்றி வைகாசி விசாகம் என்பதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    திருவண்ணாமலை:

    நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது.

    இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். திருவண்ணாமலையில் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சிவனாக வழிபடுவதால் பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    இந்த மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் இன்று (திங்கட்கிழமை) இரவு 8.20 மணியளவில் தொடங்குகிறது.

    தொடர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5.55 மணியளவில் கிரிவலம் நிறைவடைகிறது.

    நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை மட்டுமின்றி வைகாசி விசாகம் என்பதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    பக்தர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    பிரதோஷத்தை முன்னிட்டு கோவில் பிரகாரத்தில் உள்ள பெரிய நந்தி உள்ளிட்ட நந்தி பகவானுக்கும், சாமிக்கும் பால், தேன், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • வீடு புகுந்து வாலிபர் வெறிச்செயல்
    • காதலை ஏற்குமாறு அடிக்கடி வற்புறுத்தி வந்துள்ளார்.

    திருவண்ணாமலை:

    கலசப்பாக்கம் அடுத்த கடலாடி பகுதியில் ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். காஞ்சி அடுத்த மேல்பாலூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்வாணன் (வயது 25) என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கல்லூரி மாணவியை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    மாணவியிடம் தன் காதலை ஏற்குமாறு அடிக்கடி வற்புறுத்தி வந்துள்ளார்.

    இந்த நிலையில் மாணவியின் வீட்டிற்கு நேரடியாக சென்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன் காதலை எடுத்துக் கூறி ஏற்றுக்கொள்ளுமாறு அந்த மாணவியிடம் தமிழ்வாணன் வலியுறுத்தியுள்ளார்.

    மாணவி மறுத்ததால் ஆத்திரமடைந்த தமிழ்வாணன் மாணவியை கன்னத்தில் அறைந்துவிட்டு கழுத்து நெரித்து கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தபோது வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இது சம்பந்தமாக மாணவி கொடுத்த புகாரின் பேரில் கடலாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வாலிபரை தேடி வருகின்றனர்.

    • தண்ணீர் வீணாக வெளியேறியது
    • ஏரியின் மதகை சீர்செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தில் மாவட்டத்திலேயே இரண்டாவது மிகப்பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியை நம்பி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஏரியின் மதகை மர்ம நபர்கள் சிலர் உடைதததாக கூறப்படுகிறது.

    இதனால் சுமார் 300க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களில் தண்ணீர் மூழ்கி பயிர்கள் நாசமானது.

    இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர் இந்தநிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மதகில் இருந்து வெளியேறும் தண்ணீரை சரியான முறையில் சீரமைப்பு செய்யாததால். நேற்று இரவு மீண்டும் ஏரியின் மதகு உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறியது.

    இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களில் தண்ணீரில் முழுகி நெற் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே இரண்டு மாதம் தண்ணீர் வீணாக வெளியேறிய நிலையில் தற்போது ஒரு மாதம் தண்ணீர் வீணாக வெளியேறியது கோடை காலங்களில் தண்ணீர் கிடைக்காத நிலையில் தற்போது ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறி வருவதால் எதிர்காலங்களில் விவசாயிகளுக்கும் நிலத்தடி நீர் ஆதாரத்திற்கம் பெரும் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலையில் இருந்து வருகிறது.

    பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையாக நடவடிக்கை எடுத்து ஏரியின் மதகை சீர்செய்து ஏரியில் இருந்து தண்ணீரை வெளியேறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.‌

    • மஞ்சள் நீராட்டு விழாவுக்கு சென்று திரும்பியபோது விபத்து
    • லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    வேட்டவலம்:

    வேட்டவலம் பாரதிதாசன் தெருவை சேர்ந்த வீரன் என்பவர் மகளின் மஞ்சள் நீராட்டு விழா நேற்று முன்தினம் மாலை வேட்டவலத்தில் விழுப்புரம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது.

    நிகழ்ச்சியில் அவரது உறவினர்களான விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகா வி.புதூர் கிராமத் தைச் சேர்ந்த பெருமாள் (வயது 50) என்பவரும் வேட் டவலம் பாரதி தெருவை சேர்ந்த கர்ணன் என்பவரின் மனைவி கலா (42) உள்பட உறவினர்கள் கலந்து கொண்டனர்.

    இரவு 9.30 மணி அளவில் நிகழ்ச்சி முடிந்ததும் , கலா உற வினரான பெருமாளிடம் தன் னுடன் வீட்டுக்கு வந்து வீட் டில் உள்ளவர்களை பார்த்து விட்டு செல்லுமாறு கூறியுள்ளார். இதையடுத்து இருவரும் மண்டபத்தில் இருந்து சிறிது தூரம் நடந்து சென்றனர்.

    அப்போது திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற பார்சல் சர் வீஸ் லாரி இவர்கள் மீது எதிர் பாராத விதமாக மோதியது. இதில் பெருமாள், கலா இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

    உடனடியாக இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச் சைக்காக வேட்டவலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத் தில் சேர்த்தனர். அங்கு முத லுதவி சிகிச்சைக்கு பின்னர் இருவரையும் திருவண்ணா மலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பெருமாள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பின்னர் கலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி இரவு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வேட்டவலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கோவிந்தசாமி வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.

    மேலும் பார்சல் லாரியை பறி முதல் செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகிறார்.

    • பரண் மீதிருந்த ஸ்பீக்கர் பாக்ஸ் குழந்தையின் தலையில் விழுந்தது.
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த சீலபந்தல் ஊராட்சிக்குஉட்பட்ட பிச்சானந்தல் பகுதியை சேர்ந்தவர் விஜய் கூலி தொழிலாளி.

    இவருக்கு 3 மாத பெண் குழந்தை உள்ளது நேற்று முன்தினம் மாலை குழந்தையை வீட்டில் தரையில் படுக்க வைத்து இருந்தார். அப்போது வீட்டின் பரணில் உள்ள ஸ்பீக்கர் பாக்ஸ் எதிர்பாராவிதமாக சரிந்து தரையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் தலையில் விழுந்தது.

    இதில் குழந்தைக்கு படுகாயம் ஏற்பட்டது. திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று குழந்தை பரிதாபமாக இறந்தது. இச்சம்பவம் குறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 100க்கும் மேற்பட்ட கார்டுகளில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
    • ஏராளமான ரேசன் அட்டைதாரர்கள் பயன் பெற்றனர்.

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த படவேடு கிராம நிர்வாக அலுவலகத்தில் நேற்று போளூர் வட்ட வழங்கல் அலுவலர் தேவி மேற்பார்வையில், ஸ்மார்ட் ரேசன் கார்டில் திருத்தம் பணி நடைபெற்றது.

    இதில் வட்ட வழங்கல் அலுவலகத்திற்குட்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டு 100க்கும் மேற்பட்ட ஸ்மார்ட் கார்டுதாரர்களின் பெயர், விலாசங்கள் திருத்தம் மற்றும் போட்டோ மாற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    இதில் ஏராளமான குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெற்றனர்.

    • பூட்டை உடைத்து கைவரிசை
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    கலசபாக்கம் அடுத்த சொரகொளத்தூர் டாஸ்மாக் மதுபானக் கடையில் அதே பகுதியை சேர்ந்த சிவராமகிருஷ்ணன் சூப்பர்வைசராகவும் மேலும் 3 விற்பனையாளர்கள் கடையில் பணி புரிந்து வருகின்றனர்.

    நேற்று வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துவிட்டு இரவு 10 மணிக்கு கடையை பூட்டி விட்டு ஊழியர்கள் அனைவரும் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

    மறுநாள் அதிகாலையில் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதாக சிவராமகிருஷ்ணனுக்கு தகவல் வந்தது.

    இதனையடுத்து கடைக்கு நேரில் சென்று பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு பார்த்து அதிர்ச்சி அடைந்த உள்ளே சென்று பார்த்தபோது சுமார்16 அட்டை பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த 580 குவாட்டர், 98 ஆப், 27 பீர் உட்பட ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 550 மதிப்பிலான மது பாட்டில்களை மர்ம கும்பல் திருடிச்சென்றுள்ளதாக கூறபடுகிறது.

    இதுகுறித்து கலசபாக்கம் போலீசில் சிவராம கிருஷ்ணன் புகார் அளித்தார். இதன் பேரில் கலசப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை செய்து வருகின்றனர்.

    • கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டது.
    • சுவாமிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.

    வந்தவாசி:

    வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தில் உள்ள ஸ்ரீமருத மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று காலை நடந்தது.

    இதையொட்டி கோவிலில் யாகசாலை அமைக்கப்பட்டு ஹோமங்கள், பிரவேசபலி, வாஸ்துசாந்தி, அங்குரார்ப்ப ணம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. பின்னர் நாடிசந்தானம், தத்வார்ச்சனை, மகா பூர்ணாஹூதி உள்ளிட்டவை நடந்தது.

    காலை 9 மணிக்கு மேல் 10-30 மணிக்குள் பூஜை செய்யப்பட்ட கலசத்தை கோவில் கோபுரத்தின் மீது எடுத்துச் சென்று கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அப்போது பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. பின்னர் சுவாமிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.

    • 10 ஆண்டுகளுக்கு முன்பு தாய் இறந்துவிட்டார்.
    • தந்தை ஜெயசீலன் கூலி வேலை செய்து வந்தார்.

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ராட்டிணமங்கலம் கிராமத்தை சேர்ந்த கூலிதொழிலாளி ஜெயசீலன் (46). இவரது மனைவி மகேஸ்வரி தம்பதியினருக்கு சக்திவேல் (17)ரஞ்சித் (15) வரலட்சுமி (11) ஆகிய 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உமாமகேஸ்வரி உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார்.

    இந்நிலையில் 10 ஆண்டுகளாக ஜெயசீலன் கூலி வேலை செய்து தனது இரண்டு மகன்களையும் ஒரு மகளையும் படிக்க வைத்து காப்பாற்றியுள்ளார்.

    தற்பொழுது சக்திவேல் 12-ம் வகுப்பு ரஞ்சித் 10-ம் வகுப்பு வரலட்சுமி 7-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் கூலி வேலை செய்து கொண்டிருந்த ஜெயசீலன் நேற்று முன்தினம் இரவு திடீர் உடல்நிலை குறைவால் இறந்தார்.

    அதிர்ச்சியடைந்த குழந்தைகள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர். தந்தையின் இறுதி சடங்கு செய்யகூட பணம் இல்லாமல்நிலைகுலைந்து நின்றனர்.

    இதனைக் கண்ட ராட்டிணமங்கலம் புதிய காலனி பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பணம் வசூல் செய்து இறுதி சடங்குகளை செய்தனர்.

    தாயை இழந்து தந்தையின் அரவணைப்பால் 10 ஆண்டு காலம் வாழ்ந்து வந்த மகள் மற்றும் மகன்கள் தந்தையின் இறுதி சடங்கை செய்வதற்கு கூட பணம் இல்லாமல் பரிதாபமாக நின்ற சம்பவம் ராட்டிணமங்கலம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

    இது மட்டுமன்றி 3 குழந்தைகளின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாக உள்ளன.

    அவர்களுக்கு அரசு உதவி செய்யவேண்டும் என உதவி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×