என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • விவசாய மாநாடு நடைபெற்றது.
    • 179 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற 1431-ம் பசலி வருவாய் தீர்வாய நிறைவு நாள் விழா மற்றும் விவசாய மாநாடு நடைபெற்றது.

    விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு மனுக்கள் பெறப்பட்டு அதனை பரிசீலனை செய்து நேற்று நடைபெற்ற விழாவில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஆ. சண்முகசுந்தரம் தலைமை தாங்கினர். தாசில்தார் சுமதி வரவேற்றார். திருவத்திபுரம் நகர மன்ற தலைவர் ஆ. மோகனவேல், ஒன்றியக்குழு பெருந்தலைவர்கள் என் வி பாபு, திலகவதி ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக செய்யாறு ஓ. ஜோதி எம்.எல்.ஏ பங்கேற்று விவசாயி மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது, கணனி மையம் மூலம் எல்லா ஆவணங்களையும் பொதுமக்கள் பெற்றுக் கொள்ளும் வகையில் திட்டத்தை முதன் முதலில் நமது முன்னாள் முதல்வர் கலைஞர் கொண்டு வந்தார்.

    தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றார். தற்போது ஊழலுக்கு வழிவகுக்கக் கூடாது என்ற நிலையில் தமிழகம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவில் முதன்முதலாக விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கியவர் நமது கலைஞர் தான் இந்த ஆட்சி மக்களுக்கான ஆட்சி. அதிகாரிகள் மக்களுக்கு சேவை செய்து மக்கள் பாராட்டும் அளவிற்கு பணி செய்ய வேண்டும். இவ்வாறு பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக தாசில்தார் ராஜலட்சுமி நன்றி கூறினார்.

    • பொதுமக்கள் வலியுறுத்தல்
    • பயணிகள் வெயில், மழையில் தவிக்கும் நிலை உள்ளது.

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் கூட்ரோடு பஸ் நிறுத்தம் மும்முனை பஸ் வருவதால் தினமும் ஏராளமான பயணிகள் நின்று பயணம் செய்து வருகின்றனர்.

    ஆனால் இங்கு வரும் பயணிகள் அனைவரும் வெயிலிலும், மழையாலும் தவிக்கும் நிலை உள்ளது. ஏனெனில் பயணிகள் வசதிக்காக பேருந்து நிழற்குடை வசதி இல்லை. கடும் வெயிலையும் பொருட்படுத்தாது, மழையில் நனைந்தாலும் பயணிகள் காத்திருந்து பஸ் பிடித்து சென்று வருகின்றனர்.

    இவ்வழியே காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன. எனவே மிக முக்கியமான தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் இங்கு பயணிகள் வசதிக்காக பெரிய அளவில் பஸ் நிழற்கூடம் அமைத்து தரவேண்டும் என பயணிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • 9 மணி முதல் மாலை 5 மணி வரை துண்டிப்பு.

    போளூர்:

    போளூர் துணை மின் நிலையத்தில் (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை போளூர் டவுன், அத்திமூர், மண்டகொளத்தூர், ராந்தம், ஜடாதாரி குப்பம், கலசப்பாக்கம், பெலாசூர், வாட்டர் ஒர்க்ஸ், குன்னத்தூர் கொம்பனந்தல், முருகா பாடி மற்றும் போளூர் நகரை சுற்றி உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    இத்தகவலை போளூர் செயற்பொறியாளர் எஸ். எஸ்.குமரன் தெரிவித்துள்ளார்.

    • நெஞ்சை பதறவைக்கும் சி.டி.வி. கேமரா காட்சி.
    • மேலும் ஒரு பஸ்சில் சிக்கி 2 பேர் படுகாயம்.

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ராட்டினமங்கலம் கிராமத்தை சேர்ந்த கார் டிரைவர் சரவணன் புஷ்பலதா தம்பதியினருக்கு விஷ்ணு (11) என்ற மகனும், அர்ஷினி (8) என்ற மகளும் உள்ளனர்.

    நேற்று ஆரணி- ஆற்காடு சாலையில் வீட்டின் அருகே உள்ள ஓட்டலில் சாப்பாடு வாங்க விஷ்ணு சைக்கிளில் சென்றான்.

    அப்போது இரும்பேடு கூட்ரோடு அருகில் செய்யாறிலிருந்து ஆரணி நோக்கி மின்னல் வேகத்தில் வந்த தனியார் பஸ் கண் இமைக்கும் நேரத்தில் சிறுவன் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சிறுவன் தனியார் பஸ் டயரில் சிக்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    ஆரணி தாலுகா போலீசார் சிறுவனின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகனின் பிணத்தை கண்ட பெற்றோர் கதறி அழுதனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து தனியார் பஸ்சை பறிமுதல் செய்து தப்பியோடிய டிரைவர் செல்வரசை தேடி வருகின்றனர்.

    அதே போல ஆரணி அருகே ஆயிரமங்கலம் கிராமத்தை சேர்ந்த அரிகிருஷ்ணன் (61), மட்டதாரி கிராமத்தை சேர்ந்த மூர்த்தி (50) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் பட்டாங்குளம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு துக்க நிகழ்ச்சிக் சென்று மீண்டும் ஆயிரமங்கலத்திற்கு திரும்பினர்.

    அப்போது ஆற்காட்டிலிருந்து ஆரணி நோக்கி வந்த தனியார் பஸ் பழைய பஸ் நிலையம் மணிகூண்டு அருகில் சாலை திருப்பத்தில் திரும்பிய போது பைக் மீது மோதியது.

    இந்த நிலையில் அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பஸ் மோதிய வீடியோ காட்சி பதிவாகி உள்ளது நெஞ்சை பதற வைக்க அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தனர்.

    அக்கம் பக்கத்த்தில் உள்ள பொதுமக்கள்– படுகாயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்பூலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆரணியில் ஓரே நாளில் 2 தனியார் பஸ்கள் விபத்தில் சிக்கியது. அடுத்தடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சரவணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்
    • ஏராளமானோர் பங்கேற்பு

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த படவேடு பஜாரில் கடந்த 12-ந் தேதி தி.மு.க. பொதுக்கூட்டம் கலசப்பாக்கம் எம்.எல்.ஏ. சரவணன் தலைமையில் நடந்தது.

    முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் வேணுகோபால், ஒன்றிய கவுன்சிலர் மனோகரன் உள்படபலர் முன்னிலை வகித்தனர். போளூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆர் வி சேகர் வரவேற்று பேசினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நரேஷ்குமார், தலைமை கழக பேச்சாளர் கரூர் முரளி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

    • விவசாயிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்
    • வேட்டவலத்தில் நடந்தது

    வேட்டவலம்,ஜூன்.14-

    வேட்டவலம் அடுத்த நீலந்தாங்கள் ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் ஆட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் குறித்து பயிற்சி நேற்று நடந்தது.

    வேளாண்மை உதவி இயக்குனர் சந்திரன் தலைமை தாங்கி பயிற்சி அளித்தார். ஒன்றிய குழு உறுப்பினர். அனுராதா சுகுமார் முன்னிலை வகித்தார் உதவி வேளாண்மை அலுவலர் வெங்கடாசலம் வரவேற்றார்.

    துணை வேளாண்மை அலுவலர் சுப்பிரமணி, வேளாண்.மை மற்றும் உழவர் நலத்துறை திட்டங்கள் குறித்தும், உதவி தொழில்நுட்ப மேலாளர் விஷ்ணு உயிர் உரம், நுண்ணூட்ட கலவை மற்றும் ஆட்மா திட்டங்கள் குறித்தும் பேசினார், இந்த பயிற்சியில் நமம் நீலந் தாங்கள் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • அண்ணாதுரை எம்.பி. தொடங்கி வைத்தார்
    • திருவண்ணாமலையில் நடந்தது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொழில் நுட்ப சங்கம் புதிய சங்கம் துவக்க விழா மற்றும் நிர்வாகிகள் பதவியேற்பு விழா திருவண்ணாமலை ஹோட்டலில் நடைபெற்றது.

    இந்த விழாவில் திருவண்ணாமலை பாராளுமன்ற உறுப்பினர் சி. என். அண்ணாதுரை கலந்து கொண்டு துவக்கிவைத்து உரையாற்றினார். மேலும் இந்த ஐடி சங்க உறுப்பினர்களுக்கு தொழில் சார்ந்த உதவி செய்வதில் முக்கியத்துவம் தருவதாக உறுதி அளித்து பேசினார்.

    நிகழ்ச்சியில் நகர மன்ற துணைத் தலைவர் ராஜாங்கம் நகர மன்ற உறுப்பினர் பிரகாஷ் தமிழ்நாடு வணிகர் சங்கம் மாநில கூடுதல் செயலாளர் ராஜசேகர், தலைவர் எம் சண்முகம், ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரையாற்றினர்.

    தொழில்நுட்ப சங்கத்தின் தலைவராக பாலகணேஷ், செயலாளராக விஜயகுமார் பொருளாளராக அஸ்லாம் பாஷா கௌரவத் தலைவராக விரவின்சென்ட் துணைத்தலைவராக கோவிந்தன் துணை செயலாளராக முகி ல்வண்ணன், கோபிநாத் செயற்குழு உறுப்பி னர்களாக அருள்வேல், .தமிழ்ச்செல்வன், அசோக்குமார் ஆகியோரும் பதவி ஏற்றுக் கொண்டனர்.

    • டிரைவர் போக்சோவில் கைது
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை நல்லான்பிள்ளை பெற்றான் பகுதியை சேர்ந்தவர் தினகரன் (வயது 23), டிரைவர். இவருக்கும் ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

    பின்னர் தினகரன் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த புகாரின் பேரில் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தினகரனை கைது செய்தனர்.

    • கட்டை பையில் வைத்து வீச்சு
    • தாய் யார்? போலீஸ் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருகில் உள்ள அத்தியந்தல் கிராமத்தில் கெங்கையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் வளாகத்தில் நேற்று காலை அழும் சத்தம் கேட்டுள்ளது.

    அப்போது அந்த வழியாக சென்ற அக்கம்பக்கத்தினர் குழந்தை அழும் குரல் கேட்டு கோவிலுக்குள் சென்று பார்த்து உள்ளனர். அங்கு ஒரு கட்டை பையில் பிறந்து சுமார் 3 நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று ஆதரவற்ற நிலையில் இருந்தது.

    பின்னர் அந்த குழந்தையை மீட்டு திருவண்ணாமலை தாலுகா போலீசுக்கும், 108 ஆம்புலன்சிற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையின் தாய் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

    மேலும் 108 ஆம்புலன்சு மூலம் குழந்தையை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அரசின் தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

    • ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி புகைப்படங்கள் தாலுகா அலுவலக வளாகத்தில் பின்புறத்தில் ஒரு ஓரத்தில் வைக்கப்பட்டு இருந்தது. இதை கண்ட மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • அ.தி.மு.க.வினர் அகற்றப்பட்ட அ.தி.மு.க. முன்னாள் முதல்-அமைச்சர்களின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி புகைப்படங்கள் அகற்றப்பட்டது. இதனால் அங்கு அ.தி.மு.க.வினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் அறையில் முன்னாள் முதல்-அமைச்சர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு இருந்தது. கடந்த 3-ந் தேதி முதல் நேற்று வரை தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் முருகேஷ் தலைமையில் ஜமாபந்தி நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று தாசில்தார் அறையில் வைக்கப்பட்டு இருந்த முதல்-அமைச்சர்களின் புகைப்படங்கள் வரிசையில் இருந்து ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரது புகைப்படங்கள் அகற்றப்பட்டு காணப்பட்டது.

    அந்த புகைப்படங்கள் தாலுகா அலுவலக வளாகத்தில் பின்புறத்தில் ஒரு ஓரத்தில் வைக்கப்பட்டு இருந்தது. இதை கண்ட மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இது குறித்த தகவல் சமூக வலைதளத்தில் பரவியது.

    இந்த தகவலை அறிந்த திருவண்ணாமலை அ.தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி எஸ். எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. உத்தரவின் பேரில் அ.தி.மு.க. வினர் சுமார் 15-க்கும் மேற்பட்டவர்கள் தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது அங்கு ஜமாபந்தி நிறைவு விழா நடைபெற்று கொண்டிருந்தது. இதற்கிடையில் முன்னாள் முதல்-அமைச்சர்கள் புகைப்படங்கள் அகற்றப்பட்ட தகவல் வெளியே பரவியதை அறிந்த வருவாய் துறையினர் மீண்டும் தாசில்தார் அறையில் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி புகைப்படங்களை அங்கு வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். முதலில் ஜெயலலிதா புகைப்படத்தை வைத்தனர்.

    அப்போது அங்கு வந்த அ.தி.மு.க.வினர் அகற்றப்பட்ட அ.தி.மு.க. முன்னாள் முதல்-அமைச்சர்களின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர்.

    இதையடுத்து உடனடியாக வருவாய் துறையினர் அ.தி.மு.க. முன்னாள் முதல்-அமைச்சர் புகைப்படங்களை வாங்க சென்றனர். மேலும் ஜமாபந்தி விழா நிறைவடைந்த பின்னர் தாசில்தார் அறைக்கு வந்த கலெக்டரிடம் அ.தி.மு.க.வினர் அகற்றப்பட்ட அ.தி.மு.க.வின் முன்னாள் முதல்-அமைச்சர்களின் புகைப்படங்களை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.

    மனுவை பெற்று அவர் உடனடியாக புகைப்படங்களை மீண்டும் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். பின்னர் அவர்கள் எடப்பாடி பழனிசாமி புகைப்படம் வைக்கும் வரை அங்கு இருந்து விட்டு கலைந்து சென்றனர். 

    • கிணறுகளில் நீர்மட்டம் குறைந்தது.
    • கோடை மழை பெய்யும் என எதிர் பார்த்த விவசாயிகளுக்கு ஏமாற்றம்.

    வாணாபுரம்:

    வாணாபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் தச்சம்பட்டு, வெறையூர், பெருமணம், விருதுவிளங்கினான், சின்னகல்லப் பாடி, பெரிய கல்லப்பாடி, அல்லிகொண்டப்பட்டு, தலை யாம்பள்ளம், சதாகுப்பம், பழையனூர் ஆகிய கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. அந்தப் பகுதிகளில் நெல், கரும்பு, மக்காச்சோளம், கேழ்வரகு, மணிலா, உளுந்து மற்றும் பருவ கால பயிராக பூக்கள் ஆகியவற்றை சாகுபடி செய்து வருகின்றனர்.

    கோடைக்காலம் தொடங்கிய நேரத்தில் அனைத்துக் கிணறுகளிலும் நீர்மட்டம் அதிகளவில் குறைந்ததாலும், பாசனத்துக்கு போதிய தண்ணீர் இல்லாததாலும் கரும்பு பயிர் காய்ந்து கருகி போய் விட்டது. கோடை மழை பெய்யும் என எதிர் பார்த்த நிலையில் தற்போது மழை பெய்யாததாலும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும் கரும்பு மட்டுமின்றி மணிலா உள்ளிட்ட பயிர்கள் காய்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • பிரதோஷ நாயகர் உட்பிரகாரத்தில் உலா
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் நந்திபகவானுக்கு பிரதோஷ பூஜை நடந்தது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பிரதோஷ நாயகர் உட்பிரகாரத்தில் உலா வந்தார். கண்ணமங்கலம் ராமநாதீஸ்வரர் கோவிலிலும் நேற்று மாலை நந்திபகவானுக்கு பிரதோஷ பூஜை நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்திபகவானை வணங்கினர்.

    ×