என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The private bus collided with the boy in the blink of an eye."

    • நெஞ்சை பதறவைக்கும் சி.டி.வி. கேமரா காட்சி.
    • மேலும் ஒரு பஸ்சில் சிக்கி 2 பேர் படுகாயம்.

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ராட்டினமங்கலம் கிராமத்தை சேர்ந்த கார் டிரைவர் சரவணன் புஷ்பலதா தம்பதியினருக்கு விஷ்ணு (11) என்ற மகனும், அர்ஷினி (8) என்ற மகளும் உள்ளனர்.

    நேற்று ஆரணி- ஆற்காடு சாலையில் வீட்டின் அருகே உள்ள ஓட்டலில் சாப்பாடு வாங்க விஷ்ணு சைக்கிளில் சென்றான்.

    அப்போது இரும்பேடு கூட்ரோடு அருகில் செய்யாறிலிருந்து ஆரணி நோக்கி மின்னல் வேகத்தில் வந்த தனியார் பஸ் கண் இமைக்கும் நேரத்தில் சிறுவன் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சிறுவன் தனியார் பஸ் டயரில் சிக்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    ஆரணி தாலுகா போலீசார் சிறுவனின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகனின் பிணத்தை கண்ட பெற்றோர் கதறி அழுதனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து தனியார் பஸ்சை பறிமுதல் செய்து தப்பியோடிய டிரைவர் செல்வரசை தேடி வருகின்றனர்.

    அதே போல ஆரணி அருகே ஆயிரமங்கலம் கிராமத்தை சேர்ந்த அரிகிருஷ்ணன் (61), மட்டதாரி கிராமத்தை சேர்ந்த மூர்த்தி (50) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் பட்டாங்குளம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு துக்க நிகழ்ச்சிக் சென்று மீண்டும் ஆயிரமங்கலத்திற்கு திரும்பினர்.

    அப்போது ஆற்காட்டிலிருந்து ஆரணி நோக்கி வந்த தனியார் பஸ் பழைய பஸ் நிலையம் மணிகூண்டு அருகில் சாலை திருப்பத்தில் திரும்பிய போது பைக் மீது மோதியது.

    இந்த நிலையில் அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பஸ் மோதிய வீடியோ காட்சி பதிவாகி உள்ளது நெஞ்சை பதற வைக்க அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தனர்.

    அக்கம் பக்கத்த்தில் உள்ள பொதுமக்கள்– படுகாயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்பூலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆரணியில் ஓரே நாளில் 2 தனியார் பஸ்கள் விபத்தில் சிக்கியது. அடுத்தடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×