என் மலர்
நீங்கள் தேடியது "Added to the state cradle baby program"
- கட்டை பையில் வைத்து வீச்சு
- தாய் யார்? போலீஸ் விசாரணை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருகில் உள்ள அத்தியந்தல் கிராமத்தில் கெங்கையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் வளாகத்தில் நேற்று காலை அழும் சத்தம் கேட்டுள்ளது.
அப்போது அந்த வழியாக சென்ற அக்கம்பக்கத்தினர் குழந்தை அழும் குரல் கேட்டு கோவிலுக்குள் சென்று பார்த்து உள்ளனர். அங்கு ஒரு கட்டை பையில் பிறந்து சுமார் 3 நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று ஆதரவற்ற நிலையில் இருந்தது.
பின்னர் அந்த குழந்தையை மீட்டு திருவண்ணாமலை தாலுகா போலீசுக்கும், 108 ஆம்புலன்சிற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையின் தாய் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
மேலும் 108 ஆம்புலன்சு மூலம் குழந்தையை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அரசின் தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.






