என் மலர்
திருவண்ணாமலை
- மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
- பீடத்துடன் சுமார் 30 அடி உயரத்தில் நிறுவப்படுகிறது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் வேலூர் சாலை பிரியும் பகுதியில் இருந்த பழைய அண்ணா நுழைவு வாயில் அகற்றப்பட்டு புதியதாக பிரம்மாண்டமாக அண்ணாநுழைவு வாயில் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் அருகில் தனியார் இடத்தில் மாவட்ட தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதிக்கு சிலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
இந்த சிலை அமைக்கப்படும் இடம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது என்றும், சிலை கட்டுமானம் நடைபெற்றால் அப்பகுதியில் உள்ள கால்வாயில் நீர் போக்குவரத்து பாதிக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் சென்னையை சேர்ந்த கார்த்திக் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து சிலை அமைக்கும் பணிக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் வழக்கை வாபஸ் பெற்றார். இதையடுத்து நீதிபதிகள் இவ்வழக்கை தள்ளுபடி செய்தனர். கருணாநிதி சிலை அமைப்பதற்கான தடை நீங்கியதால் தி.மு.க.வினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து அந்த இடத்தில் கருணாநிதி சிலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று பீடம் அமைக்கப்பட்டு கிரேன் மூலம் பீடத்தில் கலைநயமிக்க முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் சிலை நிறுவப்பட்டது.
இது பீடத்துடன் சேர்த்து சுமார் 30 அடி இருக்கும் என்று கூறப்படுகிறது. சிலை நிறுவப்பட்டு உள்ளதை நேற்று மதியம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் புதியதாக கட்டப்பட்டு உள்ள அண்ணா நுழைவு வாயிலையும் பார்வையிட்டார்.
ஆய்வின் போது முன்னாள் நகரமன்றத் தலைவர் ஸ்ரீதரன், டாக்டர் எ.வ.வே.கம்பன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். கருணாநிதி சிலையும், புதியதாக கட்டப்பட்டு உள்ள அண்ணா நுழைவு வாயிலையும் திருவண்ணாமலைக்கு விரைவில் வர இருக்கும் தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட உள்ளது.
- 45 ஊராட்சிகளில் இருந்து பங்கேற்றனர்.
- அனைத்து கிராமங்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டுகோள்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் யூனியனுக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று கலசப்பாக்கம் யூனியனில் உள்ள 45 ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை காவலர்களுக்கு 16 உபகரண பொருட்கள் யூனியன் சேர்மன் அன்பரசி ராஜசேகரன் வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கலசப்பாக்கம் யூனியனில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சுத்தமாகவும் தூய்மையாகவும் இருக்க வேண்டும். ஏனென்றால் நமது கிராமங்கள் தூய்மையாக இருந்தால்தான் கிராமத்திலுள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க முடியும்.
அதனால் அனைத்து கிராமங்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று யூனியன் சேர்மன் அன்பரசி ராஜசேகரன் தூய்மை பொருட்களை வழங்கி விட்டு தூய்மை பணியாளரிடம் ஊராட்சிகளை தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தராஜுலு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வாசு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்வாகம் நாராயணன், வட்டார ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தூய்மை பணியாளர்கள் அனைவரும் உடனிருந்தனர்.
- தி.மு.க. மாணவர்களுடைய கல்விக் கடனை ரத்து செய்வோம் என்றார்கள்.
- அ.தி.மு.க தான் ஏற்கனவே விவசாய கடன்களை ரத்து செய்தது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடந்த பத்மாவதி தாயார் வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேக விழாவில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.
முன்னதாக திருவண்ணாமலை மாவட்ட எல்லையான காட்டாம் பூண்டியில் அ.தி.மு.க.வினர் திரண்டு பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து அ.தி.மு.க. கட்சி கொடியை எடப்பாடி பழனிசாமி ஏற்றி வைத்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
தி.மு.க. தேர்தல் நேரத்தில் அளித்த வாக்கு எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக உயர்த்தப்படும் என கூறினார்கள். ஆனால் அதன்படி உயர்த்தவில்லை. ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்றார்கள் அதையும் செய்து தரவில்லை.
அ.தி.மு.க தான் ஏற்கனவே விவசாய கடன்களை ரத்து செய்தது. தி.மு.க. விவசாய கடன்களை ரத்து செய்யவில்லை. அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ சீட் வழங்கும் திட்டத்தை அ.தி.மு.க.கொண்டு வந்தது.
தி.மு.க. மாணவர்களுடைய கல்விக் கடனை ரத்து செய்வோம் என்றார்கள்.ஆனால் கல்விக் கடன் ரத்து செய்யப்படவில்லை.
பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்றார்கள். ஆனால் ரூ.3 மட்டும் குறைத்து விட்டு தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விவசாயிகள் என்னிடம் தடையில்லா மின்சாரம் வழங்க சட்டமன்றத்தில் பேசி தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். எந்த நேரத்திலும் தடையில்லா மின்சாரம் அ.தி.மு.க. அரசு வழங்கியது.
முதியோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை படிப்படியாக குறைத்து வருகின்றனர்.இதனை கண்டித்து முதியோர்களை ஒன்று திரட்டி அ.தி.மு.க. சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- 5 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கிறது.
- 1008 பால்குடம் எடுத்து ஊர்வலம் சென்றனர்.
செங்கம்:
செங்கம் அருகில் காயம்பட்டு கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் திருவிழா நடந்தது. கிராம மக்கள் பலர் விரதம் கடைப்பிடித்து காப்புக்கட்டி கொண்டனர்.
பெண்கள் 1008 பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து காளியம்மனுக்கு பாலாபி ஷேகம் செய்தனர். அதன் பிறகு விசேஷ அபிஷேகங்கள் , அலங் காரங்கள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட் டது . திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு பாட்டு கச்சேரி உள்பட கலை நிகழ்ச்சி கள் நடந்தது.
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் காளியம்மன் கோவில் திரு விழா.காண செங்கம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராம மக்கள் மட்டுமின்றிவெளி மாவட் டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் பலர் வந்து அம்பாளை தரிசனம் செய்தனர்.
- உரக்கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்யவில்லை என புகார்.
- போக்குவரத்து பாதிப்பு
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம், புதுப்பாளையம் துரிஞ்சாபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் முழுமையாக விவசாயத்தையும் அதனைச் சார்ந்த கால்நடை வளர்ப்பிலும் மட்டுமே ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் எப்போதும் இல்லாத அளவில் கடந்த 6 மாதங்களாக அதிக அளவு மழை பெய்து ஏரி குளம் குட்டை மற்றும் அணைகளில் நீர் நிரம்பி உள்ளது. இதனை பயன்படுத்தி விவசாயிகள் முழுமையாக மூன்று போகமும் பயிர் செய்து வருகின்றனர் .
இதனால் யூரியா தேவையாக இருந்து வரும் நிலையில் கடந்த 10 நாட்களாக கலசப்பாக்கம் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் சென்று யூரியா கேட்கும்போது அதிகாரிகள் ஸ்டாக் இல்லை என கூறுகின்றனர். தனியார் உரகடையில் யூரியாவிற்கு இணையாக ஏதேனும் மருந்து வாங்கினால் மட்டுமே யூரியா கிடைக்கும் அப்படி இல்லை என்றால் 280 ரூபாய் போகக்கூடிய யூரியா மூட்டை 600 ரூபாய் முதல் 900 ரூபாய் வரை பில் வழங்காமல் வாங்கிக்கொள்ளுங்கள் என்று கடைக்காரர்கள் கூறி வருவதால் விவசாயிகள் வேளாண் துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து முறையிட்டனர் .
இருப்பினும் வேளாண்துறை அதிகாரிகள் கடந்த 10 நாட்களாக எந்த உரகடைக்கும் சென்று ஏன் இப்படி யூரியாவை தாறுமாறாக விற்பனை செய்கிறீர்கள் என்று ஆய்வு மேற்கொள்ளவில்லை.
இதனால் நேற்று மதியம் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில் அருகே பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஒரு கட்டத்தில் விவசாயிகள் அனைவரும் ரோட்டில் படுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களை கலசபாக்கம் போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர் திருவண்ணாமலை மாவட்டத்தை தவிர பிற மாவட்டங்களில் யூரியா தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும் நிலையில் இந்தமாவட்டத்தில் மட்டும் ஏன் இன்னும் யூரியா தட்டுப்பாடு என்று விவசாயிகள் வேதனையுடன் கேள்வி எழுப்பி சென்றனர்.
- ஏ.சி.எஸ். கல்வி குழும தலைவர் யாகசாலை பூஜையை தொடங்கி வைத்தார்
- 95 அடி உயர ராஜகோபுரத்துடன் கோவில் கட்டப்படுகிறது.
ஆரணி:
ஆரணி அடுத்த இரும்பேடு கிராமத்தில் உள்ள ஏ.சி.எஸ் கல்வி குழும வளாகத்தில் புதிய நீதி கட்சி நிறுவனரும் ஏ.சி.எஸ் கல்வி குழும தலைவருமான ஏ.சி.சண்முகம் தன்னுடைய சொந்த செலவில் 95 அடி உயர ராஜகோபுரத்துடன் புதிய வெங்கடஜலபதி பெருமாள் கோவில் கட்டியுள்ளார்.
இந்த கோவில் கும்பாபிஷேகம் நாளை காலை 10.00 மணிக்கு நடைபெறுகிறது. இதனையொட்டி நேற்று மாலை கணபதி பூஜை செய்து முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இதில் ஸ்ரீ பெரும்புத்துர் ஸ்ரீமத்பரமஹம்ச இத்தியாதி ஸ்ரீஅப்பன்பரகால ராமனுஜர் எம்பார் ஜீயர் சுவாமிகள்ஏ .சி.எஸ் கல்வி குழும தலைவர் ஏ.சி.சண்முகம் லலிதா லட்சுமி சண்முகம் பங்கேற்று பட்டாச்சாரியார்கள் முன்னிலையில் யாகசாலையில் கணபதி பூஜை செய்து முதல்கால யாகசாலை பூஜையை தொடங்கி வைத்தனர்.
கோவிலின் ராஜகோபுரம் கோவில் வளாகத்தில் உள்ள சாமி கருவறை விமானங்கள் வைக்க கூடிய கலசங்களுக்கு பூஜை செய்து கோவிலுக்கு கொண்டு சென்றனர்.
இதனை தொடர்ந்து பரதநாட்டியம் ஆன்மீக சொற்பொழிவு பட்டிமன்றம் நடந்தது. இன்று காலையில் பரத நாட்டியம் கலைமாமணி தேச மங்கையர்கரசி தலைமையில் ஆன்மீக சொற்பொழிவும் ஏ.பி.மணிசங்கர் குழுவினரின் மங்கள லய நாதம் லட்சுமணன் ஸ்ருதி இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (17-ம் தேதி ) காலை 10.00 மணிக்கு 3ம் கால யாகசாலை பூஜை மற்றும் வெங்கடஜலபதி கோவில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இதனை தொடர்ந்து மாலை ஸ்ரீ பத்மாவதி தாயார் சமேத வெங்கடஜலபதி சாமி திருக்கல்யாண உற்சவம் ஆன்மீக சொற்பொழிவு இன்னிசை கச்சேரி நாடகம் நடைபெறுகின்றன.
மேலும் கும்பாபிஷேகத்திற்கு திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து பெரிய ஜீயர்கள் சின்ன ஜீயர்கள் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பட்டாச்சியார்கள் பங்கேற்று யாகசாலை பூஜைகள் நடத்தபடுள்ளன. கும்பாபிஷேகம் விழாவில் முன்னாள் பாரத பிரதமர் தேவகவுடா முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம் மத்திய அமைச்சர் எல்.முருகன் மணிப்பூர் மாநில ஆளுநர் இல.கணேசன் தெலுங்கான மாநில கவர்னர் தமிழசை சௌந்தர்ராஜன் பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு அமைச்சர்கள் துரைமுருகன், ஆர்.காந்தி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஆந்திரா மாநில அமைச்சரும் நடிகையுமான ரோஜா, நடிகர் ரஜினிகாந்த், காஞ்சி மடாதிபதி ஸ்ரீவிஜேயந்திர சரஸ்வதி சுவாமிகள், ரத்திகிரி பாலமுருகன் அடிகளார், வேலூர் ஸ்ரீபுரம் சக்திஅம்மா, திரையுலகினர் மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் தொழிலதிபர்கள் பக்தர்கள் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொள்வதாக புதிய நீதி கட்சி நிறுவனரும் ஏ.சி.எஸ் கல்வி குழும தலைவருமான ஏ.சி.சணமுகம் தெரிவித்தார். இந்த கும்பாபிஷேக விழாவில் ஆரணி எம்.எல்.ஏ சேவூர் ராமசந்திரன் ஏ.சி.எஸ் கல்லூரி செயலர் ஏ.சி.ரவி ஏ.சி.எஸ். மெட்ரிக் ப்ளளி தாளளரும் நகரமன்ற உறுப்பினருமான ஏ.சி.பாபு ஏ.சி.எஸ். கல்வி குழும பள்ளி முதல்வர்கள் பேராசிரியர்கள் ஆசிரியர்கள் ஆசிரியைகள் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
- 700 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
- சுடுகாட்டுக்கு 2 கி.மீ. தூரம் செல்ல வேண்டும்.
வந்தவாசி:
வந்தவாசியை அடுத்த சென்னாவரம் ஊராட்சியில் இரு சுடுகாடுகள் அமைக்க இடம் வழங்கக் கோரி கிராம மக்கள் தாசில் தாரிடம் ேநற்று மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதவாது:-
சென்னாவரம் அடுத்த கோபாலகிருஷ்ணன் தெரு, சாரதி தெரு, ராமசாமி தெரு, அன்னை சத்யா நகர், காந்தி நகர், மாணக்ராஜ் தெரு, சின்னதம்பி தெரு, மேல்மருவத்தூர் சாலை ஆகிய பகுதிகளில் சுமார் 700 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதிகளிலிருந்து சென்னாவரம் சுடுகாட்டுக்கு சுமார் 2 கி.மீ. தூரம் செல்ல வேண்டும். இதனால் இந்த பகுதி மக்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே இந்த பகுதிகளுக்கென ஒரு சுடுகாடு அமைக்க இடம் வழங்க வேண்டும்.
மேலும் சென்னாவரம் ஊராட்சிக்கு உள்பட்ட எம்ஜிஆர் நகர் காலனி பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கென ஒரு சுடுகாடு அமைக்க இடம் வழங்க வேண்டும்.
இரு சுடுகாடுகளுக்கும் இடம் வழங்கக் கோரி பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இதுகுறித்து உடனடியாக உரிய நடவடிக்கை வேண்டும்என மனுவில் கூறியிருந்தனர்.
- துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தகவல்
- நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்க வேண்டும்
கலசப்பாக்கம்:
துரிஞ்சாபுரம் ஒன்றியம் சார்பில் தி.மு.க. கூட்டம் நடந்தது. அண்ணாதுரை எம்.பி., தலைமை வகித்தார். கிழக்கு ஒன்றிய செயலாளர் அண்ணாமலை மாவட்ட துணைச்செயலாளர் பாரதிராமஜெயம் யூனியன் சேர்மன் தமயந்தி ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்எல்ஏ சரவணன் வரவேற்றார். தலைமை பேச்சாளர் தமிழன்பிரசன்னா கலந்துகொண்டு பேசினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக துணை சபாநாயகர் பிச்சாண்டி கலந்து கொண்டு பேசினார்.
தமிழகத்தில் தொடர்ந்து 13 முறை சட்டமன்றத் தேர்தலில் நின்று வெற்றி பெற்ற ஒரே தலைவர் நமது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிதான் தமிழக மக்களுக்காக எண்ணற்ற பல திட்டங்களை கொண்டுவந்துள்ளார்.
விவசாயிகளுக்காக அதிகளவு திட்டங்களைக் கொண்டு வந்தவர் அதேபோல் அடித்தட்டு மக்களுக்காக பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை கொண்டுவந்து செயல்படுத்தியவர் தான் மறைந்த முதலமைச்சர் அவருக்காக தான் இந்த பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் அடுத்த மாதம் 9-ந்தேதி கருணாநிதியின் திருவுருவச்சிலை திருவண்ணாமலையில் திறக்கப்பட உள்ளது இவ்விழாவிற்கு முதல்வர் மு க ஸ்டாலின் வருகை தர உள்ளார். அந்த விழாவில் அதிக அளவு கட்சியினர் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். கிளை செயலாளர் செங்குட்டுவன் நன்றி கூறினார்.
- தமிழக அரசில் ஊழல் மட்டுமே நடைபெற்று வருகிவதாக எச்.ராஜா குற்றச்சாட்டு
- திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கருணாநிதி சிலை வைப்பதை பா.ஜ.க. ஏற்கவில்லை.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருவண்ணாமலை திருவூடல் தெருவில் இன்று இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
கடந்த 8 ஆண்டுகளாக யாரும் நிறைவேற்றாத, நிறைவேற்ற முடியாது என்று கருதுகின்ற விஷயங்கள் பா.ஜ.க. அரசினால் நிறைவேற்றப்பட்டு உள்ளது. கொரோனாவிற்கு மத்திய அரசு தடுப்பூசி கண்டுபிடித்து 200 கோடி மக்களுக்கு இலவசமாக வழங்கி உள்ளது. உக்ரைன் நாட்டில் இருந்து 10 ஆயிரத்து 300 மாணவர்களை ஒரு கீறல் கூட இல்லாமல் மீட்டு வந்து உள்ளோம் என்று தமிழக முதல்- அமைச்சர் சொல்கிறார். இது ஒரு பொய்யான தகவல். ஏனென்றால் 4 மந்திரிகளை அண்டை நாடுகளில் அமர்த்தி 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்களை மத்திய அரசு அழைத்து வந்து உள்ளது.
தமிழக அரசில் ஊழல் மட்டுமே நடைபெற்று வருகின்றது. ஊழல் நடக்கும் போதே எங்கள் மாநில தலைவர் உடனடியாக பிடித்து விடுவதால் தமிழக அரசாங்கம் உடனடியாக பின்வாங்கி முடிவை மாற்றி வருகின்றது.
நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் ஊழல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகின்றது. அதிலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த நிலையங்களில் நெல் விதைக்காதவனும் நெல் விற்பனை செய்ய வருகின்றனர். கலெக்டரிடமும் இது குறித்து புகார் செய்யப்பட்டு உள்ளது. இங்கு ஒவ்வொரு விவசாயியும் வஞ்சிக்கப்படுகிறார். தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் மேகதாதுவில் அணை கட்ட முடியாது என்ற ஏற்கனவே மத்திய நீர்வளத்துறை மந்திரி தெரிவித்து உள்ளார்.
தி.மு.க. இந்து கோவில் விஷயத்தில் மிகவும் மோசமாக நடந்து கொண்டு இருகின்றது. கோவில் நகைகளை உருக்குவது என்பது கோவில் நகைகளை திருடுவதற்கு ஒப்பாகும். தி.மு.க.விற்கு சித்தாந்தம் ரீதியாக கடுமையான எதிர்ப்பை காட்டி வரும் கட்சி பா.ஜ.க. ஆகும். மாநில தலைவர் ஊழலை வரும் முன் காப்போம் என்று தடுத்து வருகின்றார். இது வரை தமிழகத்தில் 7 லாக்கப் மரணங்கள் நடந்து உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. காவல் துறை என்ற ஒரு துறை தமிழகத்தில் இருக்கிறதா என்றே தெரியவில்லை. திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கருணாநிதி சிலை வைப்பதை பா.ஜ.க. ஏற்கவில்லை. இது குறித்து கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.
- இயற்கை உணவு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
- பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அடுத்த மங்கலம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1986- 87-ம் ஆண்டு 10-ம் வகுப்பு பயின்ற மாணவ மாணவிகள் 36 ஆண்டுகளுக்கு பிறகு மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை சசிகலாமாரி தலைமை தாங்கினார். முன்னாள் மாணவ, மாணவிகள் வரவேற்பு அளித்தனர். முன்னாள் ஆசிரியர்கள் கலந்துகொண்டு மாணவ மாணவிகளை வாழ்த்தி சிறப்புரையாற்றினார்.
முன்னதாக இயற்கை உணவு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து பள்ளி கால நினைவுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து முன்னாள் ஆசிரியர்களை கவுரவ படுத்துதல் மற்றும் பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
- உடனடியாக தீர்வு காண கலெக்டரிடம் பா.ஜ.க. மனு
- காலியாக உள்ள கிரிவலம் மேம்பாட்டு ஆணைய தலைவர் பதவியை நிரப்ப வேண்டும்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் இடம் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது அதில், இந்து சமய அறநிலையத் துறையின் 450 வழக்குகள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் நிலுவையில் உள்ளதை உடனடியாக தீர்வு காணவேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ள கிரிவலம் மேம்பாட்டு ஆணைய தலைவர் பதவியை நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் மனு அளிக்கப்பட்டது.
அப்போது ஆன்மீகம் மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு மாநில துணை தலைவர் சங்கர், ஓபிசி அணி மாநில துணைத்தலைவர் பாலசுப்ரமணியம், மாநிலச் செயலாளர் ஊடகப்பிரிவு முரளி மோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
- கருணாநிதியின் 99-வது பிறந்த நாள் விழா
- பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
வந்தாவாசி:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெள்ளார் ஒன்றியம் திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் எம்.எஸ்.தரணி வேந்தன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக அரசு கொறடா கோவி செழியன் மற்றும் வந்தவாசி அம்பேத்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். பொதுக்கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் கே.ஆர். சீதாபதி, ஒன்றிய செயலாளர்கள் ராதா, நந்தகோபால், இளங்கோவன், பிரபு, வந்தவாசி நகர செயலாளர் தயாளன், தெள்ளார் ஒன்றிய குழு தலைவர் கமலாட்சி இளங்கோவன், வந்தவாசி நகர மன்ற தலைவர் ஜலால், நகர மன்ற துணைத் தலைவர் சீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏ. எதிரொலி மணியன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் திரளான பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.






