என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public meeting on behalf of DMK"

    • கருணாநிதியின் 99-வது பிறந்த நாள் விழா
    • பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    வந்தாவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெள்ளார் ஒன்றியம் திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் எம்.எஸ்.தரணி வேந்தன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக அரசு கொறடா கோவி செழியன் மற்றும் வந்தவாசி அம்பேத்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். பொதுக்கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் கே.ஆர். சீதாபதி, ஒன்றிய செயலாளர்கள் ராதா, நந்தகோபால், இளங்கோவன், பிரபு, வந்தவாசி நகர செயலாளர் தயாளன், தெள்ளார் ஒன்றிய குழு தலைவர் கமலாட்சி இளங்கோவன், வந்தவாசி நகர மன்ற தலைவர் ஜலால், நகர மன்ற துணைத் தலைவர் சீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏ. எதிரொலி மணியன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் திரளான பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×