search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆரணியில் நாளை வெங்கடாஜலபதி பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
    X

    கோவிலில் நடந்த முதல் கால யாகசாலை பூஜையில் ஸ்ரீ பெரும்புத்துர் ஸ்ரீமத்பரமஹம்ச இத்தியாதி ஸ்ரீஅப்பன்பரகால ராமனுஜர் எம்பார் ஜீயர் சுவாமிகள்ஏ .சி.எஸ் கல்வி குழும தலைவர் ஏ.சி.சண்முகம் லலிதா லட்சுமி சண்முகம் பங்கேற்றனர்.

    ஆரணியில் நாளை வெங்கடாஜலபதி பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

    • ஏ.சி.எஸ். கல்வி குழும தலைவர் யாகசாலை பூஜையை தொடங்கி வைத்தார்
    • 95 அடி உயர ராஜகோபுரத்துடன் கோவில் கட்டப்படுகிறது.

    ஆரணி:

    ஆரணி அடுத்த இரும்பேடு கிராமத்தில் உள்ள ஏ.சி.எஸ் கல்வி குழும வளாகத்தில் புதிய நீதி கட்சி நிறுவனரும் ஏ.சி.எஸ் கல்வி குழும தலைவருமான ஏ.சி.சண்முகம் தன்னுடைய சொந்த செலவில் 95 அடி உயர ராஜகோபுரத்துடன் புதிய வெங்கடஜலபதி பெருமாள் கோவில் கட்டியுள்ளார்.

    இந்த கோவில் கும்பாபிஷேகம் நாளை காலை 10.00 மணிக்கு நடைபெறுகிறது. இதனையொட்டி நேற்று மாலை கணபதி பூஜை செய்து முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இதில் ஸ்ரீ பெரும்புத்துர் ஸ்ரீமத்பரமஹம்ச இத்தியாதி ஸ்ரீஅப்பன்பரகால ராமனுஜர் எம்பார் ஜீயர் சுவாமிகள்ஏ .சி.எஸ் கல்வி குழும தலைவர் ஏ.சி.சண்முகம் லலிதா லட்சுமி சண்முகம் பங்கேற்று பட்டாச்சாரியார்கள் முன்னிலையில் யாகசாலையில் கணபதி பூஜை செய்து முதல்கால யாகசாலை பூஜையை தொடங்கி வைத்தனர்.

    கோவிலின் ராஜகோபுரம் கோவில் வளாகத்தில் உள்ள சாமி கருவறை விமானங்கள் வைக்க கூடிய கலசங்களுக்கு பூஜை செய்து கோவிலுக்கு கொண்டு சென்றனர்.

    இதனை தொடர்ந்து பரதநாட்டியம் ஆன்மீக சொற்பொழிவு பட்டிமன்றம் நடந்தது. இன்று காலையில் பரத நாட்டியம் கலைமாமணி தேச மங்கையர்கரசி தலைமையில் ஆன்மீக சொற்பொழிவும் ஏ.பி.மணிசங்கர் குழுவினரின் மங்கள லய நாதம் லட்சுமணன் ஸ்ருதி இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (17-ம் தேதி ) காலை 10.00 மணிக்கு 3ம் கால யாகசாலை பூஜை மற்றும் வெங்கடஜலபதி கோவில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    இதனை தொடர்ந்து மாலை ஸ்ரீ பத்மாவதி தாயார் சமேத வெங்கடஜலபதி சாமி திருக்கல்யாண உற்சவம் ஆன்மீக சொற்பொழிவு இன்னிசை கச்சேரி நாடகம் நடைபெறுகின்றன.

    மேலும் கும்பாபிஷேகத்திற்கு திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து பெரிய ஜீயர்கள் சின்ன ஜீயர்கள் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பட்டாச்சியார்கள் பங்கேற்று யாகசாலை பூஜைகள் நடத்தபடுள்ளன. கும்பாபிஷேகம் விழாவில் முன்னாள் பாரத பிரதமர் தேவகவுடா முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம் மத்திய அமைச்சர் எல்.முருகன் மணிப்பூர் மாநில ஆளுநர் இல.கணேசன் தெலுங்கான மாநில கவர்னர் தமிழசை சௌந்தர்ராஜன் பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு அமைச்சர்கள் துரைமுருகன், ஆர்.காந்தி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஆந்திரா மாநில அமைச்சரும் நடிகையுமான ரோஜா, நடிகர் ரஜினிகாந்த், காஞ்சி மடாதிபதி ஸ்ரீவிஜேயந்திர சரஸ்வதி சுவாமிகள், ரத்திகிரி பாலமுருகன் அடிகளார், வேலூர் ஸ்ரீபுரம் சக்திஅம்மா, திரையுலகினர் மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் தொழிலதிபர்கள் பக்தர்கள் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொள்வதாக புதிய நீதி கட்சி நிறுவனரும் ஏ.சி.எஸ் கல்வி குழும தலைவருமான ஏ.சி.சணமுகம் தெரிவித்தார். இந்த கும்பாபிஷேக விழாவில் ஆரணி எம்.எல்.ஏ சேவூர் ராமசந்திரன் ஏ.சி.எஸ் கல்லூரி செயலர் ஏ.சி.ரவி ஏ.சி.எஸ். மெட்ரிக் ப்ளளி தாளளரும் நகரமன்ற உறுப்பினருமான ஏ.சி.பாபு ஏ.சி.எஸ். கல்வி குழும பள்ளி முதல்வர்கள் பேராசிரியர்கள் ஆசிரியர்கள் ஆசிரியைகள் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

    Next Story
    ×