என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பால்குடம் திருவிழா"

    • 5 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கிறது.
    • 1008 பால்குடம் எடுத்து ஊர்வலம் சென்றனர்.

    செங்கம்:

    செங்கம் அருகில் காயம்பட்டு கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் திருவிழா நடந்தது. கிராம மக்கள் பலர் விரதம் கடைப்பிடித்து காப்புக்கட்டி கொண்டனர்.

    பெண்கள் 1008 பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து காளியம்மனுக்கு பாலாபி ஷேகம் செய்தனர். அதன் பிறகு விசேஷ அபிஷேகங்கள் , அலங் காரங்கள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட் டது . திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு பாட்டு கச்சேரி உள்பட கலை நிகழ்ச்சி கள் நடந்தது.

    5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் காளியம்மன் கோவில் திரு விழா.காண செங்கம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராம மக்கள் மட்டுமின்றிவெளி மாவட் டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் பலர் வந்து அம்பாளை தரிசனம் செய்தனர்.

    ×