என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜனதா கட்சியின் சார்பில் கோரிக்கை மனு"

    • உடனடியாக தீர்வு காண கலெக்டரிடம் பா.ஜ.க. மனு
    • காலியாக உள்ள கிரிவலம் மேம்பாட்டு ஆணைய தலைவர் பதவியை நிரப்ப வேண்டும்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் இடம் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது அதில், இந்து சமய அறநிலையத் துறையின் 450 வழக்குகள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் நிலுவையில் உள்ளதை உடனடியாக தீர்வு காணவேண்டும்.

    கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ள கிரிவலம் மேம்பாட்டு ஆணைய தலைவர் பதவியை நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் மனு அளிக்கப்பட்டது.

    அப்போது ஆன்மீகம் மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு மாநில துணை தலைவர் சங்கர், ஓபிசி அணி மாநில துணைத்தலைவர் பாலசுப்ரமணியம், மாநிலச் செயலாளர் ஊடகப்பிரிவு முரளி மோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    ×