என் மலர்
நீங்கள் தேடியது "Petition asking for fire"
- 700 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
- சுடுகாட்டுக்கு 2 கி.மீ. தூரம் செல்ல வேண்டும்.
வந்தவாசி:
வந்தவாசியை அடுத்த சென்னாவரம் ஊராட்சியில் இரு சுடுகாடுகள் அமைக்க இடம் வழங்கக் கோரி கிராம மக்கள் தாசில் தாரிடம் ேநற்று மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதவாது:-
சென்னாவரம் அடுத்த கோபாலகிருஷ்ணன் தெரு, சாரதி தெரு, ராமசாமி தெரு, அன்னை சத்யா நகர், காந்தி நகர், மாணக்ராஜ் தெரு, சின்னதம்பி தெரு, மேல்மருவத்தூர் சாலை ஆகிய பகுதிகளில் சுமார் 700 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதிகளிலிருந்து சென்னாவரம் சுடுகாட்டுக்கு சுமார் 2 கி.மீ. தூரம் செல்ல வேண்டும். இதனால் இந்த பகுதி மக்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே இந்த பகுதிகளுக்கென ஒரு சுடுகாடு அமைக்க இடம் வழங்க வேண்டும்.
மேலும் சென்னாவரம் ஊராட்சிக்கு உள்பட்ட எம்ஜிஆர் நகர் காலனி பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கென ஒரு சுடுகாடு அமைக்க இடம் வழங்க வேண்டும்.
இரு சுடுகாடுகளுக்கும் இடம் வழங்கக் கோரி பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இதுகுறித்து உடனடியாக உரிய நடவடிக்கை வேண்டும்என மனுவில் கூறியிருந்தனர்.






