என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் துணை சபாநாயகர் பிச்சாண்டி பேசினார். அருகில் அண்ணாதுரை எம்.பி. சரவணன் எம்.எல்.ஏ. உட்பட பலர் உள்ளனர்.
திருவண்ணாமலையில் கருணாநிதி சிலையை மு.க.ஸ்டாலின் வருகிற 9-ந்தேதி திறந்து வைக்கிறார்
- துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தகவல்
- நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்க வேண்டும்
கலசப்பாக்கம்:
துரிஞ்சாபுரம் ஒன்றியம் சார்பில் தி.மு.க. கூட்டம் நடந்தது. அண்ணாதுரை எம்.பி., தலைமை வகித்தார். கிழக்கு ஒன்றிய செயலாளர் அண்ணாமலை மாவட்ட துணைச்செயலாளர் பாரதிராமஜெயம் யூனியன் சேர்மன் தமயந்தி ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்எல்ஏ சரவணன் வரவேற்றார். தலைமை பேச்சாளர் தமிழன்பிரசன்னா கலந்துகொண்டு பேசினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக துணை சபாநாயகர் பிச்சாண்டி கலந்து கொண்டு பேசினார்.
தமிழகத்தில் தொடர்ந்து 13 முறை சட்டமன்றத் தேர்தலில் நின்று வெற்றி பெற்ற ஒரே தலைவர் நமது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிதான் தமிழக மக்களுக்காக எண்ணற்ற பல திட்டங்களை கொண்டுவந்துள்ளார்.
விவசாயிகளுக்காக அதிகளவு திட்டங்களைக் கொண்டு வந்தவர் அதேபோல் அடித்தட்டு மக்களுக்காக பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை கொண்டுவந்து செயல்படுத்தியவர் தான் மறைந்த முதலமைச்சர் அவருக்காக தான் இந்த பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் அடுத்த மாதம் 9-ந்தேதி கருணாநிதியின் திருவுருவச்சிலை திருவண்ணாமலையில் திறக்கப்பட உள்ளது இவ்விழாவிற்கு முதல்வர் மு க ஸ்டாலின் வருகை தர உள்ளார். அந்த விழாவில் அதிக அளவு கட்சியினர் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். கிளை செயலாளர் செங்குட்டுவன் நன்றி கூறினார்.






