என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Refusal to accept love"

    • வீடு புகுந்து வாலிபர் வெறிச்செயல்
    • காதலை ஏற்குமாறு அடிக்கடி வற்புறுத்தி வந்துள்ளார்.

    திருவண்ணாமலை:

    கலசப்பாக்கம் அடுத்த கடலாடி பகுதியில் ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். காஞ்சி அடுத்த மேல்பாலூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்வாணன் (வயது 25) என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கல்லூரி மாணவியை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    மாணவியிடம் தன் காதலை ஏற்குமாறு அடிக்கடி வற்புறுத்தி வந்துள்ளார்.

    இந்த நிலையில் மாணவியின் வீட்டிற்கு நேரடியாக சென்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன் காதலை எடுத்துக் கூறி ஏற்றுக்கொள்ளுமாறு அந்த மாணவியிடம் தமிழ்வாணன் வலியுறுத்தியுள்ளார்.

    மாணவி மறுத்ததால் ஆத்திரமடைந்த தமிழ்வாணன் மாணவியை கன்னத்தில் அறைந்துவிட்டு கழுத்து நெரித்து கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தபோது வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இது சம்பந்தமாக மாணவி கொடுத்த புகாரின் பேரில் கடலாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வாலிபரை தேடி வருகின்றனர்.

    ×