திருவண்ணாமலையில் இன்று இரவு பவுர்ணமி கிரிவலம்

திருவண்ணாமலையில் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சிவனாக வழிபடுவதால் பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.ஞாயிற்றுக்கிழமை விடுமுறை மட்டுமின்றி வைகாசி விசாகம் என்பதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
திருவண்ணாமலையில் இன்று இரவு பவுர்ணமி கிரிவலம்
Published on

திருவண்ணாமலை:

நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது.

இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். திருவண்ணாமலையில் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சிவனாக வழிபடுவதால் பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

இந்த மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் இன்று (திங்கட்கிழமை) இரவு 8.20 மணியளவில் தொடங்குகிறது.

தொடர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5.55 மணியளவில் கிரிவலம் நிறைவடைகிறது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை மட்டுமின்றி வைகாசி விசாகம் என்பதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

பக்தர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

பிரதோஷத்தை முன்னிட்டு கோவில் பிரகாரத்தில் உள்ள பெரிய நந்தி உள்ளிட்ட நந்தி பகவானுக்கும், சாமிக்கும் பால், தேன், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com