என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரேணுகாம்பாள் கோவில் கும்பாபிஷேகம்
    X

    சாத்தப்பூண்டி கிராமத்தில் ரேணுகாம்பாள் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்த போது எடுத்த படம்.

    ரேணுகாம்பாள் கோவில் கும்பாபிஷேகம்

    • 3 யாக குண்டங்கள் அமைத்து வழிபாடு.
    • பக்தர்கள் மீது புனித நீர் தெளித்தனர்.

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் அருகே உள்ள சாத்தப்பூண்டி, கிராமத்தில் ரேணுகாம்பாள் கோவில் உள்ளது.

    இந்த கோவிலை புதிதாக புதுப்பித்து பஞ்ச வர்ணம் பூசி இதன் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. கோவிலின் முன்பு யாகசாலை அமைத்து, 3 யாக குண்டங்கள் அமைத்து, பல்வேறு நதியிலிருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் கலசத்தை வைத்து.

    கோ பூஜை, கணபதி பிரார்த்தனை, மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், ஆகிய மூன்று கால பூஜைகள் செய்யப்பட்டது. புனிதநீர் கலசத்தை கோவிலை சுற்றி வந்து கோவில் மீது உள்ள விமான கோபுரத்தின் மீது புனித நீரை ஊற்றினார்கள்.

    பின்னர் அங்கு கூடி இருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளித்தனர்.

    கும்பாபிஷேக விழாவில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தரணி வேந்தன், வந்தவாசி தொகுதி அம்பேத்குமார், எம்எல்ஏ.செய்யாறு தொகுதி ஜோதி, எம்எல்ஏ. உள்பட பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×