என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது
    • ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள குப்பம் கிராமத்தில் காளியம்மன் தேர் திருவிழா நடைபெற்றது.

    காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கா ரத்துடன் தீபாராதனை நடைபெற்றது பின்னர் பொதுமக்கள் ஊரணி பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

    பிற்பகல் தொடங்கிய காளியம்மன் தேரை எம்.எல்.ஏ. சரவணன் வடம் பிடித்து தொடங்கி வைத்தார். இதில் குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் அனிதாமுரளி, துணை தலைவர் வீரமணிகண்டன், போளூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆர் வி சேகர், ஒன்றிய கவுன்சிலர் சுகுணாகிருஷ்ணமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர்கள் சீதாராமன், முருகதாஸ், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பொதுமக்கள் சீர் வரிசை கொண்டு வந்து அம்மனுக்கு படையலிட்டனர்.

    தேரோட்டம் நடக்கும் வீதிகளில் உள்ள மின் வயர்கள் மின்வாரிய சிலம்பரசன், பணியா ளர்கள் உடனுக்குடன் சீரமைத்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா மற்றும் போலீசார் செய்து இருந்தனர். இன்று காலை பகல் ரத உற்சவம் நடக்கிறது.

    முன்னதாக எம் எல் ஏ சரவணன் படவேடு பெருமாள்பேட்டை பள்ளியில் ரூ.4.5 லட்சம் மதிப்பில் புதிய சமையல் கூடம் கட்டும் பணியை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். மேலும் ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் காம்பவுண்டு சுவர் கட்டும் பணியையும் பார்வையிட்டார்.

    காளசமுத்திரம் சாலை யில் பள்ளக்கொல்லை ஏரிக்கோடி பகுதியில் ரூ.40 லட்சம் மதிப்பில் புதிய பாலம் கட்டும் பணிகளை எம் எல் ஏ சரவணன் பார்வையிட்டு, மழைக்காலம் தொடங்கும் முன் விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    • கம்பி அறுந்து நிலத்தில் விழுந்து கிடந்தது
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    கலசப்பாக்கம் அடுத்த காம்பட்டை சேர்ந்தவர் சக்கரவர்த்தி (வயது 52). இவர் மக்கள் நல பணியாளராக பணிபுரிந்து வந்தார்.

    நேற்று சக்கரவர்த்தி அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றார். அப்போது மின்சார கம்பத்திலிருந்து ஒரு கம்பி அறுந்து நிலத்தின் வரப்பில் விழுந்து கிடந்தது. அதனை சக்கரவர்த்தி மிதித்துள்ளார்.

    இதில் அவரை தூக்கி வீசியது இதில் படுகாயம் ஏற்பட்ட சக்கரவர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றிய தகவல் அறிந்த கலசப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து சக்கரவர்த்தியின் உடலை பிரேத பரி சோத னைக்காக திருவண்ணா மலை அரசு மருத்துவ மனை அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து கலசப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • அதிகாரிகள் திடீர் ஆய்வு
    • ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 3 கடைகள் மீது வழக்கு தொடரப்பட்டு தலா 10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவது 1986 -ன் கீழ் சட்டப்படி குற்றமாகும். சட்டத்தை மீறும் நிறுவனங்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் மேலும் நீதிமன்றத்தால் ரூபாய் 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை அபதாரம் அல்லது ஆறு மாதம் முதல் 2 வருடங்கள் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்ந்தோ தண்டனை வழங்கப்படும்.

    திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் உத்தரையின்படி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1 தேதி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வளரிளம் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய கடைகள் மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலா ளர்கள் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் வழக்கு தொ டரப்பட்டன.

    வளரிளம் தொழி லாளர்க ளையும் மீட்கப்பட்டன. இதில் மூன்று உரிமையா ளர்களின் மீதும் நீதிம ன்றத்தால் தலா 10 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்க ப்பட்டு ள்ளதாக திருவண்ணா மலை தொழிலாளர் உதவி ஆணையர் மீனாட்சி தெரிவித்து ள்ளார்.

    • 8 பவுன் நகைகள் அபேஸ்
    • கள்ள சாவி போட்டு துணிகரம்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை குபேர நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் லட்சுமி (48) என்பவர் கடந்த மாதம் தேவனந்தல் கிராமத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    பின்னர் அன்று மாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு திறக்கப் பட்டு கிடந்துள்ளது. உள்ளே சென்று பீரோவை பார்த்த போது பீரோவும் திறக்கப்பட்டு அதிலிருந்த 8 பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றிருப்பதை தெரியவந்துள்ளது.

    இது குறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசில் லட்சுமி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், அதே பகுதியில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்த திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெயந்தியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் லட்சுமி வீட்டின் பூட்டை மாற்று சாவியில் திறந்து நகைகளை திருடிச்சென்றது தெரியவந்துள்ளது.

    இதையடுத்து போலீசார் ஜெயந்தியை கைது செய்து அவரிடமிருந்து நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

    • போக்சோ சட்டத்தில் கைது
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த வேட்டவலம் பகுதியைச் சேர்ந்த 20 வயது வாலிபரும் அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 10-ம் படிக்கும் 16 வயது மாணவியும் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாலிபர் அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த மாணவிக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு மாணவியை அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர். அப்போது அவர் 4 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மாணவியிடம் கேட்டபோது அவர் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து மாணவியின் பெற்றோர் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

    புகாரின் பேரில் 10-ம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • துரிஞ்சிக்குப்பம் ஆதிபராசக்தி கோவிலில் ஆடிப்பூர விழா நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்

    கண்ணமங்கலம்:

    சந்தவாசல் அருகே உள்ள துரிஞ்சிக்குப்பம் ஆதி பராசக்தி கோவிலில் நேற்று ஆடிப்பூர விழா நடந்தது.

    காலையில் அம்மன் அபிஷேகம் அலங்காரம் நடந்தது. இதில் பக்தர்கள் முதுகில் அலகுகுத்தி தேர் இழுத்தனர். பின்னர் கொதிக்கும் எண்ணெய்யில் வடையும், மார்பில் உரல் வைத்து மஞ்சள் இடித்து பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். இரவில் அம்மனுக்கு திருவீதி உலாவும், நாடகம் நடந்தது. கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர விழா அம்மனுக்கு வளையல் அலங்காரம், இரவில் தேர் உட்பிரகார உலா நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ஒண்ணுபுரம் சவுடேஸ்வரி கோவிலில் அம்மனுக்கு ஆடிப்பூர முன்னிட்டு வளையல் அலங்காரம் நடைபெற்றது.

    இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • முலவர்களுக்கு மகாதீப ஆராதனை நடந்தது
    • பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

    செங்கம்:

    செங்கம் அருகே உள்ள தாழையுத்து கிராமத்தில் விநாயகர் மற்றும் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று தொடர்ந்து 48 நாள் மண்டல அபிஷேகம் நடைபெற்று வந்தது.

    நேற்று 48 வது நாள் மண்டல அபிஷேகம் நிறைவு நாளை முன்னிட்டு பொதுமக்கள் சார்பில் 108 பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து கோவிலில் சூலம் வடிவில் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. விநாயகர் மற்றும் மாரியம்மன் முலவர்களுக்கு பாலாபிஷேகம் செய்து வண்ண மலர்களால் அலங்கரித்து மகாதீப ஆராதனை நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து பக்தர்களுக்கும் பொது மக்களுக்கும் அன்னதானம் விழா குழுவின் சார்பாக வழங்கப்பட்டது.

    • ரூ.1.84 கோடியில் அமைக்கப்படுகிறது
    • நகர மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டவுன், 1வது வார்டு, அண்ணாநகர் டேங்க் தெருவில் ரூ1.84 லட்சத்தில் அறிவுசார் மையத்திற்கான பூமி பூஜை விழா நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர் கி.ரகுராமன், 1வது வார்டு கவுன்சிலர் சரஸ்வதி ரவிக்குமார், துணைத் தலைவர் குல்சார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர மன்ற தலைவர் ஆ. மோகனவேல் தலைமை தாங்கி பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர் ரமேஷ், விஜய பாஸ்கரன், சின்னதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.3067 சதுர அடியில் 1.84 கோடியில் கட்டப்படும் அறிவுசார் மைய நூலகத்தில் டிஜிட்டல் லைப்ரரி தனி அறையாகவும், நாளிதழ் மற்றும் புத்தகங்கள் படிக்க ஆண், பெண் என தனித்தனி அறைகளும், வாகனங்கள் நிறுத்த வசதி, கழிப்பறை வசதிகளோடு இந்த நூலகம் அமைக்கப்படுகிறது.

    • போக்சோ சட்டம் பாய்ந்தது
    • போலீசார் கைது செய்து விசாரணை

    போளூர்:

    போளூர் அருகே உள்ள சேங்கபுத்தரி கிராமத்தைச் சேர்ந்த (17 வயது) ஆன இளம் பெண் 12 ஆம் வகுப்பு படித்து விட்டு போளூரில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார்.

    வழக்கம்போல் காலையில் வேலைக்கு சென்று மாலையில் வீடு திரும்புவார். கடந்த 23ஆம் தேதி வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார்.

    ஆனால் மாலை அவர் வீட்டுக்கு வராதால் பல இடங்களில் அவர் தந்தை தேடினார்.

    பின்னர் இது குறித்து போளூர் போலீசில் புகார் செய்தார் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் சப் இன்ஸ்பெக்டர் ஐயப்பன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து இளம் பெண்ணை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் போளூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பொக்லைன் டிரைவர் இளம்பெண்ணை கடத்தி சென்று கடந்த 30ஆம் தேதி கோவில் வைத்து திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து மைனர் பெண்ணை கடத்தி சென்றதாக பொக்லைன் டிரைவரை போலீசார் கைது செய்தனர். மேலும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து வேலூர் மத்திய சிறையில் அவரை அடைத்தனர்.

    • ஆடிப்பூர விழா நிறைவடைந்தது
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அம்மன் சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் ஆடி பிரம்மோற்சவ விழா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலையில் விநாயகர், பராசக்தி அம்மன் சாமி வீதி உலா நடைபெற்றது.

    ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா நிறைவை ஒட்டி நேற்று காலை கோவிலில் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றன. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள சிவகங்கை தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மங்கள வாத்தியங்கள் முழங்க சிவகங்கை தீர்த்த குளத்திற்கு வந்தனர்.

    இதையடுத்து சூலரூபமான அம்மனுக்கு குளத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் கூற மங்கள வாத்தியங்கள் முழங்க தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடர்ந்து மாலையில் வளைகாப்பு மண்டபத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டு வளைகாப்பு உற்சவம் நடைபெற்றன.

    இதனை தொடர்ந்து நேற்று இரவு 12 மணிக்கு உண்ணாமலை அம்மன் சன்னதி முன்பு தீமிதி திருவிழா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • 503 பெண்கள் பங்கேற்றனர்
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை. மாவட்டம் தேசூரில் உள்ள பெரிய ஏரிகரை முனீஸ்வரன் கோவில் 20 ஆம் ஆண்டு 503 பால்குடம் ஊர்வலம். எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    கடந்த 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலையில் தேசூர் பேரூராட்சி பள்ளத் தெருவில் உள்ள கெங்கை அம்மன் கோவிலில் மாங்கல்ய பூஜை, மற்றும் அன்னதானம், ஆகியவை வழங்கி விழா தொடங்கியது.

    இதை தொடர்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை கெங்கை அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேகங்கள் செய்து.விரதம் இருந்த சுமங்கலி பெண்கள் பால்குட ஊர்வலம், குழந்தை வரம், திருமண தடை நீங்குதல், ஆகிய பல்வேறு வேண்டுதல்களை வலியுறுத்தி 503சுமங்கலி பெண்கள் தலையில் பால் குடம் ஏந்தியவாறு தேசூரில் உள்ள மாட வீதி வழியாக ஊர்வலமாக வந்தனர்.

    முன்னதாக தேசூர் பெரிய ஏரிக்கரை முனீஸ்வரர் பல்வேறு வண்ண மலர்களால் புஷ்ப பல்லக்கில் ஜோடிக்கப்பட்டு முத்து கொண்டை, அலங்காரத்தில் ஊர்வலமாக வந்தார்.பின்னர் ஊர்வலமாக வந்த சுமங்கலி பெண்கள் மூலவர்.முனீஸ்வரருக்கு பால் அபிஷேகம், செய்தனர்.

    பின்னர் முனீஸ்வரர், கோயில் வளாகத்தில் அனைவருக்கும் சமபந்தி அன்னதானம் நடந்தது.இரவு கெங்கை அம்மன் கோவில், வளாகத்தில் வானவேடிக்கை நிகழ்ச்சி, மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தரணிவேந்தன், கலந்து கொண்டு பால்குடம் ஊர்வலத்தில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராதா, தேசூர் பேரூர் கழக திமுக செயலாளர் மோகன், பேரூராட்சி மன்ற தலைவர் ராதா ஜெகவீரபாண்டியன், தொழிலதிபர் சாந்தி குப்புரத்தினம், ஜெயபிரகாஷ் சூர்யா, ரத்தினம் பில்டர்ஸ் தேசூர், மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் ஏராளமான கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை தேசூர் பள்ள தெரு செட்டியார், சமூகத்தினர், தேசூர் ஊர் பெரியவர்கள், விழா குழுவினர், இளைஞர்கள், மற்றும் விழா குழுவினர்கள், செய்து இருந்தனர்.

    • அபாயகரமான நிலையில் உள்ளவரை போராடி மீட்பவர்களுக்கு விருது
    • கலெக்டர் தகவல்

    திருவண்ணாமலை:

    ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது என்று திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் சார்பில் பல்வேறு நிகழ்வுகளான நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், மின்சார விபத்துக்கள், தீ விபத்துகள், நிலச்சரிவு, விலங்கின தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபட்டு மனித உயிர்களை மீட்பவர்களுக்கு ஜீவா ரக்‌ஷா பதக்க விருதுகள் வழங்கி வருகிறது. சர்வோத்தம் ஜீவன் ரக்‌ஷா பதக்கம் - மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை வீரத்துடன் போராடி மீட்பவர்களுக்கு இவ்விருது வழங்கப்படும்.

    உத்தம் ஜீவன் ரக்‌ஷா பதக்கம் - துணிச்சலுடன் தாமதமின்றி செயல்பட்டு மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை போராடி மீட்பவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. ஜீவன் ரக்‌ஷா பதக்கம் - தனக்கு காயம் ஏற்படினும், வீரத்துடன் தாமதமின்றி செயல்பட்டு உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. அதன்படி 2022-ம் ஆண்டிற்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இந்த விருதிற்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணைய தள முகவரியான www.sdat.tn.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 2022-ம் ஆண்டிற்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதிற்கான விண்ணப்பம் எனக் குறிப்பிட்டு விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை "மாவட்ட விளையாட்டு அலுவலகம், கலெக்டர் வளாகம் பின்புறம், வேங்கிக்கால், திருவண்ணாமலை மாவட்டம் -606604" என்ற முகவரிக்கு வருகிற ஆகஸ்டு மாதம் 10-ந் தேதியன்று மாலை 5 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்ப வேண்டும்.

    மேலும் கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 04175-233169 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×