என் மலர்
உள்ளூர் செய்திகள்

பால்குட ஊர்வலம் நடந்த காட்சி.
தேசூரில் முனீஸ்வரன் கோவிலில் பால் குட ஊர்வலம்
- 503 பெண்கள் பங்கேற்றனர்
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை. மாவட்டம் தேசூரில் உள்ள பெரிய ஏரிகரை முனீஸ்வரன் கோவில் 20 ஆம் ஆண்டு 503 பால்குடம் ஊர்வலம். எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
கடந்த 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலையில் தேசூர் பேரூராட்சி பள்ளத் தெருவில் உள்ள கெங்கை அம்மன் கோவிலில் மாங்கல்ய பூஜை, மற்றும் அன்னதானம், ஆகியவை வழங்கி விழா தொடங்கியது.
இதை தொடர்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை கெங்கை அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேகங்கள் செய்து.விரதம் இருந்த சுமங்கலி பெண்கள் பால்குட ஊர்வலம், குழந்தை வரம், திருமண தடை நீங்குதல், ஆகிய பல்வேறு வேண்டுதல்களை வலியுறுத்தி 503சுமங்கலி பெண்கள் தலையில் பால் குடம் ஏந்தியவாறு தேசூரில் உள்ள மாட வீதி வழியாக ஊர்வலமாக வந்தனர்.
முன்னதாக தேசூர் பெரிய ஏரிக்கரை முனீஸ்வரர் பல்வேறு வண்ண மலர்களால் புஷ்ப பல்லக்கில் ஜோடிக்கப்பட்டு முத்து கொண்டை, அலங்காரத்தில் ஊர்வலமாக வந்தார்.பின்னர் ஊர்வலமாக வந்த சுமங்கலி பெண்கள் மூலவர்.முனீஸ்வரருக்கு பால் அபிஷேகம், செய்தனர்.
பின்னர் முனீஸ்வரர், கோயில் வளாகத்தில் அனைவருக்கும் சமபந்தி அன்னதானம் நடந்தது.இரவு கெங்கை அம்மன் கோவில், வளாகத்தில் வானவேடிக்கை நிகழ்ச்சி, மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தரணிவேந்தன், கலந்து கொண்டு பால்குடம் ஊர்வலத்தில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராதா, தேசூர் பேரூர் கழக திமுக செயலாளர் மோகன், பேரூராட்சி மன்ற தலைவர் ராதா ஜெகவீரபாண்டியன், தொழிலதிபர் சாந்தி குப்புரத்தினம், ஜெயபிரகாஷ் சூர்யா, ரத்தினம் பில்டர்ஸ் தேசூர், மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் ஏராளமான கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை தேசூர் பள்ள தெரு செட்டியார், சமூகத்தினர், தேசூர் ஊர் பெரியவர்கள், விழா குழுவினர், இளைஞர்கள், மற்றும் விழா குழுவினர்கள், செய்து இருந்தனர்.






