என் மலர்
உள்ளூர் செய்திகள்

செய்யாறு டவுன் 1-வது வார்டில் அறிவு சார் மையத்திற்கான பூமி பூஜை
- ரூ.1.84 கோடியில் அமைக்கப்படுகிறது
- நகர மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டவுன், 1வது வார்டு, அண்ணாநகர் டேங்க் தெருவில் ரூ1.84 லட்சத்தில் அறிவுசார் மையத்திற்கான பூமி பூஜை விழா நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர் கி.ரகுராமன், 1வது வார்டு கவுன்சிலர் சரஸ்வதி ரவிக்குமார், துணைத் தலைவர் குல்சார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர மன்ற தலைவர் ஆ. மோகனவேல் தலைமை தாங்கி பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர் ரமேஷ், விஜய பாஸ்கரன், சின்னதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.3067 சதுர அடியில் 1.84 கோடியில் கட்டப்படும் அறிவுசார் மைய நூலகத்தில் டிஜிட்டல் லைப்ரரி தனி அறையாகவும், நாளிதழ் மற்றும் புத்தகங்கள் படிக்க ஆண், பெண் என தனித்தனி அறைகளும், வாகனங்கள் நிறுத்த வசதி, கழிப்பறை வசதிகளோடு இந்த நூலகம் அமைக்கப்படுகிறது.
Next Story