என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • மலர் தூவி வரவேற்பு
    • கால்வாயில் கழிவு நீர் கலப்பதாக விவசாயிகள் புகார்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் ஏரி சமீபத்தில் பெய்து வந்த தொடர் மழையால், சிங்கிரி கோவில் அணைக்கட்டு பகுதியில் இருந்து நீர் வரத்து கால்வாய் மூலம் தண்ணீர் வரத்து ஏற்பட்டு நிரம்பி வழிந்தது.

    இதையடுத்து கிராம பொதுமக்கள், விவசாயிகள் மாரியம்மன் கோவிலில் பூஜை செய்து மேளதாளத்துடன் கொளத்தூர் உபரிநீர் வழிந்தோடும் இடத்திற்கு வந்தனர். அங்கு விவசாயிகள் சிவாஜி, நடராஜன், ஆறுமுகம், மாவட்ட கவுன்சிலர் பூங்கொடிதிருமால், ஒன்றிய கவுன்சிலர் குமார்ராஜா, ஊராட்சி மன்ற தலைவர் கலைவாணிஆனந்தன், துணை தலைவர் சாலம்மாள், கிராம நிர்வாக அலுவலர் ரெஜினால்டு ஜேம்ஸ் உள்பட கலந்து கொண்டு சிறப்பு பூஜை செய்து, மலர் தூவி தண்ணீர் திறந்து வைத்தனர். இதில் கிராம பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இந்த ஏரியின் உபரிநீர் கால்வாய் வழியாக கண்ணமங்கலம் ஏரிக்கு செல்கிறது. ஏற்கனவே கண்ணமங்கலம் ஏரி நிரம்பி அதன் உபரிநீர் வழிந்தோடுகிறது.

    கண்ணமங்கலம் ஏரி மதகுகளை திறக்கவேண்டும் என விவசாயிகள் சங்கம் சார்பில் பலமுறை பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் பொதுப்பணித்துறை சார்பில் இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மேலும் கணணமங்கலம் ஏரிக்கால்வாயில் கழிவு நீர் கலப்பதால் ஏரி முழுவதும் நாற்றமெடுத்து வருவதாக ஏரிக்கு கீழ் நிலங்கள் வைத்துள்ள விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

    மேலும் கணணமங்கலம் ஏரிக்கரை மீது புல் பூண்டுகள் வளர்ந்து நடந்து செல்லமுடியாமல் விவசாயிகள் பெருத்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    • ராஜகோபுரம் முன்பாக கிரிவலப் பாதை தூய்மைப்படுத்தும் பணிகளை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • கோவிலில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு கேட்டறிந்தார்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது. டிசம்பர் 6-ந் தேதி மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    சாமி உற்சவ வாகனங்கள் மற்றும் பஞ்சரதங்கள் சீரமைக்கும் பணி நடக்கிறது.

    மேலும் கிரிவலப்பாதையில் தூய்மை பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் இன்று காலை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆய்வு செய்தார்.

    ராஜகோபுரம் முன்பாக கிரிவலப் பாதை தூய்மைப்படுத்தும் பணிகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் கோவிலில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

    தொடர்ந்து பரணி தீபம், மகாதீபம் ஏற்றப்படும் போது செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து அவர் கேட்டறிந்தார்.

    அறநிலை துறை முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன், ஆணையர் குமரகுருபரன், கலெக்டர் முருகேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், கோவில் இணை ஆணையர் அசோக் குமார், தி.மு.க. மருத்துவ அணி துணை தலைவர் கம்பன், முன்னாள் நகர் மன்ற தலைவர் ஸ்ரீதரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • 2 நாள் நடந்தது
    • கணினியின் பயன்பாடு, பொது நிதி மேலாண்மை கணக்கு மற்றும் அதன் மின்னணு பரிமாற்ற முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது









    திருவண்ணாமலை:

    சென்னை மறைமலை நகர் ஊரக வளர்ச்சி பயிற்சி நிறுவனமானது திருவண்ணாமலை ஊராட்சிகளுக்கான மாவட்ட வள மையத்துடன் ஒருங்கிணைந்து தென்மாத்தூரில் உள்ள அருணை பொறியியல் கல்லூரியில் திருவண்ணாமலை கோட்டத்திற்கு உட்பட்ட 385 கிராம ஊராட்சிகளில் பணி புரியும் கிராம ஊராட்சி செயலர்களுக்கு 2 நாள் அடிப்படை கணினி பயிற்சி நடைபெற்றது.

    பயிற்சி முகாமை ஊராட்சிகள் உதவி இயக்குனர் சரண்யாதேவி, திருவண்ணமாலை கோட்டத்தின் வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) சம்பத் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

    இந்த பயிற்சியில் திருவண்ணாமலை, துரிஞ்சாபுரம், தண்டராம்பட்டு , செங்கம், புதுப்பாளையம், கலசபாக்கம், போளூர், ஜவ்வாதுமலை, கீழ்பென்னாத்தூர் ஆகிய 9 ஒன்றியங்களின் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலர்களுக்கு கணினியின் பயன்பாடு , பொது நிதி மேலாண்மை கணக்கு மற்றும் அதன் மின்னணு பரிமாற்ற முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

     இனிவரும் காலங்களில் ஆன்லைன் மூலமாகவே அனைத்து கிராம ஊராட்சி கணக்குகளும் செயல்படுத்தப்படும் என்ப தால் கிராம ஊராட்சி செயலர்கள் கணினி குறித்த அறிவாற் றல் பெற்றிருக்க வேண்டும் என்று இந்த பயிற்சி முகாமில் வலியுறுத்தப்பட்டது. முன்னதாக மாவட்ட வள மையத்தின் பயிற்சி ஒருங்கி ணைப்பாளர் ஏசுதாஸ் வரவேற்றார்.

    • சாலை வசதி கேட்டு நடந்தது
    • பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த மெய்யூர் கிராமத்தில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு செல்லும் சாலையை கடந்த பல ஆண்டுகளாக சீரமைக்காததால் சேரும் சகதியமாக காட்சி அளிக்கிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடமும் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் மெய்யூரில் இருந்து பள்ளி கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் கடும் அவதி அடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த ஆண்கள் பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று காலை சேரும் சகதியுமாக உள்ள சாலையில் ஏர் உழுது நாற்று நடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சாலை வசதி கேட்டு ஏர் உழுது நாற்று நடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சுவர் ஏறி குதித்து துணிகரம்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணி டவுன் வி.ஏ.கே நகரில் பழமை வாய்ந்த சக்தி விநாயகர் கோவில் உள்ளது.

    நேற்று இரவு அங்கு பைக்கில் வந்த 3 பேர் கோவிலின் சுவற்றில் ஏறி குதித்து உள்ளே சென்று அங்கிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இன்று காலை வழக்கும் போல் கேட்டை திறந்து உள்ளே சென்ற அர்ச்சகர் உண்டியல் உடைத்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் அளித்தார்.

    நிர்வாகிகள் கோவிலுக்கு வந்து பார்த்தபோது உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது இது குறித்து ஆரணி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கோவில் அருகே உள்ள கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் 3 பேர் பைக்கில் வந்து சுவர் ஏறி குறித்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த கோவிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பும் கொள்ளையில் அதே நபர்கள் மீண்டும் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    • அமைச்சர் எ.வ.வேலு சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயம் வழங்குகிறார்
    • அரசு அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை வேங்கிக்கால் ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.

    விழாவிற்கு திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்குகிறார். சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி முன்னிலை வகிக்கிறார்.

    விழாவில் பொதுப்பணி துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாவட்ட அளவிலான சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு கேடயங்கள் மற்றும் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.

    விழாவில் எம். பி.அண்ணாதுரை, எம்.எல்.ஏ.க்கள் சரவணன், கிரி, அம்பேத்குமார், ஜோதி, அக்ரி.கிருஷ்ணமூர்த்தி, ராமச்சந்திரன் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கூட்டுறவு நிறுவனங்களின் தலைவர்கள் இயக்குனர்கள் அரசு அலுவலர்கள் கலந்து கலந்து கொள்கின்றனர்.

    • கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை
    • சாத்தனூர், குப்பநத்தம் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பலத்த மழை பெய்தது. நேற்று முன்தினம் இரவு கன மழை கொட்டி தீர்த்ததால், தாழ்வானப் பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்தது.

    ஜவ்வாதுமலை பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால் குப்பநத்தம், செண்பகத் தோப்பு மற்றும் மிருகண்டா அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    குப்பநத்தம் அணைக்கு நேற்று முன் தினம் நள்ளிரவு நீர்வரத்து திடீரென அதிகரித்ததால், அணை யில் இருந்து உபரி நீர் வெளி யேற்றப்பட்டது.

    அதிகாலை 2 மணிஅளவில் விநாடிக்கு வந்த 1,500 கனஅடி தண்ணீரும், செய்யாற்றில் வெளியேற்றப்பட்டன. இதனால், செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    சாத்தனூர் அணைக்கும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 119 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் 116.25 அடியாக உள்ளது. அணைக்கு 5,150 கனஅடி தண்ணீர் வருகிறது.

    வரும் தண்ணீர் அப்படியே தென் பெண்ணையாற்றில் வெளியேற்றப்படுகிறது. இதனால் தென்பெண்ணையாற்றில் வெள்ளப் பெருக்கு அதிகரித்துள்ளது.

    தென்பெண்ணையாறு மற்றும் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம் என நீர்வளத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    22.97 அடி உயரம் உள்ள மிருகண்டா நதி அணையின் நீர் மட்டம் 16.40 அடியாக உள்ளது. அணையில் 52.726 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.

    அணையில் இருந்து விநாடிக்கு 66 கனஅடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது.

    62.32 அடி உயரம் உள்ள செண்பகத்தோப்பு அணையின் நீர்மட்டம் 47.23 அடியாக உள்ளன.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 697 ஏரிகளில் 157 ஏரிகள் நேற்று முன்தினம் முழுமையாக நிரம்பின.

    நேற்று ஒரே நாளில் மேலும் 17 ஏரிகள் நிரம்பியுள்ளன. மொத்தம் 174 ஏரிகள், 100 சதவீதம் கொள்ளளவை எட்டியுள்ளது.

    • சாத்தனூர் அணைக்கும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    • தென்பெண்ணையாறு மற்றும் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பலத்த மழை பெய்தது. நேற்று முன்தினம் இரவு கன மழை கொட்டி தீர்த்ததால், தாழ்வானப் பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்தது.

    ஜவ்வாது மலை பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால் குப்பநத்தம், செண்பகத்தோப்பு மற்றும் மிருகண்டா அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    குப்பநத்தம் அணைக்கு நேற்று முன் தினம் நள்ளிரவு நீர்வரத்து திடீரென அதிகரித்ததால், அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

    அதிகாலை 2 மணியளவில் விநாடிக்கு வந்த 1,500 கனஅடி தண்ணீரும், செய்யாற்றில் வெளியேற்றப்பட்டன. இதனால், செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    சாத்தனூர் அணைக்கும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 119 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் 116.25 அடியாக உள்ளது. அணைக்கு 5,930 கனஅடி தண்ணீர் வருகிறது.

    அணையில் இருந்து தென் பெண்ணையாற்றில் விநாடிக்கு 5,150 கனஅடியும், கால்வாயில் விநாடிக்கு 200 கனஅடியும் என மொத்தம் விநாடிக்கு 5,350 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது.

    தென்பெண்ணையாறு மற்றும் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம் என நீர்வளத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    22.97 அடி உயரம் உள்ள மிருகண்டா நதி அணையின் நீர்மட்டம் 16.40 அடியாக உள்ளது. அணையில் 52.726 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.

    அணையில் இருந்து விநாடிக்கு 66 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    62.32 அடி உயரம் உள்ள செண்பகத்தோப்பு அணையின் நீர்மட்டம் 47.23 அடியாக உள்ளன.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 697 ஏரிகளில் 157 ஏரிகள் நேற்று முன்தினம் முழுமையாக நிரம்பின.

    நேற்று ஒரே நாளில் மேலும் 17 ஏரிகள் நிரம்பியுள்ளன. மொத்தம் 174 ஏரிகள், 100 சதவீதம் கொள்ளளவை எட்டியுள்ளது.

    • துணி காய வைத்த கம்பியில் இருந்து கலையரசி மீது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட கலையரசி அலறி துடித்து பரிதாபமாக இறந்தார்.
    • அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டிலிருந்த அவரது கணவர் மற்றும் மகன் கிரீஸ்வரன் அங்கு ஓடிவந்தனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த சடையனோடை பகுதியை சேர்ந்தவர் உத்தராசு. இவர் திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் சிறப்பு பேராசிரியராக வேலை செய்து வருகிறார்.

    இவரது மனைவி கலையரசி (வயது 45). இவரும் திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் கணினி பேராசிரியையாக வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று கல்லூரி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்த கலையரசி துணிகளை துவைத்து வீட்டிலிருந்த கம்பியில் காய வைத்தார். நேற்று மாலை காய வைத்த துணிகளை எடுக்க முயன்றார்.

    அப்போது துணி காய வைத்த கம்பியில் இருந்து கலையரசி மீது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட கலையரசி அலறி துடித்து பரிதாபமாக இறந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டிலிருந்த அவரது கணவர் மற்றும் மகன் கிரீஸ்வரன் அங்கு ஓடிவந்தனர்.

    அப்போது அவர்களையும் மின்சாரம் தாக்கியது. அவர்களது அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து உடனடியாக மின்சாரத்தை துண்டித்து படுகாயம் அடைந்த உத்தராசு அவரது மகனை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மங்களம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கலையரசி பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    • தூர்வாரபடாததால் தெ௫க்கள் மற்றும் பள்ளியில் தேங்கியது
    • குறுகிய காலத்தில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    கலசபாக்கம்:

    கலசபாக்கம் தொகுதி நயம்பாடி அண்ணாமலைநகரில் நேற்று பெய்த மழையில் வடிகால் சரியாக தூர்வாரபடாததால் தெ௫க்கள் மற்றும் பள்ளியில் வெள்ளம் தேங்கியது.

    இதுகுறித்து ஊராட்சி அலுவலரிடம் முறையிட்டபோது:-

    2 நாட்களில் வற்றி விடும் அதை பொறுட்படுத்தார்கள் என்று கூறியுள்ளனர். குழைந்தைகள் மற்றும் வயது முதியோர்கள் நடமாடும் இடத்தில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க தக்க நடவடிக்கை குறுகிய காலத்தில் எடுக்குமாறு பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • கோவிலை சுற்றி வர பக்தர்கள் மிகவும் சிரமம்
    • சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் பகுதியில் ஊரிண் நடுவே லட்சுமி நாராயணன் பெருமாள் கோயில் உள்ளது. இதன் கும்பாபிஷேகம் முடிந்து பல வருடங்களாகிறது.மீண்டும் கும்பாபிஷேகம் செய்ய இந்து சமய அறநிலையத்துறை கோயில் என்பதால் யாரும் முயற்சி செய்யவில்லை. இங்கு கோபுரங்கள் மீது செடி கொடிகள் வளர்ந்து வருகிறது.

    இதனுள்ளே ஆஞ்சநேயர், ஐயப்பன், விநாயகர், ஆண்டாள், நவக்கிரகங்கள், துர்க்கை அம்மன் சன்னதி தனித்தனியே உள்ளது. வெள்ளி, செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகளில் பெண்கள் ராகுகால பூஜை வழிபாடு செய்வர். ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் குருசாமிகளை அழைத்து வந்து மாலை அணிந்து செல்வர்.

    ஐயப்ப பக்தர்களின் பொது பூஜை செய்து இருமுடி கட்டி செல்வது வழக்கம். இவ்வளவு வசதிகள் இருந்தும் இக்கோயிலில் போதிய பராமரிப்பு இல்லாத நிலையில் தெருவை விட கோயில் உயரம் சற்று குறைவாக உள்ளது.

    இந்த நிலையில் கண்ணமங்கலம் பகுதியில் பெய்த மழையால் வெள்ளம் கோவிலுக்குள் புகுந்தது.

    இதனால் மழைநீர் வெளியேற வழியில்லை என்பதால் அங்கு குட்டை போல தேங்கி நிற்கிறது. இங்கு வழிபாடு செய்ய வரும் பக்தர்கள் கோவிலை சுற்றி வர மிகவும் சிரமப்படும் நிலை உள்ளது.

    இதனை சீரமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • போளூர் பஸ் நிலையத்தில் பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    போளூர்:

    போளூர் பஸ் நிலையத்தில் நேற்று மதியம் 2 மணி அளவில் குன்னத்தூர் காலனியை சேர்ந்தவர் ராஜி (வயது 55) ஊருக்கு செல்வதற்கு நுழைவாயில் அருகே காத்திருந்தார்.

    அப்போது திருவண்ணாமலையில் இருந்து வேலூர் செல்லும் அரசு பஸ் நிலையத்தில் இருந்து வெளியே திரும்பும் போது முதியவர் மீது மோதியது.

    இதில் ராஜி சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இவருக்கு மணியம்மாள் என்ற மனைவியும் 5 மகன்களும் உள்ளனர். அவரது மகன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×