என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • உபரி நீரை பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர்
    • ஏரிக்கரையில் உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது

    ஆரணி:

    ஆரணி சுற்று வட்டார பகுதிகளிலேயே மிகப்பெரிய ஏரியாக மேல் சீசமங்கலம் ஏரி விளங்குகின்றன.

    இந்த ஏரியின் பரப்பளவு சுமார் 665 ஏக்கர் கொண்டது. இந்த ஏரி கடந்த 10ஆண்டுகளாக ஏரி நீர் நிரம்பாமல் கடந்த ஆண்டு ஏரி முழு கொள்ள ளவை எட்டியது.

    மேலும் அதே போல் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காரணமாக ஆரணி சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்து வருகின்றன.

    இதனால் தற்போது மீண்டும் மேல்சீசமங்கலம் பெரிய ஏரி முழு கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து மேல்சீசமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் மோகன்ராஜ் தலைமையில் கிராம பொதுமக்கள் ஏரிக்கரையில் உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

    பின்னர் மேல்சீசமங்கலம் ஏரி உபரி நீரை வெளியேற்றி மலர் தூவி வரவேற்றனர்.

    இதனால் மேல் சீசமங்கலம் திருமணி முனுகபட்டு நாவல்பாக்கம் உள்ளிட்ட கிராமங்கிளல் உள்ள ஏரிகளுக்கு சென்றால் அந்த பகுதியில் உள்ள விவசாயம் செழிக்க வழிவகை செய்யும் எனவும் கிராம பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது
    • ஏராளமானோர் தரிசனம்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள அத்திமலைப்பட்டு கிராமத்தில் கிராம தேவதை செல்லியம்மன் கோவில் பாலாலய பூஜை ஹோமத்துடன் நடைபெற்றது.

    வேலூர் பாலாஜி சிவாச்சாரியார் மற்றும் குழுவினர் நடத்திய பாலாலய பூஜைகளில் கோவில் செயல் அலுவலர் சிவாஜி, ஆரணி நகர தலைவர் ஏ.சி. மணி, ஒன்றிய கவுன்சிலர் கீதாமோகன், கண்ண மங்கலம் நகர செயலாளர் கோவர்த்தனன், முன்னாள் எம்.எல்.ஏ. தயாநிதி, அத்திமலைப்பட்டு ஊராட்சி தலைவர் சங்கர், அத்திமலைப்பட்டு கைத்தறி கூட்டுறவு சங்க மேலாளர் கணேசன், இலக்கிய அணி செயலாளர் விண்ண மங்கலம் ரவி, ஆரணி ஒன்றிய செயலாளர் அக்ரா பாளையம் அன்பழகன் உள்பட கிராமமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    மேலும் கோவில் சார்பில் சிவாச்சாரியார்கள் பிரசாதங்கள் வழங்கினார்.

    • பக்தர்களுக்கு அண்ணதானம் வழங்க ஏற்பாடு
    • குற்றவாளிகளை முகத்தை வைத்து கண்டறியும் செயலி பயன்படுத்தப்பட உள்ளது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    இதில் தீபத் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தெரிவிக்கப்பட்டதாவது:-

    திருவண்ணாமலை சுற்றிலும் 13 தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது. தற்போது 9 ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    கூடுதலாக 19 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. 2,692 சிறப்பு பஸ்கள் 6,431 நடை இயக்கப்படும். கிரிவலப் பாதையில் 15 மருத்துவ குழுக்கள், கோவில் வளாகத்தில் 3 குழுக்கள் அமைக்கப்படுகிறது.

    மேலும் ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட உள்ளன.

    தீபத் திருவிழாவிற்கு ஒரு ஐ.ஜி தலைமையில் 5 டி.ஐ.ஜி.கள், 20-க்கும் மேற்பட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோர் தலைமையில் 12 ஆயிரத்து 97 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட உள்ளனர்.

    மேலும் ஆங்காங்கே 26 தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. 600-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபட உள்ளனர்.

    கோவில், மாடவீதிகள் மற்றும் கிரிவலப் பாதையில் 500 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது மேலும் 7 ட்ரோன்கள் , 57 கோபுரங்கள் மூலமும் கண்காணிக்கப்படுகிறது.

    மலையின் மீது ஏறுவதற்கு 2,500 பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டுவார்கள்.

    திருவிழா கூட்டத்தில் சந்தேக நபர்களின் புகைப்படங்கள் எடுத்து அவர்கள் குற்றவாளிகளா? என்பதை முகத்தை வைத்து கண்டறியும் செயலி பயன்படுத்தப்பட உள்ளது.

    கூட்டத்தில் காணாமல் போகும் குழந்தைகளை கண்டு பிடிக்க நகருக்குள் நுழையும் போதே குழந்தைகள் கையில் முகவரியின் கூடிய தகவல் பட்டை கட்டப்படும். 101 இடங்களில் பக்தர்களுக்கு அண்ணதானம் வழங்கப்படவுள்ளது.

    12 பெரிய திரைகளில் கோவில் நிகழ்வுகள் திரையிடப்பட உள்ளது. சமூக விரோதிகளின் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட உள்ளனர்.

    குடிநீர் வசதி, கழிவறை எங்கெல்லாம் உள்ளது என்பது குறித்து அனைத்து இடங்களிலும் தகவல் பலகை வைக்கப்பட உள்ளது.

    மலையின் மீது ஏறக்கூடிய 23 வழிகளில் வனத்துறையினர் பாதுக்காப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    கலெக்டர் அலுவலகம் உட்பட 4 இடங்களில் முக்கிய கட்டுபாட்டு அறைகள் அமைக்கப்பட உள்ளது‌. 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தும் வகையில் இட வசதி மேற்கொள்ளப்பட உள்ளது. யாராவது வாகனங்களுக்கு கட்டணம் வசூலித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    3 ஆயிரம் தூய்மை பணியாளர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். 158 இடங்களில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.

    துணிப்பை கொண்டு வரும் பக்தர்களுக்கு குலுக்கள் முறையில் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் வழங்கப்படும். சுமார் 1,000 கல்லூரி மாணவர்கள் தன்னார்வலராக பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு சுமார் 130 தங்குமிடம் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    • 200-க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கலந்து கொண்டனர்
    • ஒன்றிய குழு தலைவர் சான்றிதழ்கள் வழங்கினார்

    செங்கம்:

    செய்யாறு அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மாவட்ட அலகு சார்பில் தீன் தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டத்தின் மூலம் 18 வயது முதல் 35 வயது வரை உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய தொழில் திறன் பயிற்சி அளிக்கும் முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மாவட்ட திட்ட இயக்குநர் சையது சுலைமான் தலைமை தாங்கினார். அனக்காவூர் ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அனக்காவூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, ஹரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    மாநில ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் மற்றும் 25க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் ஒருங்கிணைப்பாளர்கள் களப்பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் சுமார் 200க்கும் மேற்பட்ட பட்டதாரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சிக்கு தேர்வு பெற்ற மாணவர்களுக்கு ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் தலைமையில் சான்றிதழ்களை வழங்கினர்.

    • பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர்
    • விவசாயிகள் மகிழ்ச்சி

    வந்தவாசி:

    வந்தவாசி பகுதியில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வந்தவாசி அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது.

    ஏரி முழு கொள்ளளவு எட்டி கலங்கள் வழியாக உபரி நீர் வெளியேறி வருகிறது. இதைத் தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த கிராம பொதுமக்கள் பூஜை செய்து புடவை செலுத்தி கற்பூரம் ஏற்றி தண்ணீரை மலர் தூவி வரவேற்றனர்.

    மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. ஏரி முழு கொள்ளளவை எட்டி தண்ணீர் வெளியேறி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர் பாபு தகவல்
    • தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது

    திருவண்ணாமலை:

    3 ஆண்டுகளில் திருவண்ணாமலையை திருமலை போன்று மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு ஆகியோர் தெரிவித்தனர்.

    கார்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார்.

    கலெக்டர் முருகேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகியோர் தீபத்திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தெரிவித்தனர்.

    இதில் மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி. சரவணன் ஜோதி உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு பேசியதாவது:-

    தீபத் திருவிழாவிற்கு திருவண்ணாமலை நகர வியாபாரிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். திருவிழா அன்று வியாபாரிகள் தேவையில்லாமல் கடைகள் முன்பு வாகனங்களை நிறுத்த வேண்டாம். குப்பைகள் உடனுக்குடன் அகற்றப்பட வேண்டும் இதற்கு வியாபாரிகள் தரப்பிலும் முழு ஒத்துழைப்பு இருக்க வேண்டும். கோவில் உள்ளே வி.ஐ.பி. மற்றும் வி.வி.ஐ.பி.க்கள் எந்தவித இடையூறுகள் இன்றியும் உள்ளே செல்லவும், அமர வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கோவில் உபயதாரர்கள் உள்ளே வரும்போது நெரிசல் ஏற்படுகிறது. எனவே இதை போலீசார் முறைப்படுத்த வேண்டும். திருவண்ணாமலைக்கு சுமார் 45 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருகை தர உள்ளதால் மருத்துவக் குழுக்கள் போதுமானதாக இருக்காது. எனவே 100 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.

    கோவில் ஊழியர்கள், அர்ச்சகர்கள், போலீசார் தங்களுக்கு வேண்டிய நபர்களை கோவிலுக்குள் அழைத்து வருவதை தவிர்க்க வேண்டும். அனுமதி அட்டை வைத்துள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.

    தேவை இல்லாமல் கோவிலுக்குள் அதிகப்படியான போலீசார் பணியில் அமர்த்த வேண்டாம். ஒவ்வொரு தேருக்கும் ஒரு சிறப்பு அதிகாரி பணியில் அமர்த்தப்பட வேண்டும். கழிவறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

    திருவண்ணாமலையை திருப்பதியை போன்று ஆக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 3 ஆண்டுகளில் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும். இதன் மூலம் மக்கள் பயனடைவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-

    திருவண்ணாமலையை திருமலை போன்று மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    மாட வீதியில் காங்கிரீட் சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளது. தீபத்திருவிழா முடிந்ததும் அதற்கான பணிகள் நடைபெறும்.

    திருவண்ணாமலைக்கு பல்வேறு வசதிகள் கொண்டுவர எனது துறை சார்பில் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும். தேர்கள் சரியான முறையில் உள்ளதா என்பதை அதிகாரிகள் முன்கூட்டியே பரிசோதனை செய்திருக்க வேண்டும். பராசக்தி அம்மன் தேர் மேற்பகுதியில் பழுது உள்ளதாக புகார் வந்துள்ளது.

    அதை மீண்டும் சரி செய்ய வேண்டும். தீபத் திருவிழாவின் போது வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்பவர்கள் மீது பாரபட்சம் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் தரணிவேந்தன், முன்னாள் நகர மன்ற தலைவர் இரா.ஸ்ரீதரன், தி.மு.க.நகர செயலாளர் கார்த்திவேல்மாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 2,692 சிறப்பு பஸ்கள் 6,431 நடை இயக்கப்படும்.
    • தீபத் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தீபத் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தெரிவிக்கப்பட்டதாவது:-

    திருவண்ணாமலை சுற்றிலும் 13 தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது. தற்போது 9 ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. கூடுதலாக 19 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

    2,692 சிறப்பு பஸ்கள் 6,431 நடை இயக்கப்படும். கோவில், மாடவீதிகள் மற்றும் கிரிவலப்பாதையில் 500 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.

    மேலும் 7 டிரோன்கள் மூலமும், 57 கண்காணிப்பு கோபுரங்கள் மூலமும் கண்காணிக்கப்பட உள்ளது. மலை மீது ஏறுவதற்கு 2,500 பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். மலை மீது ஏறக்கூடிய 23 வழிகளில் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    • சரவணன் எம்.எல்.ஏ. தகவல்
    • ரூ.5.40 கோடியில் பணிகள் நடக்கிறது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள தரைப்பாலம் மேல் போக்குவரத்து செல்ல முடியாத அளவிற்கு வெள்ளம் ஓடியதால் வாகனங்கள் பஸ்கள் எதுவும் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

    இதேபோன்று கலசப்பாக்கம் தொகுதியில் உள்ள தரைப்பாலங்கள் வெள்ளத்தால் மூழ்கடித்து பொதுமக்களுக்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளன. இதனை அறிந்த கலசப்பாக்கம் எம்.எல்.ஏ. சரவணன் தென் பள்ளிப்பட்டு கிராமத்திற்கு செல்லும் தரைப் பாலத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    சென்ற ஆண்டு பெய்த கனமழையால் கலசப்பாக்கம் தொகுதியில் தரைப்பாலங்கள் அனைத்தும் பழுதடைந்து வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு சேதம் ஏற்பட்டன.

    இதனால் அனைத்து தரைப்பாலங்களையும் உயர் மட்ட பலமாக மாற்றுவதற்கு சட்டமன்ற கூட்டத்தில் பேசி பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம் மனு கொடுத்து இருந்தேன்.

    அதன் அடிப்படையில் கலசப்பாக்கம் தொகுதியில் உள்ள தரைப்பாலங்கள் அனைத்தையும் தரம் உயர்த்தி மேம்பாலமாக மாற்றுவதற்கு உண்டான அனைத்து மண் பரிசோ தனைகளும் செய்யப்பட்டுள்ளது.

    விரைவில் அரசானை வெளியிட்டவுடன் டெண்டர் வைத்து தரை பாலங்கள் அனைத்தும் தரம் உயர்த்தி மேம்பாலமாக மாற்றப்படும்.

    அதேபோல் இந்த தென்பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள தரைப்ப லத்தை தரம் உயர்த்தி உயர் மட்ட மேம்பாலமாக கட்ட ரூ.5 கோடி 40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டன. விரைவில் மேம்பாலம் கட்டி தரப்படும் என்று இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வழக்க றிஞர் க.சுப்பிரமணியம், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

    • 140 கிலோ சிக்கியது
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியில் அரசால் தடை செய்யபட்ட குட்கா பான்மசாலா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்யபட்டு வருவதாக மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பல்வேறு புகார்கள் வந்தன.

    மேலும் இது சம்மந்தமாக ஆரணி டி.எஸ்.பி ரவிசந்திரன் தலைமையில் தனிப்படை அமைத்து அரசால் தடைசெய்யபட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யபடுகிறதா என போலீசார் கடைகளில் சோதனை நடத்தினர்.

    மேலும் ஆரணி அருகே முள்ளண்டிரம் கிராமத்தை சேர்ந்த மரகதம்மாள் என்பவரின் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 7லட்சம் மதிப்பிலான 16 மூட்டையில் 140 கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மரக தம்மாளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிர்ஷ்டவசமாக குழந்தை உட்பட 4 பேர் உயிர் தப்பினர்
    • அதிகாரிகள் விசாரணை

    ஆரணி:

    ஆரணி டவுன், ஆரணி பாளையம், புதிய சந்தா தெருவை சேர்ந்தவர் துரை, இவரது மனைவி காஞ்சனா. துரை ஏற்கனவே இறந்து விட்டதால் காஞ்சனா தனது மகன் செல்வகுமார், மருமகள் ரஞ்சிதா, பேத்தி தனன்யா 7 மாத குழந்தை ஆகியோருடன் ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார்.

    ஆரணியில் கடந்த 3 நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக காஞ்சனாவின் வீட்டு மண் சுவர் மழையில் நனைந்து இருந்தது.

    இந்த நிலையில் சேதம் அடைந்து இருந்த வீட்டின் சுவர் என்று அதிகாலை திடீரென வெளிப்புறமாக இடிந்து விழுந்தது.

    இடிந்து விழும் சத்தம் கேட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த காஞ்சனாவின் வீட்டினர் வெளியே வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து வீட்டில் இருந்த அனைவரும் வீட்டை விட்டு வெளியேறினர்.

    அதிகாலை நேரம் வீட்டு சுவர் இடிந்து விழுந்ததால் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழவில்லை. வீட்டிலிருந்த காஞ்சனா குடும்பத்தினர் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் உயிர் தப்பினர்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பேச்சு
    • சிறந்த கூட்டுறவு சங்கத்துக்கு கேடயம் வழங்கப்பட்டது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் 69 -வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நேற்று நடைபெற்றது.

    "கூட்டுறவுகளுக்கான எளிதான வணிகம் அரசு மின் சந்தை மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு" என்ற பிரதான பொருளின் அடிப்படையில் நடந்த விழாவுக்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார்.

    மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே. கம்பன், அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி. சரவணன், ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு மாவட்ட அளவிலான சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு கேடயங்கள் மற்றும் 5,889 பயனாளிகளுக்கு ரூ.27 கோடியே 70 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் நடராஜன் வரவேற்றார். திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளரும் மேலாண்மை இயக்குனருமான ஜெயம் திட்ட விளக்க உரையாற்றினார். கூட்டுறவு சார்பதிவாளர் சுரேஷ்குமார் உறுதிமொழி வாசித்தார்.

    துணை பதிவாளர்கள் ஆரோக்கியராஜ், ராஜசேகரன், கமலக்கண்ணன், பிரேம் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    விழாவில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பேசியதாவது:-

    ஜவர்கர்லால் நேரு கூட்டுறவு சங்கங்களுக்கு உயிர் கொடுத்தார். அவரது பிறந்த நாளை இன்று கூட்டுறவு வார விழாவாக கொண்டாடுகிறோம்.

    கூட்டுறவுத் துறை தமிழகத்திலே சிறப்பான இடத்தை பெற்றுள்ளது. அதிகளவு கடன்கள் கொடுத்த மாவட்டமாக திருவண்ணாமலை திகழ்கிறது. தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற உடன் கூட்டுறவு துறையில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

    கூட்டுறவு வங்கிகள் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளது.

    இந்தியாவிலேயே முதன்முதலாக விவசாய கடன் தள்ளுபடி செய்தவர் தமிழக முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி.

    தேர்தல் நேரத்திற்கு முன்பாக ஆட்சிக்கு வந்தால் நகை கடன் தள்ளுபடி செய்வோம் என்று கூறினோம். இதை பலர் ஏளனம் பேசினார்கள். ஆனால் இந்தியாவிலேயே நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்ட ஒரே மாநிலம் தமிழ்நாடு. குறுகிய காலக்கட்டத்தில் ஏராளமான விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. உணவு உற்பத்தியில் தமிழகம் முன்னேறிய மாநிலமாக உள்ளது.

    பிற மாநிலங்களில் தேர்தல் நேரத்தில் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்து வருகின்றனர். அதற்கு காரணம் மறைந்த முதல் அமைச்சர் கருணாநிதி என்பதை ஒவ்வொரு விவசாயியும் எண்ணிப் பார்க்க வேண்டும். மகளிர் சுய உதவி குழுக்களுக்கும் தமிழகத்தில் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    கூட்டுறவு வங்கியில் மட்டுமே ஏழைய மக்கள் எளிதில் கடன் பெற முடியும். ஊழியர்களாகிய நீங்கள் அனைவரும் கூட்டுறவு வங்கியின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் உங்களது வங்கிகளை சிறப்பான வங்கியாக எதிர்காலத்தில் உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், ஒன்றிய குழு தலைவர்கள் கலைவாணி கலைமணி, பரிமளா கலையரசன், மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சி ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மைய வங்கி பொது மேலாளர் ஆனந்தி, உதவி பொது மேலாளர்கள் விஜயகுமார், கணபதி, இளங்கோவன், கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 3 பேர் கைது
    • கஞ்சா விற்பதை தட்டி கேட்டதால் ஆத்திரம்

    செய்யாறு:

    செய்யாறு டவுன் புது தெருவில் வசித்து வருபவர் உதயகுமார் மகன் சுனில் குமார் வயது 22, இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.

    காஞ்சிபுரத்தை சேர்ந்த கத்தி செல்வம் என்பவர் புது தெருவில் கஞ்சா விற்பனை செய்ததாகவும், அதனை கண்ட சுனில் குமார் செல்வத்திடம் எங்கள் பகுதிக்குள் கஞ்சா விற்பனை செய்ய வரக்கூடாது என்றும், மீறினால் போலீசுக்கு தகவல் தெரிவித்து விடுவதாக கூறினார்.

    இதனால் முன் விரோதம் கொண்ட கத்தி செல்வம் அவரது நண்பர்காளன வெம்பாக்கம் அடுத்த பெருங்கட்டூர் கிராமத்தை சேர்ந்த பசுபதி (25), ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த யோகேஸ்வரன் (25), அழிவிடை தாங்கி கிராமத்தைச் சார்ந்த சௌந்தரராஜன் (24), ஆகிய 4 பேரும் செய்யாறு ஆற்காடு சாலையில் கல்லூரி எதிரே இருசக்கர வாகனத்தில் சுனில் குமார் சென்று கொண்டிருந்த போது 4 பேரும் வழிமடக்கி கஞ்சா விற்பதை தடுக்கும் உன்னை ஒழித்துவி டுகிறோம் என வீச்சருவா ளால் வெட்ட முயன்றனர்.

    சுனில் குமார் அங்கிருந்து தப்பி ஓடி வந்து செய்யாறு போலீசில் புகார் செய்தார்.

    சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்கு பதிவு செய்து பசுபதி, யோகேஸ்வரன், சவுந்தரராஜன் ஆகிய 3 பேரை கைது செய்தார். தலைமறைவாக உள்ள செல்வத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×