என் மலர்
திருவண்ணாமலை
- வருகிற 3-ந்தேதி மகா தேரோட்டம் நடக்கிறது.
- 6-ந்தேதி 2668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வரும் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
10 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது. காலை, இரவு என இருவேளையில் சாமி வீதி உலா நடைபெறும்.
7-ம் நாளான வருகிற 3-ந்தேதி மகா தேரோட்டமும் 6-ந்தேதி அன்று அதிகாலை 4 மணி அளவில் கோவில் வளாகத்தில் உள்ள சாமி சன்னதி அருகில் பரணி தீபமும் மாலை 6 மணிக்கு 2668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
விழாவினை முன்னிட்டு பல்வேறு முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு வருகிறது.
இதில் ஒரு பகுதியாக அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நான்கு வாயில்களில் உள்ள ராஜகோபுரம், அம்மனிஅம்மன் கோபுரம், திருமஞ்சன கோபுரம், பே கோபுரம் ஆகிய கோபுரங்களை சுத்தம் செய்தனர்.
தீயணைப்பு வீரர்கள் பிராண்டோ ஸ்கை லிப்ட் 54 மீட்டர் உயரம் வரை செல்லும் அதாவது 162 அடி உயரத்திற்கு மேல் செல்ல கூடிய ராட்சத தீயணைப்பு மீட்பு எந்திரத்தின் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து கோபுரங்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
கார்த்திகை தீப திருவிழாவில் 2 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடக்கிறது. இதற்காக தேர்கள் சீரமைக்கப்படுகின்றன. இன்று காலையில் அருணாசலேஸ்வரர் பவனி வரும் பெரிய தேர் சீரமைப்பு பணி தொடங்கியது.
தேர் சக்கரம், அச்சு, உச்சி பகுதிகளில் சீரமைப்பு பணிகள் செய்யப்படுகிறது.
- ஆரணியில் நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஆரணி:
ஆரணி அருகே இ.பி.நகர் தனியார் மண்டபத்தில் தி.மு.க இளைஞர் அணி பயிற்சி பாசறை கூட்டம் இளைஞர் அணி அமைப்பாளர் எவரெஸ்ட் நரேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட செயலாளர் தரணிவேந்தன், எம்.எல்.ஏ. எழிலன், எழுத்தாளர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர். இதில் 500க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு தொடுதிரை மூலம் பயிற்சி வழங்கப்பட்டது.
இதில் நகர மன்ற தலைவர் ஏசி மணி ஒன்றிய செயலாளர்கள் மோகன், துரை மாமது, அன்பழகன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரஞ்சித், முன்னாள் எம்.எல்.ஏ. சிவானந்தம், நகர அவைத் தலைவர் அக்பர், மாவட்ட பிரதிநிதி பாலமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- வேகத்தடையில் ஏறி இறங்கியபோது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஆரணி:
ஆரணியை அடுத்த ஆதனூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் மணி (வயது 60), விவசாயி. இவருக்கு குமாரி என்ற மனைவியும், 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
இந்த நிலையில் மணி கார்த்திகை மாதத்தை யொட்டி நேற்று மோட்டார் சைக்கிளில் வேலூரை அடுத்த மாத னூர் கிராமத்தில் உள்ள அய் யப்பன் கோவிலுக்கு சென் றார். பின்னர் அவர் மோட் டார் சைக்கிளில் ஆரணி நோக்கி வந்து கொண்டிருந் தார்.
ஆரணி-சேவூர் பைபாஸ் சாலையில் இருந்து ஆதனூர் செல்வதற்காக திரும்பும் போது அங்குள்ள வேகத்த டையில் ஏறி இறங்கியபோது நிலை தடுமாறி கீழே விழுந் தார்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த மணியை சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட் டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆரணி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.
- மடியில் அமரக்கூறி அத்துமீறல்
- போலீசார் விசாரணை
ஆரணி,நவ.18-
ஆரணி அருகே அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்து வருபவர் கோவிந்தசாமி (வயது 60). நேற்று முன்தினம் ஆய்வக அறையிலும், நூலகத்திற்கும் வந்திருந்த மாணவிகளிடம் அவர் மடியில் அமரும் படி கூறியதாக தெரிகிறது.
இதுகுறித்து மாணவிகள் பெற்றோரிடம் தெரிவித்தனர். நேற்று காலை பெற்றோர்கள், உறவினர்கள் பள்ளியை முற்றுகை யிட்டு, தலைமை ஆசிரியையிடம் தெரிவித்தனர்.
தலைமை ஆசிரியை அவருக்கு விடுமுறை அளித்து வீட்டுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து மாணவிகளின் பெற்றோர் ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் சோமந்தாங்கல் கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று கோவிந்தசாமியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் பள்ளி மாணவிகளிடம் தவறாக நடந்தது உறுதி செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாராணி மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கோவிந்த சாமியை கைது செய்தனர்.
பின்னர் அவரை ஆரணி கோர்ட் டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். மேலும் கோவிந்தசாமியை சஸ்பெண்டு செய்து கல்வி அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.
- கொலை மிரட்டல்
- போலீசார் விசாரணை
செய்யாறு:
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை சேர்ந்தவர் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். செய்யாறு டவுன் பகுதியை சேர்ந்தவர் அரசு கல்லூரி பேராசிரியர்.
இவரிடம் ஜவுளி வியாபாரி சீட்டு பணம் கட்டி வந்துள்ளார். சீட்டு தவணை முடிந்து பணத்தை பேராசிரியரிடம் ஜவுளி வியாபாரி கேட்டுள்ளார்.
சீட்டு பணத்தை கொடுக்காமல் பேராசிரியர் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இந்த நிலையில் பேராசிரியர் வீட்டிற்கு நேரில் சென்ற ஜவுளி வியாபாரி சீட்டு பணத்தை கேட்டுள்ளார். அதற்கு பேராசிரியர் பணம் கேட்டு வீட்டிற்கு வந்தால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஜவுளி வியாபாரி செய்யாறு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்த பேராசிரியரை தேடி வருகின்றனர்.
- கார்த்திகை தீப திருவிழாவில் பல்வேறு மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 25 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நான்கு வாயில்களில் உள்ள ராஜகோபுரம், அம்மனிஅம்மன் கோபுரம், திருமஞ்சன கோபுரம், பே கோபுரம் ஆகிய கோபுரங்களை சுத்தம் செய்தனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வரும் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது. காலை, இரவு என இருவேளையில் சாமி வீதி உலா நடைபெறும்.
7-ம் நாள் அன்று மகா தேரோட்டமும் 10-ம் நாள் டிசம்பர் 6-ந் தேதி அன்று அதிகாலை 4 மணி அளவில் கோவில் வளாகத்தில் உள்ள சாமி சன்னதி அருகில் பரணி தீபமும் மாலை 6 மணிக்கு 2668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
கார்த்திகை தீப திருவிழாவில் பல்வேறு மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 25 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விழாவினை முன்னிட்டு பல்வேறு முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு வருகிறது.
இதில் ஒரு பகுதியாக அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நான்கு வாயில்களில் உள்ள ராஜகோபுரம், அம்மனிஅம்மன் கோபுரம், திருமஞ்சன கோபுரம், பே கோபுரம் ஆகிய கோபுரங்களை சுத்தம் செய்தனர்.
இதுவரைக்கும் இப்பணியை செய்ததில்லை இப்போதுதான் முதல்முறையாக செய்கின்றனர்.
மத்திய சென்னை மண்டலத்தில் இருந்து மாவட்ட அலுவலர் சரவணன் தலைமையிலான 15 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் பிராண்டோ ஸ்கை லிப்ட் 54 மீட்டர் உயரம் வரை செல்லும் அதாவது 162 அடி உயரத்திற்கு மேல் செல்லக்கூடிய ராட்சத தீயணைப்பு மீட்பு எந்திரத்தின் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து கோபுரங்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- மாற்றுத்திறனாளிகளை பள்ளியில் சேர்ப்பது குறித்து பிரசாரம் நடந்தது
- மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகொண்டாபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளி தொகுப்பு கருத்தாய்வு மையத்தில் நேற்று காலை மாற்றுத்திறன் மாணவர்களுக்கான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
இந்த ஊர்வலத்தை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பழனி, தலைமையாசிரியர் எம் ஆனந்தன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
போளூர் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் சுரேஷ், செல்வதுரை, ஆசைத்தம்பி, சங்கீதா சிறப்பு கல்வியாளர்கள் விஜயலட்சுமி ஸ்டெல்லா பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் வெங்கடேசன், ஜேஆர்சி ஆலோசக ஆசிரியர் சந்திரநாதன் உள்பட மாணவ மாணவிகள் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
இதில் மாற்றுத்திறன் மாணவர்களையும் பள்ளியில் சேர விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.
கண்ணமங்கலத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் கண்ணமங்கலம் பேரூராட்சி சார்பில் திட கழிவு மேலாண்மை விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது.
உதவி தலைமை ஆசிரியர் சாந்தி தலைமையில் நடந்த இப்பேரணியில், முதுகலை ஆசிரியர்கள் சுப்பிரமணியன், ரவி, தனபால், பட்டதாரி ஆசிரியர்கள் ராஜா, சதீஷ், திருஞானசம்பந்தம், உள்பட பேரூராட்சி (துப்புரவு) பணியாளர்கள் மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- பைரவருக்கு, தேங்காய் உருட்டி, மிளகு தீபம் ஏற்றி வழிபாடு
- பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம்
வந்தவாசி:
வந்தவாசி ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் கால பைராஷ்டமி பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. பைரவர் அவதரித்த திருநாளான நேற்று பைராஷ்டமி பூஜையில் கலச ஹோமம் நடைபெற்று.
புனித நீரால் ஸ்ரீ கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வட மாலை சாற்றி பஞ்சலோக ஸ்ரீ மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஸ்ரீ கால பைரவருக்கு, தேங்காய் உருட்டி, மிளகு தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர். இந்த சிறப்பு பூஜையில் வந்தவாசி சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஸ்ரீ கால பைரவரை தரிசனம் செய்து சென்றனர்.
- கார்த்திகை தீப திருவிழாவையொட்டி நடவடிக்கை
- கோபுரங்களுக்கு மின்விளக்குகள் அலங்கரிக்கும் பணிகள் மும்முரம்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவையொட்டி சாமி வீதிஉலா வாகனங்கள் சீரமைப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா தீபவிழா வருகிற 27-ந் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. அதனை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 6-ந் தேதி அதிகாலை கோவிலின் கருவறையின் முன்பு சரியாக 4 மணிக்கு பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து அன்று மாலை கோவிலின் பின்புறம் அமைந்துள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரம் கொண்ட மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும்.
கடந்த கொரோனோ பரவல் காரணமாக இரண்டு ஆண்டு காலமாக மாடவீதியில் சாமி உலா நடைபெறாமல் 5-ம் பிரகாரத்தில் நடைபெற்றது. இதனால் பல்வேறு சாமி வீதி உலா வாகனங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்தது. ஆனால் இந்தாண்டு கொரோனா பரவல் முடிவடைந்து கட்டுப்பா டுகள் தளர்த்தப்பட்ட நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு மாடவீதியில் சாமி வீதியுலா நடைபெற உள்ளது.
கார்த்திகை தீப திருவிழாவையொட்டி சாமி வீதிஉலா வாகனங்கள் சீரமைப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
விழா நடைபெறும் 10 நாட்களும் காலை மாலை என இரு வேளைகளிலும் இந்திர விமானம், குதிரை வாகனம், சிம்ம வாகனம், புருஷாமிருகம், தங்க ரிஷ1ப வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பர். அதன்படி சாமி மற்றும் அம்பாள் வீதியுலா வரும் வாகனங்கள் அனைத்தும் ஆயிரம் கால் மண்டபம் அருகே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்திர விமானம், பூத வாகனம், குதிரை வாகனம், காமதேனு வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் முழுமையாக சீரமைக்கப்பட்டு தற்போது பல்வேறு வண்ணங்களில் வர்ணம் தீட்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் 7 ஆம் நாள் திருவிழா அன்று மாடவீதியில் வலம் வரும் பஞ்சமூர்த்திகள் தேர்க ளில் பொருத்தப்படும் குதிரைகளுக்கும் வர்ணம் தீட்டும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது.
கோவிலில் உள்ள சன்னதி கோபுரங்களுக்கு மின்விளக்குகள் அலங்கரிக்கும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
- எம்.பி. எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்
- நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
செங்கம்:
செங்கம் நகரில் புதிய பஸ் நிலையம் முதல் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வரையிலும் மற்றும் ராமகிருஷ்ணா பள்ளி அருகே உள்ள மேம்பாலத்தில் புதிதாக உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்கும் பணி செய்து முடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து உயர் கோபுர மின்விளக்குகளை திருவண்ணாமலை சி.என்.அண்ணாதுரை எம்.பி. மற்றும் செங்கம் மு.பெ.கிரி எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் மனோகரன், ஏழுமலை, செந்தில்குமார், நகர செயலாளர் அன்பழகன், செங்கம் பேரூராட்சி மன்ற தலைவர் சாதிக்பாஷா உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- ரூ.110 கோடி மதிப்பில் பணி நடைபெற உள்ளது
- நில உரிமையாளர்களுக்கு நஷ்ட ஈடு வழங்காமல் பணிகள் தொடங்கியது வருந்தத்தக்கது என பொதுமக்கள் வேதனை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் கூட்ரோடு பகுதியில் உள்ள ரெயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க, வேலூர் சாலையில் தனியார் பெட்ரோல் பங்க் தொடங்கி, கீழ்பள்ளிப்பட்டு நாகநதி ஆற்றுக்கால்வாய் வரை 16 பில்லர்களுடன், 12 மீட்டர் அகலம் கொண்ட மேம்பாலம் ரூ.110 கோடி மதிப்பில் கட்டப்படும் பணி நடைபெற உள்ளது.
இதற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ள இடத்தில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் ஜெயக்குமார் உதவி பொறியாளர் இளங்கோவன் ஆகியோர் அளவீடு செய்தனர்.
சர்வீஸ் ரோடு பெட்ரோல் பங்க் முதல் கீழ்பள்ளிப்பட்டு கால்நடை மருத்துவ நிலையம் வரையிலும், கீழ்பள்ளிப்பட்டு பழைய லெவல் கிராசிங் ரோடு வழியாக 9 மீட்டர் உயரத்தில், 3.5 மீட்டர் அகலத்தில் சப் வே சுரங்கப்பாதை அமைத்து திருவண்ணாமலை ரோட்டில் இணைக்கப்படுகிறது.திட்ட மதிப்பில் நில ஆர்ஜிதம் இழப்பீட்டுத் தொகையும் அடங்கும் என ஜெயக்குமார் தெரிவித்தார்.
இந்த அளவீடு செய்யும் போது கீழ்வல்லம் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ், மற்றும் கிராம உதவியாளர்கள் உடனிருந்தனர். நிலம் மற்றும் கட்டிடங்கள் வழங்கிய உரிமையாளர்கள் தங்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்காமல் பணிகள் தொடங்கியது மிகவும் வருந்தத்தக்கது என தெரிவித்தனர்.
- தெலுங்கானாவை சேர்ந்த பாவனாலயா நாட்டிய பயிற்சி நிலையத்தை சேர்ந்த 18 பரத நாட்டிய கலைஞர்கள், பரத நாட்டியம் ஆடிய படி 14 கி.மீ. தூரம் கிரிவலம் சென்றனர்.
- நாட்டிய கலைஞர்களுக்கு முன்பாக வாகனத்தில் ஒலிப்பெருக்கி மூலம் பாடல்கள் இசைக்கப்பட்டன.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுவார்கள்.
சில பக்தர்கள், அங்க பிரதட்சணமாக கிரிவலம் செல்லும் நிகழ்வுகளும் அவ்வப்போது நடப்பதுண்டு.
இந்நிலையில், நேற்று தெலுங்கானாவை சேர்ந்த பாவனாலயா நாட்டிய பயிற்சி நிலையத்தை சேர்ந்த 18 பரத நாட்டிய கலைஞர்கள், பரத நாட்டியம் ஆடிய படி 14 கி.மீ. தூரம் கிரிவலம் சென்றனர். இது அனைவரையும் பெரும் வியப்பில் ஆழ்த்தியது.
அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன்பு நாட்டிய நிகழ்ச்சியை தொடங்கிய நடன கலைஞர்கள், கிரிவலப்பாதை முழுவதும் ஆன்மிக பாடல்களுக்கு தகுந்தபடி நடனமாடிக் கொண்டு கிரிவலம் சென்றனர்.
நாட்டிய கலைஞர்களுக்கு முன்பாக வாகனத்தில் ஒலிப்பெருக்கி மூலம் பாடல்கள் இசைக்கப்பட்டன.
நடந்து கிரிவலம் செல்வதே கடும் சவாலாக அமையும் நிலையில், நாட்டியமாடியபடி 18 நடன கலைஞர்கள் கிரிவலம் சென்றது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
உலக சாதனை முயற்சியாக இதனை மேற்கொண்டதாக நடன கலைஞர்கள் தெரிவித்தனர்.






