என் மலர்
திருவண்ணாமலை
- வாகன சோதனையில் சிக்கினர்
- 2 பைக்குகள், 2 பவுன் செயின் பறிமுதல்
அரக்கோணம்:
அரக்கோணம் டவுன் போலீசார் நேற்று முன்தினம் திருவள்ளூர்ரோடு சில்வர் பேட்டை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த பைக்கில் வந்த 3 வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பேசினர்.
அவர்களை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தபோது அவர்கள் அரக்கோணத்தை அடுத்த மோசூர் பகுதியை சேர்ந்த சத்தியா என்கிற சக்தி (வயது 23), தக்கோ லத்தை அடுத்த உரியூரை சேர்ந்த நரேஷ் (25), பிரகாஷ் (20) என்பது தெரிய வந்தது.
இதில் சக்தி மீதுபல்வேறு வழக்குகள் இருப்பதும், 3 பேரும் நகை பறிப்பு, மோட்டார்சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 2 1/2 பவுன் செயின் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- துக்க நிகழ்வுக்கு சென்று திரும்பிய போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
வெம்பாக்கம்:
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த மாமண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 21). இவரது நண்பர் கணேசன். இவர்கள் இருவரும் பக்கத்து ஊரில் இறப்பு நிகழ்ச்சிக்கு சென்று இருந்தனர்.
பின்னர் வீட்டுக்கு செல்வதற்காக பைக்கில் மாமண்டூரை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது காஞ்சிபுரம் வந்தவாசி சாலை அருகே வரும்போது அடையாளம் தெரியாத வாகனம் இவர்கள் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில் திருநாவுக்கரசு தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கணேஷ் படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து விரைந்து வந்த தூசி போலீசார் வழக்கு பதிவு செய்து திருநாவுக்கரசு உடலை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பைக்கில் வந்து துணிகரம்
- சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை வைத்து விசாரணை
ஆரணி:
ஆரணி அடுத்த கொசப்பாளையத்தில் ஈஸ்வரி (வயது 60). நாட்டு மருந்து கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு ஈஸ்வரி ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்று கொண்டி ருந்தார். வீட்டின் அருகில் செல்லும்போது இவரை பின் தொடர்ந்து மோட்டார்சைக் கிளில் வந்த 2 மர்ம நபர்கள் முன்பாக சென்று பின்னர் அவருக்கு எதிரே வந்து ஈஸ்வ ரியின் கழுத்தில் அணிந்து இருந்த 21 பவுன் செயினை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து ஆரணி டவுன் போலீசில் ஈஸ்வரி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பு.புகழ், சப்-இன்ஸ் பெக்டர்கள் சுந்தரேசன், கிருஷ்ணமூர்த்தி, மகேந்திரன் உள்பட போலீசார் விரைந்து வந்து இரவு முழுவதும் மர்ம நபர்களை தேடினர். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புதுப்பிக்கப்பட்ட முருகர் தேரை அதிகாரிகள் ஆய்வு செய்வதாக தெரிவித்துள்ளனர்
- மகா தீப விழா ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா வரும் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவில் காலை, இரவு என இருவேளையில் சாமி திருவீதி உலா நடைபெறுகின்றன. ஏழாம் நாள் அன்று மகா தேரோட்டம் நடைபெறுகிறது.
டிசம்பர் 6ஆம் தேதி அன்று அதிகாலை 4 மணி அளவில் கோவில் சாமி சன்னதி அருகில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளன. கார்த்திகை தீபக் திருவிழாவில் பல்வேறு மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 25 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றன.
இவ்விழாவினை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திகை தீபத் திருவிழாவின் போது நடைபெற்ற தேர் திருவிழாவில் முருகர் தேர் பக்தர்கள் இழுத்துச் சென்றபோது திடீரென வழியில் பழுது ஏற்பட்டு நின்றது. அப்போது தற்காலிகமாக அப் பணியை சீர் செய்து தேரோட்டம் முடிக்கப்பட்டன.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணத்தால் தேரோட்டம் நடைபெறவில்லை. இந்த நிலையில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் சுமார் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் முருகர் தேர் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்தன. இப்பணிகள் முடிக்கப்பட்டு இன்று தேர் வெள்ளோட்டம் நடைபெறுவதாக கோவில் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ஆனால் இன்று பொதுப்பணித்துறையின் தேரின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்து சான்றிதழ் வழங்காத காரணத்தால் காலை திடீரென தேர் வெள்ளோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
மேலும் இது தொடர்பாக இன்று பொதுப்பணித்துறையினர் புதுப்பிக்கப்பட்ட முருகர் தேரை ஆய்வு செய்வதாக தெரிவித்துள்ளனர். ஆய்வு செய்த பிறகு அவர்கள் உறுதித் தன்மை சான்றிதழ் வழங்கிய பின்பு தேர் வெள்ளோட்டம் மற்றொரு நாளில் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சிவனடியார்களுக்கு பாத பூஜை நடந்தது
- மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது
கீழ்பென்னாத்தூர்:
தமிழகத்தில் திருக்கோவிலூர் பகுதியை ஆட்சி செய்து வந்த மெய்ப்பொருள் நாயனார் 63 நாயன்மார்களில் ஒருவர் ஆவார்.
மெய்ப்பொருள் நாயனாரின் வம்சாவழி யினர் கீழ்பென்னாத்தூர் தாலுகாவில், சாணிப்பூண்டி கிராமத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் உத்திரம் நட்சத்திரம் அன்று குருபூஜை விழாவை நடத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டிற்கான குருபூஜை விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு கூட்டேரிபட்டு ஆடல் அரசரின் சிவகணப் பேரிகை சிவனடியார் சுவாமிகள் தலைமை தாங்கினார்.
வடசேரி நேச நாயனார் அறக்கட்டளை துணைத் தலைவர் முருகன், சாணிப்பூண்டி கணேசன், இந்திராணி கணேசன், தையல்நாயகி ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மெய்ப்பொருள் நாயனார் திருமடம் நிறுவனர் விநாயக மூர்த்தி அடியார் அனைவரையும் வரவேற்றார்.
திருவாசக சித்தர் தாமோதரன், வாதவூரடிகள் கரூர் ஸ்ரீநந்தீஸ்வரர் ஞானபீடம் சுவாமி சித்தகுருஜி, திருவண்ணா மலை அடுத்த சக்கரத்தாழ்மடை கமலா பீடம் நிறுவனர் சீத்தாசீனுவாசசுவாமி ஆகியோர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்கள். திருமஞ்சன வழிபாடு சிவனடியார்களுக்குப் பாத பூஜையுடன் விழா தொடங்கியது.
அதன்பிறகு ஸ்ரீமெய்ப்பொருள் நாயனாருக்கு சிவகண வாத்தியங்கள் முழுங்க மகா தீபாராதனை செய்து, 10,008 ருத்ராட்ச சிவலிங்க தரிசனத்துடன் மெய்ப்பொருள் நாயனார் வீதி உலா நடைபெற்றது.
விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் பாபு ராதா கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் ஜோதி கலை செல்வி விநாயகமூர்த்தி, அபிராமி, மகாலிங்கம், சென்னை ரமேஷ் சதுரகிரியார், சாணிப்பூண்டி ரஞ்சித்குமார், தரணிகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.
ஆன்மீக தொண்டு செய்தவர்களுக்கு விருதுகளும், 2021-22ம் கல்வியாண்டில் 10, 12-ம் வகுப்பில் மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், பாராட்டு சான்றிதழ்களும் திருவாசக சித்தர் தாமோதரன் வழங்கினார். முடிவில் ஓய்வு பெற்ற உதவி தொடக்கக்கல்வி அலுவலர் வைப்பூர் ஜோதிலிங்கம் நன்றி கூறினார்.
- பக்தர்களுக்கு இனி ஆதார் கார்டு கட்டாயம்
- காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதி
கலசபாக்கம்:
பர்வதமலைக்கு செல்லும் பக் தர்கள் இனி கட்டாயம் ஆதார் கார் டுடன் வர வேண்டும் என போலீசார் திடீர் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகாவுக்கு உட்பட்ட தென்மகாதேவமங்கலம் கிராமத்தில் 4 ஆயிரத்து 560 அடி உயரத்தில் அமைந்துள்ள ஸ்ரீபிரம்பராம்பிகை உடனுறை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு பிற மாவட்டங்கள் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக் கான பக்தர்களும், மற்ற நாட்களில் - நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்களும் மலை உச்சிக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
கடந்த இரண்டு நாட்களாக காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற போலீசார் அனுமதிக்கின்றனர். அவர் களிடம் கட்டா டாயமாக ஆதார் கார்டு கொண்டு வரவேண்டும் என அறி வுறுத்தி வருகின்றனர்.
மாலை 3 மணிக்கு பிறகு மலை யேற செல்லும் பக்தர்களை பச்சை யம்மன் கோயில் அருகே தடுத்துநிறுத்தி திருப்பி அனுப்புகின்றனர். இதனால் அதிருப்தியடைந்த பக்தர் கள், இத்தனை ஆண்டாக இல்லாத கட்டுப்பாடு இப்போது மட்டும் எப்படி வந்தது ? என போலீசாரிடம் பக்தர்கள் இரண்டு நாட்களாக வாக் குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு பதிலளித்த போலீசார், மாலை 3 மணிக்கு பிறகு யாரையும் மலை உச்சிக்கு செல்ல அனுமதிக்க வேண்டாம் எனவும், மலை உச்சிக்கு செல்லும் யாராக இருந்தாலும் அவர் களது ஆதார் கார்டை வாங்கிக் கொண்டு அனுப்ப வேண்டும் என்பது மேலிடத்து உத்தரவு. அதனை நாங்கள் பின்பற்றி வருகிறோம். எங்களின் பணியை செய்ய விடுங்கள் என்றார்.
இதனால் பிறமாவட்டங்களில் இருந்து கலசபாக்கம் வந்திருந்த பக்தர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
இதுகுறித்து வன அதிகாரிகள் கூறியிருப்பதாவது:-
பருவதமலைக்கு செல்லும் பக்தர்கள் பத்திரமாக வர வேண்டும் என்பதற்காக நேர கட்டுப் பாட்டுடன் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளுடன் ஏற்கனவே பேனர் வைக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும் அவர் கூறுகையில், தற் போது மழைக்காலம் என்பதாலும், கார்த்திகை தீபம் நெருங்கி வருவதால் அதிகளவு பக்தர்கள் வருவார்கள். காலை முதல் இரவு வரை மலை ஏறினால் இறங்குவதற்கு நேரமாகும். அதோடு மட்டுமல்லாமல் மழைக் காலம் என்பதால் பாறைகள் வழுக் கும். இதுபோன்ற பிரச்னைகளால் மலையேறும் பக்தர்களுக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இனி வரும் பக்தர்கள் இந்த நேரத்தை கடைபிடிக்க வேண்டும். இதுகுறித்து நோட்டீசும் அச்சடித்து வழங்கப்பட் டுள்ளது என்றார்.
இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறியிருப்பதாவது:-
கடந்த மாதம் பவுர்ணமி தினத்தன்று பர்வதமலை ஏறும் பக்தர்களில் சென் னையைச் சேர்ந்த சிலர் கஞ்சா பொட் டலங்களுடன் வந்ததால் போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். இருப்பி னும் எங்களால் முடிந்த உதவியை நாங்கள் செய்கிறோம் என்றார்.
கடந்த 4 நாட்களாக பர்வதமலையை சுற்றிலும் மலை ஏறும் இடங்களில் சிசிடிவி கேமராக்கள் வைக்கச்சொல்லி கேட்டுக்கொண் டனர். அதன்படி 8 இடங்களில் 5 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மற்றபடி நேர கட்டுப்பாடு குறித்து நாங்கள் ஏதும் கூறவில்லை என்றார்.
- 174 கிராம் தங்கம், 852 கிராம் வெள்ளியும் இருந்தது
- அஷ்டலிங்க கோவில்களிலும் வழிபாடு
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தாிசனம் செய்கின்றனர்.
மேலும் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் சென்று கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும் வழிபாடு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் அஷ்ட லிங்க கோவில்களில் உள்ள உண்டியல்கள் அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டு கோவில் இணை ஆணையர் அசோக்குமார் முன்னிலையில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.
இதில் ரூ.1 கோடியே 34 லட்சத்து 54 ஆயிரத்து 461. 174 கிராம் தங்கம், 852 கிராம் வெள்ளியும் இருந்தது.
- கார்த்திகை தீப திருவிழாவையொட்டி நடவடிக்கை
- 2 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடக்கிறது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வரும் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
10 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது. காலை, இரவு என இருவேளையில் சாமி வீதி உலா நடைபெறும். 7-ம் நாளான வருகிற 3-ந் தேதி மகா தேரோட்டமும் 6-ந் தேதி அன்று அதிகாலை 4 மணி அளவில் கோவில் வளாகத்தில் உள்ள சாமி சன்னதி அருகில் பரணி தீபமும் மாலை 6 மணிக்கு 2668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
விழாவினை முன்னிட்டு பல்வேறு முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு வருகிறது.
இதில் ஒரு பகுதியாக அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நான்கு வாயில்களில் உள்ள ராஜகோபுரம், அம்மனிஅம்மன் கோபுரம், திருமஞ்சன கோபுரம், பே கோபுரம் ஆகிய கோபுரங்களை சுத்தம் செய்தனர்.
தீயணைப்பு வீரர்கள் பிராண்டோ ஸ்கை லிப்ட் 54 மீட்டர் உயரம் வரை செல்லும் அதாவது 162 அடி உயரத்திற்கு மேல் செல்ல கூடிய ராட்சத தீயணைப்பு மீட்பு எந்திரத்தின் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து கோபுரங்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
கார்த்திகை தீப திருவிழாவில் 2 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடக்கிறது. இதற்காக தேர்கள் சீரமைக்கப்படுகின்றன. இன்று காலையில் அருணாசலேஸ்வரர் பவனி வரும் பெரிய தேர் சீரமைப்பு பணி தொடங்கியது.
தேர் சக்கரம், அச்சு, உச்சி பகுதிகளில் சீரமைப்பு பணிகள் செய்யப்படுகிறது.
- ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதியிக்கு உட்பட ஜவ்வாதுமலை அமைந்துள்ளது இம்ம லையை சுற்றுலாத்தலமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் எ.வ. வேலு ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் விஐபி, விவிஐபி மற்றும் சமையலறையுடன் கூடிய தங்கும் விடுதி கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்தார். அதனடிப்படையில் தற்போது இப்பணிகள் தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பணிகளை எம்பி அண்ணாதுரை, கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தி.சரவணன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு
- பைக்கில் வந்த மர்ம நபர்கள் கைவரிசை
தூசி:
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே உள்ள மாமண்டூர் சந்தைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் டில்லிபாபு. இவர் சென்னையில் உள்ள தனி யார் கம்பெனியில் வேலைபார்க்கிறார்.இவரது மனைவி பிரவினா (வயது 25).
இந்த நிலையில் நேற்று முன் தினம் பிரவினா மற்றும் அவ ரது அத்தை பூத்தானம் அம் மாளுடன் காஞ்சீபுரம்- வந்த வாசி மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந் தார்.
அப்போது எதிரில் மோட் டார் சைக்கிளில் வந்த 2 மர் மநபர்கள் பிரவினா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.
இதுகுறித்து பிரவினா தூசி போலீசில் புகார் கொடுத் தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.
மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா வில் மர்ம நபர்கள் உருவம் பதிவாகி உள்ளதா என்று ஆய்வு செய்து வருகின்றனர்.
- ஒ.ஜோதி எம்.எல்.ஏ. பரிசு வழங்கினார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
செய்யாறு:
செய்யாறு மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் அளவில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கிடையான ஓவியம், மாறுவேடம், கதை சொல்லுதல், தேச பக்தி பாடல்கள், வினாடி வினா, கட்டுரை, கவிதை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் போட்டிகள் நடைபெற்றது.
அதன் பரிசளிப்பு விழா செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு செய்யாறு மாவட்ட கல்வி அலுவலர் நளினி தலைமை தாங்கினார். செய்யாறு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் எல்லப்பன், தலைமை ஆசிரியர் ஜெயகாந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட தலைவர் ஆசிரியர் ஜி. செல்வதிருமால் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக ஓ.ஜோதி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஒன்றி குழு தலைவர் திலகவதி ராஜ்குமார், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வழக்கறிஞர் ஜி அசோக், ஒன்றிய கவுன்சிலர் ஞானவேல், தலைமை ஆசிரியர்கள், ஜே.ஆர்.சி. ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் உள்பட பலர்திரளாக கலந்து கொண்டனர்.
- தரைப்பாலம் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
- பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என புகார்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த படை வீடு ஊராட்சி ராமநாத புரம் கொல்லைமேட்டை சேர்ந்த பரசுராமன் (வயது 40) என்பவர் நேற்று உடல்நல குறைவால் மரணம் அடைந்தார். இவருக்கு சந்திரா (35) என்ற மனைவியும், 9-ம் வகுப்பு படிக்கும் யுவராஜ் (14) என்ற மகனும் உள்ளனர்.
பரசுராமன் உடலை அவ ரது உறவினர்கள் அருகில் உள்ள கமண்டல நதிக்கரையில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்ய கொண்டு சென்றனர். ஆனால் சமீப நாட்களாக பெய்த கனமழை காரணமாக கமண்டல நதியில் செண்பகத்தோப்பு அணைக்கட்டில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் செல்கிறது. இடுப்பளவுக்கு மேல் தண்ணீர் ஆற்றில் செல்வதால், கடுமையான சூழலில் ஆற்று நீரில் தவழ்ந்தபடி உடலை கொண்டு சென்றனர். அவர்களுடன் வந்தவர்கள் ஆற்றைக்கடக்க முடியாத தால் மறுகரையிலேயே நின்று விட்டனர்.
இறந்த பரசுராமனில் உறவினரான படவேடு வரலாற்று ஆய்வாளர் அ.அமுல் ராஜ் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது:-
இறந்தவரின் உடலை அடக்கம் செய்யும் சடங்கில் பங்கேற்று ஒருபிடி மண்ணைக்கூட போட முடியாத சூழலில் எங்கள் வாழ்க்கை கழிகிறது. இதுகுறித்து பல முறை ஊராட்சி மன்றத்திற்கும், அரசு அதிகாரிகளுக்கும் புகார் செய்தும் பலனில்லை.
பல ஆண்டுகளாக இதேபோன்ற சூழலில்தான் நாங்கள் வாழ்ந்து வருகிறோம். பலமுறை மனு அளித்தும் புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை.
மேலும் ராமநாதபுரம் கொல்லைமேடு, மல்லிகாபுரம், கமண்டலாபுரம், தஞ்சான்பாறை, இருளம்பாறை, நடுவூர் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள், பள்ளி செல்லும் மாணவர்களும் இந்த ஆற்றைக் கடந்துதான் ரேணு கொண்டாபுரம் பள்ளிக்கும் வேலூர், ஆரணி ஆகிய இடங் களில் உள்ள கல்லூரிக்கும் சென்று படிக்க வேண்டியுள்ளது.
எனவே கமண்டல நதியில் உடனடியாக தரைப்பாலம் அமைத்து, இப்பகுதி மக்கள் கோரிக்கையை தமிழக அரசும் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டரும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.






