என் மலர்
திருவண்ணாமலை
- போலீசார் தடுத்து நிறுத்தினர்
- கணவர் கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கலெக்டர் அலுவல கத்தில் நேற்று மக்கள் குறைதீர்வு நாள் கூட் டம் நடைபெற்றது. இதையொட்டி கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் போலீசார் மனு அளிக்க வருபவர் களை தீவிர சோதனை செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதித்த னர்.
அப்போதுநுழைவு வாயில் அருகில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் அவரது மகனுடன் வந்து திடீரென உடலில் மண்எண்ணெய் ஊற்றி கொண்டு தீக்குளிக்கமுயன்றார். அப்போது அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் தண்டராம்பட்டு எடத்தனூர் பகுதியை சேர்ந்த காமாட்சி என்றும், அவரது கணவர் சென்ன கிருஷ்ணன் குடும்பம் நடத்த சம்பள பணம் கொடுக்காமல் அடித்து கொடுமைப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக வும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி தீக்குளிக்க முயற்சி செய்ததாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
- உணவுக்காக வீட்டிற்கு வந்த நிலையில் விபரீதம்
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் தாசில்தார் அலுவலகம், கல்லூரி மாணவிகள் அரசு விடுதிகள், பள்ளி மாணவர்கள் விடுதி உள்பட பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டுவருகிறது.
கடந்த சில தினங்களாக மாணவர்கள் விடுதி செயல்பாட்டில் இல்லாமல் மூடி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை இந்த விடுதி வளாகத்தில் உள்ள மரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் திரு வண்ணாமலை கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இறந்த வாலிபர் திருவண்ணாமலை கல் நகரை சேர்ந்த திரு நாவுக்கரசு என்பவரின் மகன் சூர்யா (வயது 17) என்பது தெரிய வந்தது.
மேலும் அவர் திருவண்ணாமலையில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை செய்து வந்ததும், நேற்று மதியம் உணவுக்காக வீட்டிற்கு வந்தவர் விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
தொடர்ந்து அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராமநாதீஸ்வரர் கோவிலில் 108 சங்கு அபிஷேகம் நடந்தது
- பக்தர்களுக்கு அன்னதானம்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் இரட்டை சிவாலயத்தில் நேற்று மாலை நந்திபகவானுக்கு பிரதோஷ வழிபாடு (சோமவார பிரதோஷம்) நடைபெற்றது.
தொடர்ந்து பிரதோஷ நாயகர் உட்பிரகார உலா நடைபெற்றது.பக்தர்க ளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல் கண்ணமங்கலம் ராமநாதீஸ்வரர் கோவிலில் கார்த்திகை சோமவாரம் முன்னிட்டு 108 சங்கு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. மேலும் நந்திபகவானுக்கு பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
பக்தர்கள் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சந்தவாசல் சுந்தரேஸ்வரர் சமேத வடிவாம்பிகை கோவிலில் நேற்று சோமவார சங்காபிஷேக பூஜையும், மாலையில் பிரதோஷ வழிபாடும் நடைபெற்றது.
- போலீசார் மடக்கி பிடித்தனர்
- பைக் பறிமுதல்
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் அப்துல் வாஹித் (வயது 36). இவர் சேத்துப்பட்டில் மோட்டார் சைக் கிளை நிறுத்திவிட்டு பொருட் கள் வாங்க சென்றார். பின்னர் வந்து பார்த்தபோது பைக் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பைக் திருடியவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் திருவண் ணாமலை-செஞ்சி செல்லும் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சேத்துப்பட்டு இருதய ஆண்ட வர் தெருவை சேர்ந்த வாசன் (20) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தபோது மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் பைக் திருடியதை ஒப்புகொண்டார். இதையடுத்து அவரை போலீ சார் கைது செய்து, மோட் டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
- ராஜவேலு மற்றும் அவருடைய மனைவி தேன்மொழியை கட்டிப்போட்டு வீட்டிலிருந்த 5 பவுன் நகை மற்றும் 1 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
- அக்கம பக்கத்தில் இருந்தவர்கள் செங்கம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
செங்கம்:
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள குப்பநத்தம் அடுத்த சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் பகுதியில் வசித்து வருபவர் ராஜவேலு (65) விவசாயி.
இவரது மனைவி தேன்மொழி (50), தாயார் கண்ணம்மா (90) உள்ளிட்டோருடன் வசித்து வருகிறார். நேற்று இரவு குடும்பத்துடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.
நள்ளிரவில் மர்ம நபர்கள் முகமூடி அணிந்து வீட்டிற்குள் புகுந்தனர்.சத்தம் கேட்டு கண்விழித்த ராஜவேலு மற்றும் அவருடைய மனைவி தேன்மொழியை கட்டிப்போட்டு வீட்டிலிருந்த 5 பவுன் நகை மற்றும் 1 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து அக்கம பக்கத்தில் இருந்தவர்கள் செங்கம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை செய்தனர். மேலும் வழக்கு வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
- சேதமடைந்த 8 சிற்பங்கள் அகற்றப்பட்டது
- தீபத் திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பட்டுபோன மரங்களில், பல்வேறு வடிவங்களில் மொத்தம் 63 மர சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டன.
இது கிரிவலம் செல்லும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களை கவர்ந்தது. இந்த மர சிற்பங்கள் நெடுஞ்சாலைத்துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகின்றது.
மழை, வெயிலால் மர சிற்பங்கள் சேதமடைந்து வந்தாலும் அவை நெடுஞ்சாலைத்துறை மூலம் சீரமைக்கப்பட்டு வருகின்றன. கிரிவலப்பாதையில் வடிவமைக்கப்பட்டு இருந்த 63 மரசிற்பங்களில் 8 மர சிற்பங்கள் முற்றிலும் சேதமடைந்து அகற்றப்பட்டது.
இந்த நிலையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா தொடங்க உள்ள நிலையில் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் தீபத் திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக கிரிவலப்பாதையில் உள்ள மர சிற்பங்கள் சீரமைக்கும் பணிகள் நெடுஞ்சாலைத்துறை மூலம் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதனை சீரமைக்கும் பணியில் சிற்பங்களை வடிவமைத்த சிற்பி மதுரை மணிகண்ட ராஜா தலைமையில் 10-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
- மூலவருக்கு மூலிகைகளால் அபிஷேகம்
- பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அய்யப்பன் கோவிலில் விளக்கு பூஜை வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக அய்யப்பனுக்கு பல்வேறு மூலிகைகளால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அய்யப்பன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதை தொடர்ந்து வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு விளக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் பக்தி பாடல்களை பாடினர்.
இதைத் தொடர்ந்து மங்கல மேள வாத்தியங்கள் முழங்க ஸ்ரீ அய்யப்பனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த சிறப்புமிக்க விளக்கு பூஜையில் திரளான அய்யப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- போலீசார் பேச்சு வார்த்தை
- போக்குவரத்து பாதிப்பு
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த சேவூர் காலனி பகுதியில் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அப்பணியின் போது தனிப்பட்ட நபர் ஒருவரின் வீட்டின் பக்கத்தில் கால்வாய் போடுவதற்கு எதிர்ப்பு தெரி வித்துள்ளார். அதனால் சாலையின் குறுக்கே பள்ளம் தோண்டப்பட்டு எதிர்புறமாக கால்வாய் அமைக்க பள்ளம் எடுக்கும் பணி நடந்துள்ளது.
தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் எங்கள் வீட்டின் பக்கம் பள்ளம் தோண்டி விட்டார்கள் தனிப்பட்ட நபருக்காக எப்படி கால்வாய் அமைக்கும் பணியை மாற்றினீர்கள் என்று கேள்வி கேட்டனர்.
திட்ட மதிப்பீடு செய்தது போல் தான் கால்வாய் அமைக்க வேண்டும் என்று கூறி ஆரணி-வேலூர் நெடுஞ்சாலையில் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.
கால்வாய் பணியை திட்டம் போட்டது போல் அமைக்க வேண்டும் என்று காண்டிராக்டரிடம் கூறிவிட்டு பொதுமக்களை சமரசம் செய்தனர்.
பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கி ருந்து கலைந்து சென்றனர். இதனால் ஆரணி-வேலூர் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- பெண்கள் உட்பட 15 பேர் படுகாயம்
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
கலசப்பாக்கம் அடுத்த கடலாடி காலனி பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (வயது 28) இவர் டிராக்டரில் டிப்பர் இணைக்கப்பட்டு அதன் மூலம் 15 பெண்களை ஏற்றிக்கொண்டு போளூர் அருகே உள்ள முருகாபாடி அடுத்த ஒகூர் பகுதியில் மஞ்சம் புல் அறுப்பதற்காக புறப்பட்டு சென்றுள்ளனர்.
அப்போது கடலாடியில் இருந்து போளூர் செல்லும் பைபாஸ் சாலையில் உள்ள வ.பேட்டை பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தபோது டிராக்டரின் பின்புறம் இருந்த டிப்பர் திடீரென நிலை தடுமாறி தலைகீழாக சாலை ஓரம் கவிழ்ந்தது.இதில் அமர்ந்து வந்த 15 பெண்களும் சிக்கிக் கொண்டனர்.
அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகே உள்ள போளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதில் பரமேஸ்வரி (50) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
மேலும் டிரைவர் சூர்யா உட்பட 15 பெண்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து கலசப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பதாகைகளை ஏந்திச் சென்றனர்
- ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்
வந்தவாசி:
கருவம்பாக்கம் ஸ்ரீதரம்சந்த் ஜெயின் பள்ளி சார்பில் மின் சிக்கன விழிப்புணர்வு ஊர்வலம் வந்தவாசியில் நடைபெற்றது.
ஊர்வலத்துக்கு பள்ளித் தாளாளர் பப்ளாசா தலைமை வகித்தார். செயலர் ஜின்ராஜ், பொருளர் நவீன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாக இயக்குனர் அனுராக் ஊர்வலத்தை தொடக்கி வைத்தார்.
வந்தவாசி காந்தி சாலையில் தொடங்கிய ஊர்வலம் பஜார் வீதி, தேரடி வழியாக புதிய பஸ் நிலையம் சென்றடைந்தது. இதில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவோம், மின்சாரத்தை சேமிப்போம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பள்ளி மாணவர்கள் ஏந்திச் சென்றனர்.
ஊர்வலத்தில் பள்ளி முதல்வர் ஜெகன், ஆசிரியர்கள் ஆர்த்தீஸ்வரி, பத்மஜெயனி, தினேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே மலையேற அனுமதி உண்டு.
- மழைக்காலம் என்பதால் பாறைகள் வழுக்கும்.
கலசபாக்கம் தாலுகாவுக்கு உட்பட்ட தென்மகாதேவமங்கலம் கிராமத்தில் 4 ஆயிரத்து 560 அடி உயரத்தில் ஸ்ரீபிரம்பராம்பிக்கை உடனுறை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலுக்கு பவுர்ணமி நாட்களிலும், பிறநாட்களிலும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற கடலாடி போலீசார் அனுமதிக்கின்றனர். மேலும் அவர்களிடம் கட்டாயமாக அடுத்த முறை வரும் போது ஆதார் அட்டை கொண்டுவர வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர்.
மாலை 3 மணிக்கு பிறகு மலையேற செல்லும் பக்தர்களை பச்சையம்மன் கோவிலோடு தடுத்து நிறுத்தி அனுப்பினர்.
இதுகுறித்து வனச்சரக அலுவலர் சுரேஷ் கூறியதாவது:-
பருவதமலைக்கு செல்லும் பக்தர்கள் பத்திரமாக வரவேண்டும் என்பதற்காக நேர கட்டுப்பாடு மற்றும் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளுடன் ஏற்கனவே பேனர் வைக்கப்பட்டுள்ளது.
தற்போது மழைக்காலம் என்பதாலும், கார்த்திகை தீபம் நெருங்கி விட்டதாலும் அதிகளவு பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காலை முதல் இரவு வரை பக்தர்கள் மலை ஏறினால் மீண்டும் இறங்குவதற்கு நேரம் ஆகும். அதோடு மட்டுமல்லாமல் மழைக்காலம் என்பதால் பாறைகள் வழுக்கும். இந்த பிரச்சினைகளால் மலையேறும் பக்தர்களுக்கு ஏதேனும் விபரீதம் நடந்தால் உடனடியாக அவர்களை மீட்டு கொண்டு வர முடியாது.
இந்த சிக்கல்கள் வேண்டாம் என்பதற்காகவும், மேலும் ஏற்கனவே உள்ள நேர கட்டுப்பாட்டு விதிகளை கொஞ்சம் தளர்வு செய்யப்பட்டு இருந்ததாலும் பக்தர்கள் நேரம் அறியாமல் மேலே சென்று வந்தனர். ஆனால் குறிப்பாக அரசு விதிகளுக்கு உட்பட்டு காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே மலையேற அனுமதி உண்டு. இப்படி செல்லும் பக்தர்கள் இரவுக்குள் வந்துவிடுவார்கள். இதுதான் வழக்கமாக இருந்து வருகிறது.
இனிவரும் பக்தர்கள் இந்த நேரத்தை கடைபிடித்து வர வேண்டும். இதுகுறித்து நோட்டீஸ் அடித்தும் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் நாங்கள் ஏதும் நேர கட்டுப்பாட்டை இன்னும் பக்தர்களுக்கு விதிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி கூறுகையில், 'கடந்த மாதம் பவுர்ணமி தினத்தன்று பருவதமலை ஏறும் பக்தர்களில் சென்னையை சேர்ந்த சிலர் கஞ்சா பொட்டலங்களுடன் சென்றதால் போலீசார் அதிர்ச்சி அடைந்து இதை கட்டுப்படுத்துவது எப்படி என்று கேள்வி எழுப்பினர். இருப்பினும் எங்களால் முடிந்த உதவியை நாங்கள் செய்கிறோம் என்று கூறினோம்.
கடந்த 4 நாட்களாக மலையை சுற்றிலும் இரவு நேரத்தில் ரோந்து வந்து தற்போது மலை ஏறும் இடங்களில் கேமராக்கள் வைக்க சொல்லி கேட்டுக்கொண்டனர். அதன் அடிப்படையில் 8 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
பார்க்கிங் செய்யும் இடம் முதல் மலையேறும் வரை பக்தர்களை கண்காணிப்பதற்கு கேமராக்களை பொருத்தி உள்ளோம்' என்றார்.
- கண்டக்டர் பிரகாஷ் போதை வாலிபர் மீது தண்ணீரை ஊற்றி அவரை பஸ் படிக்கட்டில் இருந்து கீழே தள்ளி விட்டார்.
- கண்டக்டர் பிரகாசை சஸ்பெண்டு செய்து விழுப்புரம் கோட்ட மேலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
வந்தவாசி:
பெங்களூருவில் இருந்து அரசு பஸ் கடந்த 17-ந் தேதி நள்ளிரவு வந்தவாசிக்கு வந்தது.
வந்தவாசி பழைய பஸ் நிலையம் முன்பு நிறுத்தப்பட்ட பஸ்சில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்கினர்.
அப்போது மதுபோதையில் இருந்த ஒரு வாலிபர் மட்டும் இறங்காமல் இருந்தார். கண்டக்டர் பிரகாஷ் அவரை இறங்கும்படி கூறினார். போதையில் வாலிபர் பஸ் படிக்கட்டில் தள்ளாடியபடி கீழே இறங்கி வந்தார்.
அப்போது கண்டக்டர் பிரகாஷ் போதை வாலிபர் மீது தண்ணீரை ஊற்றி அவரை பஸ் படிக்கட்டில் இருந்து கீழே தள்ளி விட்டார். இதில் அவர் சாலையில் விழுந்தார்.
இதைத்தொடர்ந்து அந்த பஸ் டெப்போவை நோக்கி புறப்பட்டுச் சென்றது. மதுபோதை பயணியை பஸ் படிக்கட்டில் இருந்து கண்டக்டர் கீழே தள்ளிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதுகுறித்து டெப்போ உதவி பொறியாளர் துரை கூறுகையில்:-
அவலூர்பேட்டையில் ஏறிய அந்த பயணி பஸ்சிலேயே மது அருந்தியும், பஸ்சிலேயே சிறுநீர் கழித்தும் பிற பயணிகளுக்கு தொந்தரவு அளித்துள்ளார்.
மேலும் அந்த பயணி கீழே தள்ளப்பட்ட விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த நிலையில் கண்டக்டர் பிரகாசை சஸ்பெண்டு செய்து விழுப்புரம் கோட்ட மேலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.






