என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேவூரில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
- போலீசார் பேச்சு வார்த்தை
- போக்குவரத்து பாதிப்பு
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த சேவூர் காலனி பகுதியில் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அப்பணியின் போது தனிப்பட்ட நபர் ஒருவரின் வீட்டின் பக்கத்தில் கால்வாய் போடுவதற்கு எதிர்ப்பு தெரி வித்துள்ளார். அதனால் சாலையின் குறுக்கே பள்ளம் தோண்டப்பட்டு எதிர்புறமாக கால்வாய் அமைக்க பள்ளம் எடுக்கும் பணி நடந்துள்ளது.
தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் எங்கள் வீட்டின் பக்கம் பள்ளம் தோண்டி விட்டார்கள் தனிப்பட்ட நபருக்காக எப்படி கால்வாய் அமைக்கும் பணியை மாற்றினீர்கள் என்று கேள்வி கேட்டனர்.
திட்ட மதிப்பீடு செய்தது போல் தான் கால்வாய் அமைக்க வேண்டும் என்று கூறி ஆரணி-வேலூர் நெடுஞ்சாலையில் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.
கால்வாய் பணியை திட்டம் போட்டது போல் அமைக்க வேண்டும் என்று காண்டிராக்டரிடம் கூறிவிட்டு பொதுமக்களை சமரசம் செய்தனர்.
பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கி ருந்து கலைந்து சென்றனர். இதனால் ஆரணி-வேலூர் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






