என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bucks will now have to come with Aadhaar card"

    • பக்தர்களுக்கு இனி ஆதார் கார்டு கட்டாயம்
    • காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதி

    கலசபாக்கம்:

    பர்வதமலைக்கு செல்லும் பக் தர்கள் இனி கட்டாயம் ஆதார் கார் டுடன் வர வேண்டும் என போலீசார் திடீர் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகாவுக்கு உட்பட்ட தென்மகாதேவமங்கலம் கிராமத்தில் 4 ஆயிரத்து 560 அடி உயரத்தில் அமைந்துள்ள ஸ்ரீபிரம்பராம்பிகை உடனுறை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு பிற மாவட்டங்கள் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக் கான பக்தர்களும், மற்ற நாட்களில் - நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்களும் மலை உச்சிக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    கடந்த இரண்டு நாட்களாக காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற போலீசார் அனுமதிக்கின்றனர். அவர் களிடம் கட்டா டாயமாக ஆதார் கார்டு கொண்டு வரவேண்டும் என அறி வுறுத்தி வருகின்றனர்.

    மாலை 3 மணிக்கு பிறகு மலை யேற செல்லும் பக்தர்களை பச்சை யம்மன் கோயில் அருகே தடுத்துநிறுத்தி திருப்பி அனுப்புகின்றனர். இதனால் அதிருப்தியடைந்த பக்தர் கள், இத்தனை ஆண்டாக இல்லாத கட்டுப்பாடு இப்போது மட்டும் எப்படி வந்தது ? என போலீசாரிடம் பக்தர்கள் இரண்டு நாட்களாக வாக் குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கு பதிலளித்த போலீசார், மாலை 3 மணிக்கு பிறகு யாரையும் மலை உச்சிக்கு செல்ல அனுமதிக்க வேண்டாம் எனவும், மலை உச்சிக்கு செல்லும் யாராக இருந்தாலும் அவர் களது ஆதார் கார்டை வாங்கிக் கொண்டு அனுப்ப வேண்டும் என்பது மேலிடத்து உத்தரவு. அதனை நாங்கள் பின்பற்றி வருகிறோம். எங்களின் பணியை செய்ய விடுங்கள் என்றார்.

    இதனால் பிறமாவட்டங்களில் இருந்து கலசபாக்கம் வந்திருந்த பக்தர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

    இதுகுறித்து வன அதிகாரிகள் கூறியிருப்பதாவது:-

    பருவதமலைக்கு செல்லும் பக்தர்கள் பத்திரமாக வர வேண்டும் என்பதற்காக நேர கட்டுப் பாட்டுடன் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளுடன் ஏற்கனவே பேனர் வைக்கப்பட்டுள்ளது என்றார்.

    மேலும் அவர் கூறுகையில், தற் போது மழைக்காலம் என்பதாலும், கார்த்திகை தீபம் நெருங்கி வருவதால் அதிகளவு பக்தர்கள் வருவார்கள். காலை முதல் இரவு வரை மலை ஏறினால் இறங்குவதற்கு நேரமாகும். அதோடு மட்டுமல்லாமல் மழைக் காலம் என்பதால் பாறைகள் வழுக் கும். இதுபோன்ற பிரச்னைகளால் மலையேறும் பக்தர்களுக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இனி வரும் பக்தர்கள் இந்த நேரத்தை கடைபிடிக்க வேண்டும். இதுகுறித்து நோட்டீசும் அச்சடித்து வழங்கப்பட் டுள்ளது என்றார்.

    இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறியிருப்பதாவது:-

    கடந்த மாதம் பவுர்ணமி தினத்தன்று பர்வதமலை ஏறும் பக்தர்களில் சென் னையைச் சேர்ந்த சிலர் கஞ்சா பொட் டலங்களுடன் வந்ததால் போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். இருப்பி னும் எங்களால் முடிந்த உதவியை நாங்கள் செய்கிறோம் என்றார்.

    கடந்த 4 நாட்களாக பர்வதமலையை சுற்றிலும் மலை ஏறும் இடங்களில் சிசிடிவி கேமராக்கள் வைக்கச்சொல்லி கேட்டுக்கொண் டனர். அதன்படி 8 இடங்களில் 5 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மற்றபடி நேர கட்டுப்பாடு குறித்து நாங்கள் ஏதும் கூறவில்லை என்றார்.

    ×