என் மலர்
நீங்கள் தேடியது "It was confirmed that the schoolgirls had gone wrong."
- மடியில் அமரக்கூறி அத்துமீறல்
- போலீசார் விசாரணை
ஆரணி,நவ.18-
ஆரணி அருகே அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்து வருபவர் கோவிந்தசாமி (வயது 60). நேற்று முன்தினம் ஆய்வக அறையிலும், நூலகத்திற்கும் வந்திருந்த மாணவிகளிடம் அவர் மடியில் அமரும் படி கூறியதாக தெரிகிறது.
இதுகுறித்து மாணவிகள் பெற்றோரிடம் தெரிவித்தனர். நேற்று காலை பெற்றோர்கள், உறவினர்கள் பள்ளியை முற்றுகை யிட்டு, தலைமை ஆசிரியையிடம் தெரிவித்தனர்.
தலைமை ஆசிரியை அவருக்கு விடுமுறை அளித்து வீட்டுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து மாணவிகளின் பெற்றோர் ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் சோமந்தாங்கல் கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று கோவிந்தசாமியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் பள்ளி மாணவிகளிடம் தவறாக நடந்தது உறுதி செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாராணி மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கோவிந்த சாமியை கைது செய்தனர்.
பின்னர் அவரை ஆரணி கோர்ட் டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். மேலும் கோவிந்தசாமியை சஸ்பெண்டு செய்து கல்வி அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.






