என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீட்டு பணத்தை கொடுக்காமல் பேராசிரியர் காலம் தாழ்த்தி வந்துள்ளார்."

    • கொலை மிரட்டல்
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை சேர்ந்தவர் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். செய்யாறு டவுன் பகுதியை சேர்ந்தவர் அரசு கல்லூரி பேராசிரியர்.

    இவரிடம் ஜவுளி வியாபாரி சீட்டு பணம் கட்டி வந்துள்ளார். சீட்டு தவணை முடிந்து பணத்தை பேராசிரியரிடம் ஜவுளி வியாபாரி கேட்டுள்ளார்.

    சீட்டு பணத்தை கொடுக்காமல் பேராசிரியர் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இந்த நிலையில் பேராசிரியர் வீட்டிற்கு நேரில் சென்ற ஜவுளி வியாபாரி சீட்டு பணத்தை கேட்டுள்ளார். அதற்கு பேராசிரியர் பணம் கேட்டு வீட்டிற்கு வந்தால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஜவுளி வியாபாரி செய்யாறு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்த பேராசிரியரை தேடி வருகின்றனர்.

    ×