என் மலர்
உள்ளூர் செய்திகள்

கண்ணமங்கலத்தில் விழிப்புணர்வு பேரணி
- மாற்றுத்திறனாளிகளை பள்ளியில் சேர்ப்பது குறித்து பிரசாரம் நடந்தது
- மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகொண்டாபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளி தொகுப்பு கருத்தாய்வு மையத்தில் நேற்று காலை மாற்றுத்திறன் மாணவர்களுக்கான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
இந்த ஊர்வலத்தை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பழனி, தலைமையாசிரியர் எம் ஆனந்தன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
போளூர் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் சுரேஷ், செல்வதுரை, ஆசைத்தம்பி, சங்கீதா சிறப்பு கல்வியாளர்கள் விஜயலட்சுமி ஸ்டெல்லா பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் வெங்கடேசன், ஜேஆர்சி ஆலோசக ஆசிரியர் சந்திரநாதன் உள்பட மாணவ மாணவிகள் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
இதில் மாற்றுத்திறன் மாணவர்களையும் பள்ளியில் சேர விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.
கண்ணமங்கலத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் கண்ணமங்கலம் பேரூராட்சி சார்பில் திட கழிவு மேலாண்மை விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது.
உதவி தலைமை ஆசிரியர் சாந்தி தலைமையில் நடந்த இப்பேரணியில், முதுகலை ஆசிரியர்கள் சுப்பிரமணியன், ரவி, தனபால், பட்டதாரி ஆசிரியர்கள் ராஜா, சதீஷ், திருஞானசம்பந்தம், உள்பட பேரூராட்சி (துப்புரவு) பணியாளர்கள் மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.