அத்திமலைப்பட்டு செல்லியம்மன் கோவிலில் பாலாலய பூஜை

பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது ஏராளமானோர் தரிசனம்
அத்திமலைப்பட்டு செல்லியம்மன் கோவிலில் பாலாலய பூஜை
Published on

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அருகே உள்ள அத்திமலைப்பட்டு கிராமத்தில் கிராம தேவதை செல்லியம்மன் கோவில் பாலாலய பூஜை ஹோமத்துடன் நடைபெற்றது.

வேலூர் பாலாஜி சிவாச்சாரியார் மற்றும் குழுவினர் நடத்திய பாலாலய பூஜைகளில் கோவில் செயல் அலுவலர் சிவாஜி, ஆரணி நகர தலைவர் ஏ.சி. மணி, ஒன்றிய கவுன்சிலர் கீதாமோகன், கண்ண மங்கலம் நகர செயலாளர் கோவர்த்தனன், முன்னாள் எம்.எல்.ஏ. தயாநிதி, அத்திமலைப்பட்டு ஊராட்சி தலைவர் சங்கர், அத்திமலைப்பட்டு கைத்தறி கூட்டுறவு சங்க மேலாளர் கணேசன், இலக்கிய அணி செயலாளர் விண்ண மங்கலம் ரவி, ஆரணி ஒன்றிய செயலாளர் அக்ரா பாளையம் அன்பழகன் உள்பட கிராமமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

மேலும் கோவில் சார்பில் சிவாச்சாரியார்கள் பிரசாதங்கள் வழங்கினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com